சென்னை :"திருவாரூரில் உள்ள, உ.வே.சா.,வின் நினைவு இல்லம், முறையான பராமரிப்பின்றி, பூட்டியே கிடக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:நாளை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின், 159வது பிறந்த தின விழா. அவர், மட்டும் தொடர்ந்து முயற்சி செய்யாமல் இருந்திருந்தால், சங்க இலக்கியங்கள் நமக்கு கிடைத்திருக்காது. தி.மு.க., ஆட்சியில் திருவான்மியூரில் அமைக்கப்பட்ட, உ.வே.சா.,வின் சிலைக்காக, தமிழக அரசின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. உ.வே.சா., தபால் தலையை நானே வெளியிட்டேன்.தி.மு.க., ஆட்சியில், உ.வே.சா.,வின் நினைவு இல்லப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அந்த உண்மை தெரியாமல், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, ஜெயலலிதா அப்போது உத்தரவிட்டார்.அ.தி.மு.க., ஆட்சியில், திருவாரூர் மாவட்டம், உத்தமதானபுரத்தில் உள்ள, உ.வே.சா.,வின் நினைவு இல்லம் முறையான பராமரிப்பின்றி, பூட்டியே கிடக்கிறது.அந்த இல்லத்தைப் பராமரிக்க, ஒரு ஊழியர் கூட இல்லாத நிலையில் உள்ளது. இந்த இல்லத்தைப் பராமரிப்பதற்காக இருந்த ஊழியர், பதவி உயர்வு பெற்று, ஓசூர் சென்றதில் இருந்து, அந்த இல்லம் பூட்டியே கிடக்கிறது.
அந்த இல்லத்திற்குப் பக்கத்திலே உள்ளவர்களிடம் பேசும்போது, "உ.வே.சா., வாழ்ந்த வீடு, தி.மு.க., ஆட்சியில் திறக்கப்பட்டது என்பதால் பராமரிப்பின்றி கிடக்கிறது. வெளியூர்களில் இருந்து வரும் மாணவ, மாணவியரும், இலக்கிய ஆர்வலர்களும், தமிழ் ஆராய்ச்சியாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்' எனத் தெரிவிக்கின்றனர்.இனியாவது, உ.வே.சா., நினைவு இல்லம் மூடிக்கிடக்கிற நிலையைப் போக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜெயலலிதாவே இந்த காரியத்தை கொஞ்சம் முன்பே செய்திருந்தால் , அப்போது அய்யா என்ன சொல்லுவார் ? பார்பனர்கள் இடம் என்றால் ஓடி ஓடி மக்களின் வரி பணத்தை வீணடிக்கிறார்கள். இது தான் ஆரிய புத்தி என்பது., திராவிட தலைவர்களையும் இனமான சிங்கங்களையும் ஏன் மறந்தார்கள் என்பது இப்போது புரிகிறதா ? தம்பி நாம் அரசு கட்டிலில் அமரும் நாளே தமிழனின் திருநாளாகும். ஆடி ஓடி பாடு படு எனக்கு பின்னால் ஸ்டாலினும் அவருக்கு பின்னால் பேரன் உதய நிதியும் இருக்கிறான் என்பதை கவனத்தில் கொள் வாழ்க தமிழ்
சிறந்த எதிர் கட்சியாக செயல் படுகிறார் தாத்தா........தாத்தா வ இப்படியே சத்தம் போடுற எடத்துல வச்சிருந்த தமிழகதிற்கு ஓரளவு நல்லது நடக்கும். தமிழ் தாத்தா மேல இரண்டு பேருக்கும் அக்கறை இல்லை அது வேற விஷயம். இப்படி பேசியாவது அவருடைய இல்லத்தை பராமரிச்சா சந்தோசம் தானே. கலைஞர் தாத்தாவ என்ன வேணுனாலும் ................ஊத்துங்க அது தப்பில்ல. அதுக்காக தமிழ் தத்தா உ வே சா வை யாரும் இழிவு படுத்த கூடாது என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி, எவ்வளவு சிரம பட்டு தமிழ் இல்லக்கியத்தை காப்பாற்றியவர். இப்படி அல்லகைகளால் கேவலப்படும் பொது வருத்தமாக இருக்கிறது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.