புதுடில்லி :ஹெலிகாப்டர் பேரத்தில், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்ட விஷயம் தொடர்பான, அனைத்து ஆதாரங்களையும், இந்த பேரத்தில் இடைத் தரகராக செயல்பட்ட, குயிடோ ஹஸ்கே, அழித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலி அரசுக்கு சொந்தமான, "பின்மெக்கானிகா' நிறுவனத்திடமிருந்து, வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க, 12 ஹெலிகாப்டர்களை வாங்க, மத்திய அரசு, 2010ல், ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு, 3,600 கோடி ரூபாய்.இது தொடர்பான பேரத்தில், இந்தியாவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு, இத்தாலி நிறுவனம், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து, பின்மெக்கானிகா நிறுவன தலைவர், குய்சொப்பி ஒர்சி, ஹெலிகாப்டர் விற்பனை பிரிவு தலைவர், ஸ்பாக்னோலினி ஆகியோர், இத்தாலி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.ஹெலிகாப்டர் பேரத்தில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த, குயிடோ ஹஸ்கே, கார்லோ ஜெரோசா ஆகியோர், இடைத் தரகர்களாக செயல்பட்டனர். இத்தாலி அதிகாரிகளின் அறிக்கையை, அந்நாட்டு பத்திரிகையான, "ரிபப்ளிகா' வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:ஹெலிகாப்டர் பேரத்தில், இந்தியாவை சேர்ந்தவர்களுக்கும், "பின்மெக்கானிகா' நிறுவனத்துக்கும் இடையே, இடைத்தரகராக செயல்பட்டதில், குயிடோ ஹஸ்கேவுக்கு முக்கிய பங்கு உண்டு.இந்திய அரசு தரப்பில் இடைத் தரகர்களாக யார் யார் செயல்பட்டனர், இரு தரப்புக்கும் இடையே, பணப் பரிமாற்றங்கள் எப்போது நடந்தன, எவ்வளவு பணம், கைமாறியது போன்ற விவரங்கள் அனைத்தும், குயிடோவுக்கு தெரியும்.இவை அனைத்தையும், தன் கம்ப்யூட்டர் டிரைவில், "பனோரமா பாக்ஸ்' என்ற பெயரில், பதிவு செய்து வைத்திருந்தார். ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான விவகாரம், பெரிதானதை அடுத்து, இந்த தகவல் அனைத்தையும், குயிடோ அழித்து விட்டார்.இதையடுத்து, விசாரணை அதிகாரிகள், குயிடோவின் தாயார் வீட்டில், அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கிருந்த, சூட்கேசில், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான. சில விவரங்களை, ஹார்டு டிஸ்க்கில், அவர் மறைத்து வைத்து இருந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.அந்த, ஹார்டு டிஸ்க்கையும், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான சில ஆவணங்களையும், அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த ஆவணங்கள் தற்போது, இத்தாலி அரசின் வழக்கறிஞர், பஸ்டோ அரிசோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான அனைத்து விஷயங்களும் இடம்பெற்றிருக்குமா என்ற, சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையே, "ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான அனைத்து விவரங்களையும், அறிக்கையாக, தங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும்' என, ராணுவ அமைச்சகத்திடம், மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் வலியுறுத்திஉள்ளது.ஆனாலும், ராணுவ அமைச்சகத்தில் உள்ள, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு, "இது தொடர்பான அறிக்கையை தயார் செய்வதற்கு, அதிகபட்சமாக நான்கு மாதங்கள் வரை ஆகும்' என, தெரிவித்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இத்தாலியின் சட்ட நடைமுறை குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதற்காக, அங்குள்ள வழக்கறிஞர் களின் உதவியை, சி.பி.ஐ., நாடியுள்ளது.
இதனிடையே ஹெலிகாப்டர் பேரத்தில், 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து விசாரிக்கவும் ஆவணங்களை திரட்டவும், சி.பி.ஐ., அதிகாரிகள் மற்றும் ராணுவ அமைச்சக பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழு, இன்று இத்தாலி செல்கிறது. அங்கு அந்நாட்டு வழக்கறிஞர் உதவியுடன், ஹெலிகாப்டர் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள இந்தியர்களின் விபரங்களை அதிகாரிகள் திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இடலியாவில் பிறந்த சோனியா காந்தி? சோனியா இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டகாங்கிரஸ் கட்சியில் அடிமட்ட மெம்பெர் பதவியில் கூட இருக்க தகுதி அல்லாதவர், உடனடியாக கட்சி மற்றும் இந்திய தேசதிளிருதும் நீகினல்தான் இந்தியா பிழைக்கும் இதற்கு சமீபத்திய ஹெலிகாப்ட்டர் இட்டலியிள்ருந்து?? வாங்கியதில் ஊழல் 360 கோடி+....? சாட்சி
எல்லா உழல களின் போதும் அதில் சம்பந்தப்பட்டவர் பதவி விலகினால் போதும் காங் கட்சி புனிதமாகிவிடும் இது தான் அவர்களின் கலாசாரம். இப்போது இதில் சம்பந்த பட்டவர் பதவி விலகுவாரா இதை போல இதுவரை இருந்த எந்த அரசும் சுதந்திரத்தில் இருந்து இன்று வரை இவளவு முறைகேட்டில் ஈடுபட்டது இல்லை. இந்த காங் அரசு தான் அதற்க்கு தலைமை ஏற்றவர் மண் மோகன் சிங் எம்பது தான் கொடுமை எந்த முறைகேட்டிலும் ஈடுபடாதவர் ஆனால் இனி எல்லா காலத்திற்கும் உழல அரசாங்கத்திற்கு தலைமை வகித்தவர் என்ற பெயர் அவருக்கு நிரந்தரம். இது தான் பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதா.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.