மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட, 2,171 பேருக்கு தடை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத, தமிழகத்தைச் சேர்ந்த, 97 பேர் உட்பட, நாடு முழுவதும், 2,171 பேருக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட, தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.

சமீபகாலமாக, தேர்தல்களில் பண பலம் அதிகரித்து, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடப்பது குறைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தேர்தலின்போது, பண பலம் ஆதிக்கம் செலுத்துவதைக் குறைக்கவும், தேர்தலில் செலவழிக்கப்படும் நிதி பற்றிய விஷயங்களில், வெளிப்படையான அணுகுமுறையை மேற்கொள்ளவும், தேர்தல் கமிஷன், சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இதன்படி, "தேர்தல்களில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தல் பிரசாரத்தின்போது, தாங்கள் செலவழித்த தொகை குறித்த பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

ஆனாலும், பெரும்பாலான வேட்பாளர்கள், தங்கள் செலவுத் தொகை குறித்த கணக்குகளை, தேர்தல் கமிஷனிடம் அளிக்காமல், டிமிக்கி கொடுத்து வந்தனர். அவர்களின் இந்த நடவடிக்கைகக்கு, தற்போது தேர்தல் கமிஷன் கடிவாளம் போட்டு உள்ளது.

இது குறித்து, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிடும் அனைவரும், தேர்தல் முடிவு வெளியான, 30 நாட்களுக்குள், தங்களின் செலவு கணக்குகளை, தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனாலும், சமீப காலங்களில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்ட, 2,171 பேர், தங்களின் செலவுத் தொகை குறித்த கணக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள், தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யவில்லை.அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, 260 பேரும், சத்தீஸ்கரைச் சேர்ந்த, 259 பேரும், அரியானாவைச் சேர்ந்த, 197 பேரும், செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை.

ஒடிசாவைச் சேர்ந்த, 188 பேர், ம.பி.,யைச் சேர்ந்த, 179 பேர், உ.பி.,யைச் சேர்ந்த, 159 பேர், தமிழகத்தைச் சேர்ந்த, 97 பேர், செலவு கணக்குகளை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, இவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட, தடை விதிக்கப்பட்டு உள்ளது.மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர், பெரிய அரசியல் கட்சிகளை சேராதவர்கள். தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல், அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.ஏற்கனவே, கடந்த செப்டம்பரிலும், இதே காரணத்துக்காக, 3,275 பேருக்கு, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.இவ்வாறு, தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Selvaraj - Tirunelveli,இந்தியா
18-பிப்-201311:02:02 IST Report Abuse
D.Selvaraj இது போன்ற பிரச்னைகளுக்கு 3 வருடம் என்பது ஒரு தண்டனையே அல்ல. "ஆயுள் தண்டனை" வழங்க வேண்டும். அதாவது ஆயுள் முழுக்கும் தடை விதிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sankar Pillai - kovilpatti,இந்தியா
18-பிப்-201308:15:34 IST Report Abuse
Sankar Pillai இதனை வரவேற்கிறோம் அனால் அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் இந்த தடை அணைத்து கட்சிகளுக்கும் பொருந்துமா இல்ல வழக்கம் போல தான தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர், பெரிய அரசியல் கட்சிகளை சேராதவர்கள்.இது நீங்க போட்டதுதான் அப்போ காங்கிரஸ் மற்றும் பெரிய அரசியல் கட்சிகளுக்கு இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அள்ளிக பட்டுள்ளதா.........
Rate this:
Share this comment
Cancel
Jayabalan Mavanna - Tiruvannamalai,இந்தியா
18-பிப்-201307:40:20 IST Report Abuse
Jayabalan Mavanna தடை என்பது குறைந்தது 14 ஆண்டுகளுக்காவது இருக்க வேண்டும். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவார்களுக்கும் பெர்மநேன்ட் அகௌண்ட் நம்பர் பெறாதவர்களுக்கும் தேர்தலில் நிற்க அனுமதி மறுக்கப் படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
18-பிப்-201305:47:19 IST Report Abuse
Guru சபாஷ், இதுபோன்ற நடவடிக்கை தொடர வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-பிப்-201303:23:25 IST Report Abuse
தமிழ்வேல் வருடங்கள் போதாது ... குறைந்தது 3 சட்டசபைத்தேர்தல் காலங்களுக்கு ( அதாவது சுமார் 15 வருடங்களுக்காவது) தடை செய்ய வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
shyam - ALLENTOWN PA,யூ.எஸ்.ஏ
18-பிப்-201300:47:40 IST Report Abuse
shyam ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வரும் தேர்தலுக்கு மூன்றாண்டுகள் தடை மூன்று நாட்கள் தடை என்று கூட நமது இந்தியாவில் சட்டங்கள் வரும் .........வேதனை ... நமது மக்கள் எப்போ திருந்துவார்களோ தெரியலைடா சாமி .......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-பிப்-201303:24:38 IST Report Abuse
தமிழ்வேல் சட்டங்கள் இவர்களால் தானே தயாரிக்கப் படுகின்றன ? அவர்களிடம் இதை விட எதிர் பார்க்க முடியாது......
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
18-பிப்-201300:29:56 IST Report Abuse
Thangairaja வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டியவங்கல்லாம் பெரும்பான்மையோடு அரசாட்சி செய்து கொண்டிருக்கிறார்கள், கணக்கு காண்பிக்காததுக்காக இம்ம்மாம் பெரிய தடை லிஸ்டு. காமெடி குழுக்கல்லையே தேர்தல் ஆணையத்துக்கு தனி இடம் உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்