2G scam: CBI probe abroad moving at snail’s pace, says JPC | "2ஜி' விசாரணை வெளிநாட்டில் நத்தை வேகம் : பார்லி., குழு உறுப்பினர்கள் வேதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

"2ஜி' விசாரணை வெளிநாட்டில் நத்தை வேகம் : பார்லி., குழு உறுப்பினர்கள் வேதனை

Updated : பிப் 17, 2013 | Added : பிப் 17, 2013 | கருத்துகள் (7)
Advertisement
2ஜி விவகாரம்: சி.பி.ஐ.,  மீது ஜே.பி.சி., அதிருப்தி !,2G scam: CBI probe abroad moving at snail’s pace, says JPC

புதுடில்லி :"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., வெளிநாட்டில் மேற்கொள்ளும் விசாரணை, மிகவும் மெதுவாக நடப்பதற்கு, பார்லிமென்ட் கூட்டுக் குழு உறுப்பினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், நடந்த முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இது தவிர, பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரணை நடத்துகிறது. இதன் தலைவராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.சி.சாக்கோ உள்ளார். பார்லிமென்டின் பட்ஜெட் தொடருக்குள், இந்த குழு, அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது.கடைசியாக, சி.பி.ஐ., இயக்குனர் மற்றும் தொலை தொடர்புத் துறை இயக்குனர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களில், சில வெளிநாடுகளிலும் உள்ளன. அதே போல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் பயன் அடைந்தவர்கள் அதற்கு பிரதிபலனாக, வெளிநாடுகளில் இருந்து, இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளனர்.இது குறித்தும், விசாரணையை சி.பி.ஐ., நடத்த வேண்டியுள்ளது. தற்போது, இந்தியாவில் கிட்டத்தட்ட விசாரணை முடிந்து விட்டது. வெளிநாட்டில் நடத்தப்பட வேண்டிய விசாரணை தான் பாக்கியுள்ளது.இந்நிலையில், கடந்த வாரம், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்த, சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்காவிடம், குழு உறுப்பினர்கள், வெளிநாட்டில் மேற்கொள்ள வேண்டிய விசாரணை பற்றி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ரஞ்சித் சின்கா கூறியதாவது:
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, பல்வேறு நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள், பணம் குறித்து, விவரம் கேட்டு, பல்வேறு நாடுகளுக்கு கோர்ட் மூலம் சட்ட முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களுக்கு, வந்த நிதி குறித்து கேள்வி எழுப்பியிருந்தோம். இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கும், வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள், எந்தெந்த வழிகளில் பணம் வந்தது குறித்து தகவல்களை தரும்படி, கேட்டு இருந்தோம். அந்த வகையில், 2012ம் ஆண்டு, ஏப்ரல், 11ம் தேதி, மலேசியா, இங்கிலாந்து, மொரீஷியஸ், பெர்முடா ஆகிய நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், இதற்கு இன்டர்போல் உதவியும் கோரப்பட்டுள்ளது. மேற்கண்ட நாடுகளில் இருந்து பதில் பெற்றதும், ஒருங்கிணைந்த விசாரணை நடத்தப் படும். நாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு, மொரீஷியஸ் மற்றும் இங்கிலாந்தில் இருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதற்கு, பதில் அனுப்பப்பட்டு உள்ளது.இதன் காரணமாக, இந்தியாவில் விசாரணை முடிந்துவிட்ட நிலையிலும், வெளிநாட்டில் மட்டும் விசாரணை நிலுவையில் உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இதற்கு உறுப்பினர்கள், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் விசாரணை மெதுவாக நடந்து வருவதற்கு, தங்கள் மன வேதனையை தெரிவித்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
18-பிப்-201308:33:18 IST Report Abuse
villupuram jeevithan இப்படியெல்லாம் சொல்லி நத்தையின் வேகத்தை கேவலப்படுத்த வேண்டாமே?
Rate this:
Share this comment
Cancel
IndianTamil - Hatfiled,யுனைடெட் கிங்டம்
18-பிப்-201305:58:11 IST Report Abuse
IndianTamil இந்தியாவில் எந்த அரசியல் வாதியும் சட்டத்தால் தன்ன்டிக்கப் பட முடியாது.. பெங்களூரிலும் ஒரு கேஸ் 16 வருடமாக வாய்தா வாங்கப்பட்டு சட்டம் குழிதோண்டி புதைக்கப்படுகிறதே
Rate this:
Share this comment
K.RAMAN. - chennai,இந்தியா
21-பிப்-201314:31:21 IST Report Abuse
K.RAMAN.ஆளும் வளரனும் அறிவும் வளரனும்.இந்து ரெண்டும் ஒன்றாக இருக்கவேண்டும்.ஆனால் உங்களுக்கோ முதல் பாதி மட்டும்தான் செயல்பட்டுள்ளது.மேலும் எண்ணங்கள் விரியவேண்டும்.உமக்கது எதிர்மரையாகுள்ளது.பெங்களுருவில் வழக்கு 16 ஆண்டுகளாக வாய்தா வாங்கப்பட்டே வருவதாக உலரியுல்லீர்களே அந்த வழக்கை அங்கெ மாற்றி கொண்டு சென்றது யார் என்று உங்களுக்கு தெரியுமா.அல்லது அதனுடம் இணைக்கப்பட்ட லண்டன் ஹோட்டல் விவக்காரத்தை வழக்கிலே சேர்த்த கருனானிதீஇன் அரசே எங்களால் நிரூபணம் செய்யமுடியவில்லை என்று எடுத்த வாந்தியை வழித்து விழுங்கியது தெரியுமா.சர்க்காரியா வழக்கை வாபஸ் வாங்க 117 உனக்கு 117 எனக்கு என்று கட்சியை அடமானம் வைத்தாவது தனது கழுத்தை காத்துக்கொள்ள தயாரான ஒருவரின் அடிவருடிக்கு உண்மைகள் தெரியாதது வியப்பில்லை.உங்களது தலைவனின் வெள்ளை அறிக்கையை எனக்கு சொல்லிவிட்டு போடப்பட்ட வழக்கு பொய் வழக்கனாலும் அதை சந்தித்து வரும் நேர்மையை புரிந்துகொள்ளும் அறிவை தயவுசெய்து வளர்த்துகொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
vaithilingam - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-பிப்-201300:17:00 IST Report Abuse
vaithilingam அரசியல்வாதிகள் தப்பித்து கொள்ளவும் ஆதாரங்களை அழிக்கவும் கொடுக்கப்படும் கால அளவுதான் விசாரணை .
Rate this:
Share this comment
Cancel
Sairam Sairam - muscat,ஓமன்
17-பிப்-201322:09:05 IST Report Abuse
Sairam Sairam ஆமா அப்டியே ஒழுங்க கேசு நடந்துட்டலும் எல்லர்ரும் புடிச்சு உள்ள போட்டுர்வீங்க... ஹலோ... டீ இன்னும் வரல...
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-பிப்-201322:01:27 IST Report Abuse
g.s,rajan இங்க மட்டும் என்ன கிழிச்சுதாம். இன்னும் மோசம் .
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
17-பிப்-201321:13:22 IST Report Abuse
Baskaran Kasimani பிரச்சினை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் CBI கண்டிப்பாக விசாரணை செய்யாது என்று நம்பலாம். எங்கு விசை இருக்கிறதோ அங்கு காங்கிரஸ் கண்டிப்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும். உதாரணத்துக்கு CBI அதிகாரிகள் வெளிநாட்டுக்கு விசாரணைக்கு செல்ல ஏகப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நிறைய விதிமுறைகள் பின்பற்றப்பட முடியாதவைகளாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை