மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து, அடுத்த மாத இறுதியில், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இதையடுத்து, துறை வாரியாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவற்றின் நிலை மற்றும் அடுத்த பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் துறை வாரியாக ஆலோசனைகள் துவங்கியுள்ளன.
மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட், இம்மாதம், 28ம் தேதியும், தொடர்ந்து, அடுத்த மாத துவக்கத்தில், பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் பட்ஜெட்டும், அடுத்த இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன.தமிழக அரசின் சட்டசபையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து, அடுத்ததாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்காக, சட்டசபை கூட உள்ளது. கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கியமான அறிவிப்புகளில் பெரும்பாலானவற்றிற்கு, நிதியும் ஒதுக்கப்பட்டு, பணிகளும் துவக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சீரமைக்க வேண்டிய முயற்சிகள் குறித்து, முதல்வர் தலைமையில் அவ்வபோது கூடி, அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன.தற்போது பட்ஜெட்டை நோக்கிய, ஆய்வில் முதல்வர் ஜெயலலிதாவும், அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளனர். முக்கியமாக தமிழக மக்களை வாட்டி வரும், அரிசி விலை உயர்வு குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியுள்ளார்.
மின்சாரத் துறையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஆய்வு நிலையில் இருக்கும் மின் திட்டங்கள், அடுத்து வர உள்ள செய்யூர், உடன்குடி, எண்ணூர் விரிவாக்க மின் திட்டங்கள் தவிர்த்து, எதிர்காலத் தேவைக்கு வேறு திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை.விரைவில், லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், மின் திட்டங்களை புதிதாக அறிவித்து, தொடர்ந்து, மிகை மின் மாநிலமாக தமிழகத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பணிகள் எந்த அளவில் முடுக்கிவிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் தெரிவிக்க வேண்டியிருக்கும். லோக்சபா தேர்தல் விரைவில் வருவதால், எல்லா கட்சிகளும் இந்த அறிவிப்புகளை உற்று நோக்கும்.
இது தவிர, தொடர்ந்து உயர்ந்து வரும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிகிறது. கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களை பாதுகாக்கும் வகையில், புதிய நடைமுறைகளும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழக அரசு அறிவித்த சூரிய மின் திட்டங்கள் என்ன நிலைமையில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா. 1000 MV தமிழக அரசு அறிவிப்பு வந்தது அதற்க்கு 600 MV தான் டெண்டர் வந்துள்ளது அதில் எத்தனை MV செயல்பாட்டுக்கு வரும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். காரணம் தமிழக அரசின் TANGEDCO இதுவரை காத்தாடி மின் உற்பத்தியாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்கவில்லை இதனால் தனியார் சூரிய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன்கொடுக்க முன்வரவில்லை. நிலைமை இப்படி இருக்க அரசு எப்படி மின் தடையை சரிசெய்யபோகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். அரிசி விவாகரத்துக்கு வருவோம் தமிழக சட்டசபையில் அமைச்சர் பொன்னி அரிசி கிலோ 25 ரூபாய்க்கு அரசு உணவு கழகங்களால் விற்க்கபடுகிறது என்கிறார் ஆனால் அவர் கூரிய உணவு கழகங்கள் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை, அப்படியே உணவு கழகங்களுக்கு சென்று விசாரித்தாலும் பொன்னி அரிசி விர்க்கபடவில்லை என்கிறார்கள் இதுபோல சட்டசபையில் பொய் சொல்லி கொண்டிருந்தாள் வரும் தேர்தலில் 40/40 என்ற அதிமுகவின் கனவு பகல் கனவாகத்தான் இருக்கும்....
நிச்சயமாக.......பேப்பர்ல எழுதி வாசிச்சா போச்சி. இப்ப என்ன திமுக ஆட்சியா நடக்குது, சொன்னதை செய்வதுடன் சொல்லாததையும் செய்து கொடுக்க வேண்டும் என்று கவலை படுவதற்கு? இவங்க சொன்னதை ஞாபகமூட்டுவதற்கு யாருக்காவது தைரியமிருக்குதா....ரெடியா காத்துக்கிட்டிருக்கு அவதூறு வழக்குன்னு தெரிஞ்சா ராம் ஜெத்மலானி கூட வாய தொறக்க மாட்டாரு. இதுல "எல்லா கட்சிகளும் இந்த அறிவிப்புகளை உற்று நோக்கும்." சிறப்பு நிருபரின் காமெடி இது. இதுக்கும் முகவும் வி காவும் தான் வாய திறந்து வழக்கு நம்பரை கூட்டி கொள்ள வேண்டி இருக்கும். .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.