5 arrested for Child sexual harresment | 13 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம்! 50, 60, 70 வயது காமுகர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

13 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம்! 50, 60, 70 வயது காமுகர்கள் கைது

Updated : பிப் 18, 2013 | Added : பிப் 17, 2013 | கருத்துகள் (72)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கோவை : கோவையில், 13 வயது பள்ளிச் சிறுமியை, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்த, 50, 60, 70 வயது காமுகர்கள் நான்கு பேரும், வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கோவை, ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு, இரு பெண் குழந்தைகள். இவரது மூத்த மகளுக்கு, 13 வயது; 9ம் வகுப்பு படிக்கிறாள். இச்சிறுமியின் தாய், சில ஆண்டுகளுக்குமுன், குடும்பத்திலிருந்து பிரிந்து சென்று விட்டார். இரு குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் தவித்த தந்தை, ராமநாதபுரத்திலுள்ள உறவினர் ஈஸ்வரியின் வீட்டில், அவரது வளர்ப்பில் விட்டிருந்தார்.


கடந்தாண்டில் ஒரு நாள், சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், ஈஸ்வரியின் கணவர் கோபாலகிருஷ்ணன், 60, சிறுமியை, அருகிலுள்ள ஓய்வு பெற்ற, அரசு மருத்துவமனை, "கம்பவுண்டர்' பாலு, 70, என்பவரது வீட்டிற்கு, "சிகிச்சைக்காக' அழைத்து சென்றுள்ளார்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் : "ஊசி போட்டால் வலி குறையும்' என்று கூறிய பாலு, சிறுமிக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். மயக்க நிலைக்கு சென்றதும், கோபாலகிருஷ்ணனும், பாலுவும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது, நடந்ததை அறிந்து கதறி அழுதுள்ளார். "சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம்' என்று, மிரட்டியுள்ளனர். பயந்துபோன சிறுமி, வெளியில் சொல்லவில்லை. கோபாலகிருஷ்ணன், சில நாட்கள் கழித்து, பொள்ளாச்சியில் உள்ள உறவினர் கருப்புசாமி, 50, என்பவரின் தோட்டத்து வீட்டிற்கு, சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு, கோபாலகிருஷ்ணனும், கருப்புசாமியும் சேர்ந்து, சிறுமியை நாசப்படுத்தி உள்ளனர். தோட்டத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளனர்.


மரண வேதனையில் சிறுமி :


கோவைக்கு திரும்பி வந்தபின், ஒலம்பஸ் பகுதியில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்திருக்கும், "ராகம்' கருப்புசாமி, 50, என்பவரின், சுந்தராபுரம் வீட்டிற்கு, சமையல் காஸ் சிலிண்டர் எடுப்பதாக கூறி, சிறுமியை கோபாலகிருஷ்ணன் அழைத்து சென்றுள்ளார். அங்கு "ராகம்' கருப்புசாமியும், அவரும் சேர்ந்து, சிறுமியை நாசம் செய்தனர். இவ்வாறாக, கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்புசாமி, ராகம் கருப்புசாமி நான்கு பேரும், கடந்த ஓராண்டாக சிறுமியை பலமுறை நாசப்படுத்தியுள்ளனர். மரண வேதனையில் இருந்த சிறுமி, ஒருநாள் பஸ்சில் சென்றபோது, தனம் கார்த்திக் 19, என்ற வாலிபர், ஆறுதலாக பேசியுள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, காதலானது. "வெளியூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம்' என்று சிறுமியிடம், தனம் கார்த்திக் கூறியுள்ளான். அவனுடன் சென்று விட்டால், "காமக்கொடூரர்'களின் பிடியில் இருந்து தப்பி விடலாம் என்று நினைத்து, சம்மதித்துள்ளாள்.


கடந்த வாரம், இருவரும் சத்தியமங்கலம் சென்று லாட்ஜில் தங்கியுள்ளனர். தனிமையில் தங்கியிருந்தபோது, தனம் கார்த்திக்கும் அவளை விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், "பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை' என்று, கோவை, ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறுமி, ஈரோட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், உறவினர்கள் அங்கு சென்று மீட்டனர். அவர்களின் துன்புறுத்தல், மீண்டும் தொடர்ந்ததால், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறுமி புகார் அளித்தார்.


ராமநாதபுரம் போலீசார் விசாரித்து, சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில், உறவினர் கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்புசாமி, ராகம் கருப்புசாமி, தனம் கார்த்திக் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கு, கோவை மாநகர கிழக்கு பெண் போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடக்கிறது. இன்ஸ்பெக்டர் முனீராபேகம் கூறுகையில், ""கடந்த ஓராண்டாக சிறுமியை ஒவ்வொரு இடத்திற்கும், ஏதாவது காரணம் சொல்லி அழைத்து சென்று சீரழித்துள்ளனர். கற்பழிப்பு, கூட்டு சேர்ந்து கற்பழிப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு பிரிவில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டியுள்ளதால், குற்றவாளிகளின் முக அடையாளத்தை, வெளியிட இயலாது,'' என்றார்.கோவை போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சுந்தரமூர்த்தி கூறுகையில், ""பலர் சேர்ந்து சிறுமியை கற்பழித்தாக புகார் வந்தது. துரித விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டது. சட்டம் - ஒழுங்கு துணை கமஷனர் (பொறுப்பு) பிரவேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது,'' என்றார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
john soosai - lyon,பிரான்ஸ்
19-பிப்-201317:29:59 IST Report Abuse
john soosai இவர்களை தண்டிப்பது முக்கியம் ஆனால் அதோடு இந்த மாதிரி குற்றங்கள் நின்று விடாது. பெண்களை மதிக்க தமிழனுக்கு கற்று தரவேண்டும். பெண்களை போக பொருளாக காட்டும் சினிமாக்களை வெறுக்க வேண்டும். பெண்ணும் தன்னைப்போல ஒரு சம ஜீவன் என்று எல்லோரும் உணர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ganesh Selva - Chennai,இந்தியா
19-பிப்-201315:31:51 IST Report Abuse
Ganesh Selva இந்த காம வெறியர்களை தலைகீழாக தொங்கவிட்டு கல்லால் அடித்து கொள்ள வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
19-பிப்-201304:52:56 IST Report Abuse
Sivakumar Manikandan இவர்களது பிறப்புறுப்பை முழுமையா அறுத்து விடவேண்டும் ............
Rate this:
Share this comment
Cancel
krishnamurthy venkatesan - Chennai,இந்தியா
17-பிப்-201320:46:34 IST Report Abuse
krishnamurthy venkatesan மாறு கால் மாறு கை வெட்டிவிட்டு நடுத்தெருவில் பிச்சை எடுக்க வைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
17-பிப்-201320:45:43 IST Report Abuse
GUNAVENDHAN இங்கு கருத்து சொல்லியுள்ள பலரும் அந்த கயவகளை தூக்கில் போட வேண்டும், உடனே சாக அடிக்க வேண்டும் , கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்லியுள்ளார்கள். இந்த காம கொடூரங்களை கொல்வது சரியில்லை என்பது தான் என் நிலைப்பாடு, அதற்க்கு காரணம் இவ்வளவு பெரிய, அநியாயமான குற்றத்தை செய்தவர்களை சாக அடிக்க வேண்டும் என்பது ஒருவகையில் கோபத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், சாக அடித்தால் ஒரு நொடியில் அவர்கள் உயிர் போய்விடும். அதைவிட அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருந்து, அவர்கள் எவ்வளவு கேவலமாக நடந்தார்கள், ஒரு 13 வயது உறவு பெண்ணை கொஞ்சமும் மனிதாபிமானமில்லாமல் சீரழித்தார்கள் என்பதையெல்லாம் நினைத்து நினைத்து கதற வேண்டும். ஆயுள் தண்டனை என்று கொடுத்து , 14 ஆண்டுகளில் வெளியே வருகின்ற படி விட்டுவிடாமல், ஆயுள் முழுக்க சிறையிலேயே இருக்கும் விதமாக தண்டனையை கடுமையாக கொடுக்க வேண்டும். அவர்கள் அனைவருமே சிறையிலேயே மனம் நொந்து, வருந்தி சாக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
17-பிப்-201319:29:14 IST Report Abuse
LAX ஒழுக்கம் கெட்ட மனிதர்கள்? வாழும் இக்கலிகாலத்தில் மனிதனுக்கு இரண்டே தேவைதான் பிரதானமாய் இருக்கிறது. ஒன்று பணம் இன்னொன்று செக்ஸ் (பிணமாக இருந்தாலும் அனுபவிக்க இவர்கள் தயார்). மிஞ்சிப்போனால் இவர்களின் இந்த போதை, கொலை செய்வதற்கும் அஞ்சாத வஞ்சகர்களாகவும் மாற்றிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
S T Rajan - Ettayapuram ,இந்தியா
17-பிப்-201319:11:05 IST Report Abuse
S  T Rajan இந்த நாய்களை தூக்கில் போடவேண்டும், அதுவும் உடனடியாக , இந்த தண்டனை முன்மாதிரியாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு பயம் வரவேண்டும். எந்த அரசனை கண்டு குற்றவாளிகள் அஞ்சுகிறார்களோ அந்த அரசுதான் நல்ல அரசு....இப்போதைய காலத்தை விட அரசர்களின் காலம் நன்றாக இருக்கும் போல. படித்த முட்டாள்கள் , பேராசை பிடித்தவர்களின் காலத்தில் வாழ்கிறோம்......
Rate this:
Share this comment
Cancel
Dharmendra Muthu - Toronto,கனடா
17-பிப்-201318:13:39 IST Report Abuse
Dharmendra Muthu இது போல நடக்கும் குற்றத்திற்கு முதல் காரணம் பெற்றோர்களே பாவம் அந்த சிறுமிக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் போனதே இவ்வளவு தூரம் நடந்திருக்கிறது. ஐயா பெரியவர்ஹளே உங்கள் வீட்டில் வேலை செய்யும் சிறுமியை எத்தினை பேர் சரியான கண்ணோட்டத்தில் பாக்கிறீங்க? கமல் ஒரு படத்தில் சொன்ன மாதிரி எல்லாத்தையும் நிறுத்தனும். அப்போ தான் நம் சமுதாயம் உண்மையான வழர்ச்சி பெரும். வாழ்க தாயகம்
Rate this:
Share this comment
Cancel
R.Manohar - Trichy,இந்தியா
17-பிப்-201318:00:44 IST Report Abuse
R.Manohar ஐயா மரண தண்டணை கூடாது என்று கூப்பாடு போட்டு ஷோ காட்டும் கணவான்களே, இந்த கெழவன்களுக்கு பாரதரத்னா கொடுத்துவிடுவோமா.
Rate this:
Share this comment
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
17-பிப்-201323:27:05 IST Report Abuse
K.Sugavanamகொடுத்தாலும் கொடுப்பார்கள்,மனித உரிமை ஆயிற்றே.....
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
17-பிப்-201316:57:50 IST Report Abuse
S.M.Noohu எங்கெங்கு இம்மாதிரியான குற்றங்கள் நடக்கிறதோ ... அங்கெல்லாம் அங்குள்ள மக்கள் போலீசாரிடம் ஒப்படைக்கும் முன்பே , பிகார் ஸ்டைலில் கயவர்களை கவனித்து விடவேண்டும். ஒருத்தன் கவனிச்சால் தான் பிரச்சனை , ஊரே கவனிச்சால் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை