People angry over sexual harrasment for 13years old girl | "தூக்கில் போடு...!' மக்கள் ஆவேசம்;"விடாது கருப்பு...!' தந்தை கதறல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"தூக்கில் போடு...!' மக்கள் ஆவேசம்;"விடாது கருப்பு...!' தந்தை கதறல்

Added : பிப் 17, 2013 | கருத்துகள் (71)
Advertisement

கோவையில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேர் கும்பல் மீது கடும்நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, ராமநாதபுரம் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் நேற்று குதித்தனர். பாலியல் வழக்கில் கைதான கும்பலைச் சேர்ந்த ஆசாமியின் வீடு கல்வீசி தாக்கப்பட்டது.

கோவை, ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு இரு மகள்கள். மூத்த மகளுக்கு 13 வயது, ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். இச்சிறுமி, ஆறு மாத கைக்குழந்தையாக இருந்தபோதே, இவரது தாயார், இளைய மகளுடன் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றுவிட்டார்.மூத்தமகளை வளர்க்க முடியாமல் தவித்த தந்தை, ராமநாதபுரத்திலுள்ள உறவினர் ஈஸ்வரியின் வீட்டில், அவரது வளர்ப்பில் விட்டிருந்தார். கடந்தாண்டில், சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், ஈஸ்வரியின் கணவர் கோபாலகிருஷ்ணன், 60, சிறுமியை, அருகிலுள்ள, ஓய்வு பெற்ற மருத்துவ ஊழியர் "கம்பவுண்டர்' பாலு, 70, வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.மயக்க ஊசி போட்டு பாலுவும், கோபாலகிருஷ்ணனும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். "நடந்ததை வெளியில் சொன்னால் கொன்று விடுவோம்' எனவும் மிரட்டியுள்ளனர். அதன்பின், கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சியில் உள்ள உறவினர் கருப்புசாமி, 50, என்பவரின் தோட்டத்துக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு, கோபாலகிருஷ்ணனும், கருப்புசாமியும் சிறுமியை நாசப்படுத்தினர். பாலியல் துன்புறுத்தல் அத்துடன் நிற்கவில்லை. கோவை, ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த "ராகம்' கருப்புசாமி, 50, என்பவரும், மானபங்கம் செய்தார். ஓராண்டாக, கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்புசாமி, ராகம் கருப்புசாமி நான்கு பேரும், சிறுமியை நாசப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியுடன் அறிமுகமான தனம் கார்த்திக் 19, என்ற வாலிபர், "உன்னை காதலிக்கிறேன்; பிரச்னையில் இருந்து விடுவிக்கிறேன்' எனக்கூறி, அவனும் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றினான்.பாலியல் வக்கிரம் தொடர்ந்ததால், விரக்தியடைந்த சிறுமி, கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். ராமநாதபுரம் விசாரித்து, கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்புசாமி, ராகம் கருப்புசாமி, தனம் கார்த்திக் ஆகியோரை கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர். பின்னர் இவ்வழக்கு, மாநகர கிழக்குப்பகுதி பெண் போலீசுக்கு மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் முனீராபேகம் விசாரிக்கிறார்.


பொதுமக்கள் ஆவேசம்:

காமுகர்களின் கொடூரச் செயலால் கொதித்தெழுந்த ராமநாதபுரம் பகுதி மக்கள், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினரும், பொதுமக்களும் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க., எம்.எல்.ஏ., துரைசாமி, முன்னாள் தி.மு.க., கவுன்சிலர் உதயகுமார், கவுன்சிலர் ராஜன், சக்திவேல், லீலா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பொதுமக்களை சமாதானம் செய்தனர். கடும் ஆத்திரத்தில் இருந்த பெண்கள், சிறுமியை நாசம் செய்தவர்களை தூக்கில் போடுமாறு கோஷமிட்டனர். ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராம் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களை விரட்டினர். ஆவேசம் அடங்காத இளைஞர்கள் அங்கிருந்து சென்று, பாலியல் வழக்கில் சிறையிலுள்ள "ராகம்' கருப்பசாமியின் மாடி வீட்டின் மீது கல்வீசி தாக்கினர். இதில், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீசார், நிலைமையை கட்டுப்படுத்தினர். கோவையில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடூரம், அனைத்து தரப்பு மக்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், போலீசார் உஷாராகி, பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


"டேய்! காமப்பேய்ங்களா... உங்கள விடாது, கருப்பு!' :

""என் மகள், டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டுச்சு. அவளை நாசம் செஞ்ச அந்த காமப்பேய்களை, நான் கும்பிடுற சாமி சும்மா விடாது,'' என, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கதறினார். பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியின் ஏழைத்தந்தை, ஓடு வேய்ந்த சிறிய பழைய வீட்டில், கூரையை வெறித்துப்பார்த்தபடி, கண்ணீருடன் படுத்துக்கிடக்கிறார். இவர், கடந்த பல மாதங்களாக நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் படுக்கையில் உள்ளார். மனைவி பிரிந்து சென்று விட்டதால், தனது 89 வயது தாயாருடன் வசித்து வருகிறார் இவர். மகளுக்கு நேர்ந்த கொடுமையால், சில நாட்களாக சரிவர சாப்பிடாமல் விரக்தியுடன் உள்ளார். மகள் குறித்த பேச்சை எடுத்ததுமே, விம்மி விம்மி அழுதார்.அவர் கூறுகையில், "ஆறு மாச கைக்குழந்தையில இருந்து எங்கிட்டதான் வளர்ந்து வந்துச்சு. கேட்கும் போதெல்லாம், "நல்லா படிக்கிறேன் அப்பா' ன்னு சொல்லும். டாக்டராகணும்னு அதுக்கு ஆசை. ஆனா, பாழாப்போன பயலுக எம்மகள நாசமாக்கிட்டாங்க. "நான் கும்புடுற கருப்பு(சாமி) உண்மையாக இருந்தா, டேய்... காமப்பேய்ங்களா உங்கள சும்மா விடாது' என, கதறினார். மனைவி குறித்து கேட்டதும் ஆவேசமடைகிறார். "என் அம்மாவை அடிச்சா... பதிலுக்கு நான் ரெண்டு போடு போட்டேன்; போயிட்டா...' என்றவாறு, பழைய நினைவுகள் வதைக்க கதறி அழுதார்.


அய்யோ பாவம்! பேத்தி வயசுல...

கோவையில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் குறித்து, ராமநாதபுரம் பகுதி பெண்களின் கருத்து:

ஷோமினி:அய்யோ பாவம்! பேத்தி வயசுல இருக்கும் குழந்தையை பாழ்படுத்தியவர்களை, சும்மா விடக்கூடாது; கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.

ஸ்ரீதேவி:பாலியல் குற்றவாளிகள் ஐந்து பேரையும் தூக்குல போட்டா, உடனே உயிர் போயிடும். அவங்கள ஜனங்ககிட்ட ஒப்படைக்கணும்; ஜனங்களே அவங்களுக்கு தண்டனையும் தரணும். இல்லாவிட்டால், நாளைக்கு பெண் பிள்ளைங்க, தைரியமா ரோட்டுல நடக்கமுடியாது.

பேச்சியம்மாள்:இவனுங்கள எல்லாம் தூக்குல போடணும். அப்பதான் இந்தமாதிரி தப்பு பண்ண எவனுக்கும் தோணாது.

சுதாஷினி:பெண் பிள்ளைகளை நாசம் செய்பவர்களை, தமிழக அரசு சும்மா விடக்கூடாது. ஜாமினில் விட்டால், மக்களோட கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

கவிதா:நாட்டில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க "டிவி' சினிமாவே காரணம். முதியவர் போர்வையில் சுற்றித்திரியும் காமக்கொடூரர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகராஜ்:காமுகர்களை வெளியில் விட்டால், மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவோம்.

செல்லதுரை:பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தைகளை யார் கண்காணிப்பிலும் நம்பி விட்டு செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது, மிகவும் அச்சமாக உள்ளது.


"மனதில் தீராத வடு':

கோவையில் செயல்படும் "அறம்' அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா கூறியதாவது:பாலியல் குற்றங்கள் பெருகிவரும் தற்போதைய சூழலில், பெண்கள் தனியாக வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல. கண்டிப்பாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அதுகுறித்து பெற்றோர், உடன்பிறந்தவர்களிடம் தெரிவிப்பது நல்லது. உடை விஷயத்தில் நாகரிகத்தை கடைபிடிக்கவேண்டும். தங்களது உடை, ஆண்களுக்கு வக்கிர எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்ககூடாது. இரவு நேரத்தில், வெளியே உலாவுவதை தவிர்க்க வேண்டும். பெற்ற தந்தை, உறவினர்கள் கூட, இத்தகைய செயல்களில் ஈடுபடுவது, மிகவும் கண்டிக்கத்தக்கது. பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள், குடும்ப கவுரவத்துக்காக, உண்மையை மறைக்க கூடாது. தற்போது, சந்தர்ப்ப சூழலில் நடக்கும் பாலியல் குற்றங்களை விட, திட்டமிட்டு நடப்பதே அதிகமாக உள்ளது. குழந்தைகளை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவதால், அவர்களின் மனதில் தீராத வடு ஏற்படுகிறது. இவ்வாறு, லதா கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugesan sivakami raju - tirupur - tirupur,இந்தியா
18-பிப்-201314:46:39 IST Report Abuse
murugesan sivakami raju - tirupur நல்லா எல்லாரும் பார்த்துக்கிட்டே இருங்கள் குற்றவாளிக்கு தண்டனை கொடுத்த பிறகு அந்த மனித உரிமைகள் கமிசன் ஆர்வலர்கள் வந்து தலைசுத்த வைப்பாங்க பாருங்க இது தான் ஜனநாயக நாடு
Rate this:
Share this comment
Cancel
murugesan sivakami raju - tirupur - tirupur,இந்தியா
18-பிப்-201314:45:34 IST Report Abuse
murugesan sivakami raju - tirupur நல்லா எல்லாரும் பார்த்துக்கிட்டே இருங்கள் குற்றவாளிக்கு தண்டனை கொடுத்த பிறகு மனித உரிமைகள் கமிசன் ஆர்வலர்கள் வந்து தலைசுத்த வைப்பாங்க பாருங்க இது தான் ஜனநாயக நாடு
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
18-பிப்-201314:43:16 IST Report Abuse
Bava Husain இப்படிப்பட்டவர்கள்.... தன் பிள்ளைகளையே, இதுபோல ...............தயங்க மாட்டார்கள்..... சாகப்போகும் வயதிலேயே இப்படி என்றால், வாலிப முறுக்கில் என்னென்ன செய்திருப்பார்கள்?.... சமூகத்தை செல்லரிக்கும் இதுபோன்ற காம கொடூரர்கள், வீட்டிற்கும், நாட்டிற்கும் தேவைதானா?.... நீதித்துறை சிந்திக்கட்டும்....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-பிப்-201314:42:41 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ ஆதிவாசிகள் வசிக்கும் இடத்தில் உடனே மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமாம்.. பெண் இயக்கங்களின் விளம்பர மோகமாம்.. வெளம்கும்டா சாமி... திருச்சியில் டாக்டர் பெண்மணி ஒருத்தர் குற்றச்சாட்டை சொல்லி கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆகப் போகுது.. அல்லக்கை எக்ஸ் மினிஸ்டர் பரஞ்சோதி மேல் இன்னும் ஒன்றும் பதியவில்லை.. இது தான் போலீஸ் துறையின் (அவ)லட்சணம்..... //// >>>>>>> \\\\ ஆதிவாசிகள் வசிக்கும் இடத்தில் உடனே மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமாம் //// வசிக்கும் இடத்தில் என்றா நான் எழுதியுள்ளேன்? மூளை இருந்தா கொஞ்சம் யோசியுமேன்? "மம்மி ... மம்மி " என்று programmed device போலப் புலம்பத்தானா மூளையும் .... வாயும் ..... கற்பழிப்பு என்றால் மருத்துவப் பரிசோதனை எங்கே செய்வார்கள் .... ????
Rate this:
Share this comment
Cancel
Jawahar - Erode,இந்தியா
18-பிப்-201314:37:55 IST Report Abuse
Jawahar அத கட் பண்ணிடுங்க. இனிமேல் அதை பத்தி யாரும் நினைக்க மாட்டானுக
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
18-பிப்-201314:24:06 IST Report Abuse
சகுனி பேசாம 'அதை' அறுத்துடுங்க .......
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
18-பிப்-201314:21:21 IST Report Abuse
Sundeli Siththar இவனுங்களை தூக்கில் போடவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-பிப்-201314:15:45 IST Report Abuse
Nallavan Nallavan தூக்கு ஒன்றே சரியான தண்டனை .... இவர்கள் தான் செய்தார்கள் என்று விசாரணையில் தெரிந்து விட்டால் .... அடுத்த வேளை ஓசிச் சோறு கூட கிடைக்காம தூக்குல போட்டுப்பாருங்க .... பெண்களைப் பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் ....
Rate this:
Share this comment
Cancel
vasan - doha,கத்தார்
18-பிப்-201313:39:00 IST Report Abuse
vasan இவர்கள் தலையை நாடு ரோட்டில் வைத்து வெட்ட வேண்டும்.......................
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
18-பிப்-201313:28:09 IST Report Abuse
PRAKASH இந்த கற்கள் அவர்கள் மீது அடிக்க வேண்டும் . ஒன்றும் அறியாத அவர்கள் வீட்டின் மீதோ அல்லது அவர்கள் குடும்பத்தினர் மீதோ அல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை