10 days born child sale near Erode | பச்சிளம் குழந்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை : 5 பெண்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பச்சிளம் குழந்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை : 5 பெண்கள் கைது

Added : பிப் 17, 2013 | கருத்துகள் (15)
Advertisement
பச்சிளம் குழந்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை : 5 பெண்கள் கைது

ஈரோடு: பிறந்து, 10 நாட்களே ஆன, ஆண் குழந்தையை,40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, 2 லட்சம் ரூபாய்க்கு, விற்க முயன்ற, ஐந்து பெண்கள் உட்பட, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு, கொல்லம்பாளையம் அருகே தாயுமானவசுந்தரம் வீதியை சேர்ந்தவர் பிலிப்ராஜ், 46. இவர், கருங்கல்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே, நேற்று முன்தினம் இரவு, நின்று கொண்டிருந்தார். அதேபகுதியில், கையில் பச்சிளங்குழந்தையுடன், நான்கு பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.

குழந்தை அழுது கொண்டே இருந்ததால், சந்தேகமடைந்த பிலிப்ராஜ், நான்கு பெண்களிடம் விசாரித்த போது, "தங்களிடம், பிறந்து, 10 நாளே ஆன, பச்சிளம் ஆண் குழந்தை இருப்பதாகவும், 2 லட்ச ரூபாய் கொடுத்தால், குழந்தையை கொடுப்பதாகவும்' பேரம் பேசியுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு, பிலிப்ராஜ் தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், அப்பெண்களை பிடித்து விசாரித்தனர்.

புரோக்கர்களாக ., விசாரணையில், அவர்கள், ஈரோடு செட்டிபாளையம் அருகே அண்ணாநகரை சேர்ந்த, வத்சலா, 37, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கொள்ளபாளையத்தார் தோட்டத்தைச் சேர்ந்த,பாக்கியம், 40, தங்கமணி, 48, குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த, தேன்மொழி, 36, என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும், ஏழை பெற்றோரிடம் இருந்து, குழந்தைகளை வாங்கி, குழந்தை இல்லாதோருக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்யும் கும்பல் என, தெரியவந்தது. இவர்களுக்கு, ஈரோடு சூரம்பட்டி சரவணன் மனைவி கல்யாணி, நாமக்கல் மாவட்டம் குமாராபாளையம் அருகே வட்டமலையை சேர்ந்த, சுந்தர்ராஜ், 42, புரோக்கர்களாக செயல்பட்டதும், தெரியவந்தது. குழந்தையை வாங்கி விற்க முயன்ற, ஐந்து பெண்கள் உட்பட, ஆறு பேரை, போலீசார் கைது செய்து, ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து, கருங்கல்பாளையம், இன்ஸ்பெக்டர் ரமேஷ் கூறுகையில், ""சேலம் மாவட்டம், ஓமலூர் புளியம்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி தங்கவேலுக்கு, பிறந்த ஆண் குழந்தையை, 40 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி, சுந்தராஜ், கல்யாணி வாங்கி வந்துள்ளனர்.குழந்தையை விற்க முயன்ற போது, சிக்கி கொண்டனர். தகவல் அடிப்படையில், ஓமலூரில் உள்ள கூலித்தொழிலாளி தங்கவேலிடம், விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
17-பிப்-201317:38:38 IST Report Abuse
g.s,rajan இந்தியாவையே விற்பனை செய்கிறார்கள் ,இதில் குழந்தையை விற்பனை செய்வது என்பது எம்மாத்திரம் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
17-பிப்-201311:48:16 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணம் தான், இப்படி குழந்தை விற்பனை அதிகரிப்பின் காரணம். அரபு நாடுகளில், குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. காரணம், அங்குள்ள ஆரோகியமான மற்றும் சத்துள்ள அசைவ உணவு பழக்கங்கள். சிறு வயது முதலே, அங்கே அசைவம் சாப்பிட்டு ஆரோகியமாக உள்ளார்கள். இங்கே தான், சைவம் மட்டுமே சாப்பிடுவேன் என்று அடம் பிடித்து, வாரிசு இல்லாமல் உள்ளார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Gobinathan Baladhandapani - Madurai,இந்தியா
17-பிப்-201311:29:26 IST Report Abuse
Gobinathan Baladhandapani குழந்தை இல்லாமல் எதனை பேர் கோவில் மற்றும் மருத்துவமனைகளில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் தெரியுமா .. குழந்தை என்பது கடவுள் டகொடுக்கும் பரிசு... அதை வியாபாரத்திற்கு பயன்படுத்துவது வேதனை.. அந்த தாய் எப்படி ஒப்பு கொண்டார் என்பதுதான் வியப்பு.. காசேதான் கடவுளடா என்று ஆகி விட்டது.. புரோக்கர் பக்கம் எந்த தப்பும் இல்லை.. அந்த பெற்றோரை கடுமையாக கண்டிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
17-பிப்-201310:27:58 IST Report Abuse
kumaresan.m " ஒவ்வொரு நாளும் விலை ஏற்றத்தின் தாக்கம் மக்களை இவ்வாறு சிந்திக்க தூண்டி உள்ளது, எதிர்காலம் எப்படி எல்லாம் மாறப்போகிறது??? என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு "
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
17-பிப்-201309:13:09 IST Report Abuse
Ambaiyaar@raja இது போல திருடர்களால் இப்போது உண்மையாவே குழந்தைகளை தத்து எடுப்பவர்களுக்கு எவளவு கஷ்டம் தெரியுமா நான் ஒருவருடன் போய் அந்த கஷ்டத்தை நேரிலே பார்தேன். அவளவு கடுமையான நடைமுறைகள் அதில் இப்போது பின் பற்ற படுகின்றது பான் கார்டு முதல் சொத்து, வீடு, போன்ற பல ஆவணங்கள் கேட்கின்றார்கள் இது எல்லாம் இல்லாவிட்டால் குழந்தை கொடுக்க மாட்டார்களாம் ஆனாலும் சில வருஷம் காத்திருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
17-பிப்-201309:04:29 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் எப்படித்தான் பெற்ற குழந்தையை விற்க பெற்ற தாய்க்கு மனம் வந்ததோ? இந்த கும்பல் குழந்தைகளை கடத்திக்கொண்டு வந்தார்களா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
17-பிப்-201309:02:52 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் இதுபோல பல இடங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது.. ஆனால் வெளியில் தெரிவதில்லை..பணம் படுத்தும் பாடு .. பாசத்தை மறைக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
17-பிப்-201307:51:35 IST Report Abuse
Guru இதிலும் வியாபாரமா? நாடு எங்கே போய்கொண்டு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
17-பிப்-201305:18:10 IST Report Abuse
villupuram jeevithan வளர்ந்த பிறகு தண்டச் சோறு என்று பெயர் எடுக்காமல் இருந்திருக்கும் அக்குழந்தை?
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
17-பிப்-201301:44:14 IST Report Abuse
NavaMayam இறந்த தஞ்சை விவசாயிக்கு அரசு மூன்று லட்சம் என்று விலை வைக்கலாம் , மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விலை வைக்க கூடாதா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை