Ecology village in madurai | மதுரையில் "பசுமை கிராமம்': வீடுகள் தோறும் பூந்தோட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் "பசுமை கிராமம்': வீடுகள் தோறும் பூந்தோட்டம்

Updated : பிப் 18, 2013 | Added : பிப் 17, 2013 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Ecology village in madurai,மதுரையில் "பசுமை கிராமம்': வீடுகள் தோறும் பூந்தோட்டம்

மதுரை:மதுரை அருகே, வீடுகள் தோறும் பூந்தோட்டங்கள் அமைக்கப்பட்ட "பசுமை கிராமம்' உள்ளது.மதுரை மாவட்டம் வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்டது அடைக்கம்பட்டி. இக்கிராமம் 300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. நான்காவது தலைமுறையை சேர்ந்த, 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அடைக்கப்பட்டி கிராமத்திற்கு எதிரே மதுரை காமராஜ் பல்கலை உள்ளது. பின்பகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ளது. இக்கிராம மக்கள் தங்களது சொந்த நிலத்தில் மல்லிகை, பிச்சிப்பூ, கனகாம்பரம், முல்லைப்பூ என பூக்களை விளைவிக்கின்றனர். இதை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இக்கிராமத்திற்குள் நுழையும்போது பூக்களின் நறுமணம் வரவேற்கிறது.

பசுமை கிராமத்தை சேர்ந்த மணிமாலா கூறுகையில், ""இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து, கிராமத்தை பசுமையாக மாற்றி முன்மாதிரியாக கொண்டு வர தீவிர முயற்சி எடுத்தனர். இதன் பயனாக வீடுகள் தோறும் பூந்தோட்டங்களை அமைத்தோம். இதனால், பூக்களுக்கு நடுவே குடியிருப்புகள் என்ற நிலை ஏற்பட்டது,'' என்றார்.

பஞ்சு என்பவர் கூறுகையில், ""தற்போது கிராமம் முழுவதும் பசுமையாக மாறியுள்ளது. கடும் வறட்சியிலும் கிணற்று பாசனம் மூலம் பூக்களை விளைவிக்கிறோம். விடா முயற்சியால் அடைக்கம்பட்டி "பசுமை கிராமம்' என்றாகி விட்டது. இதற்காக மதுரை - தேனி மெயின்ரோட்டில் "பசுமை கிராமம்' என கிராமம் சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. அடைக்கம்பட்டியை போல் மற்ற கிராமத்தினரும் முயற்சித்தால் பசுமை சாத்தியமாகும்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhean - Chennai,இந்தியா
19-பிப்-201321:01:47 IST Report Abuse
Indhean கேட்கவே சந்தோஷமாக உள்ளது. விவசாயிகளை பொருத்து அவர்களுக்கு சேமிப்பு என்பது நடக்காத, இயலாத காரியம். எனவே அவர்கள் நல்ல மரங்களை வளர்த்தல் அது ஒரு நல்ல முதலீடாக அமையும். இதன்மூலம் நல்ல மழை பொழிவை எதிர்பார்க்கலாம், ஒரு லாபத்தையும் எதிர்பர்ர்க்கலம். பீ மரம் எனும் மரம் தீக்குச்சி தயாரிக்க பயன்படுகிறது. அது இப்போதே டன் 5000 ரூபாய்க்கு விக்கப்படுகிறது. 100 பீ மரங்கள் இன்று நட்டால் அவர்களுக்கு 200 டன் மரம் 10 வருடங்களுக்கு பின் கிடைக்கும். அப்போதைய டன் விலை 10000 ஆக இருக்கும்., 5000 என்பர் வைத்தால் கூட 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை பின்பட்ட்ருவர்களா?
Rate this:
Share this comment
Cancel
Rajalakshmi - Kuwait City,குவைத்
19-பிப்-201312:36:57 IST Report Abuse
Rajalakshmi ஆஹா அற்புதம் , இதே மாதிரி தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ? வறட்சியினால் காற்றும் வெப்பம் மிகுந்ததாக இருப்பதை மாற்றி "நதியில் விளையாடி , கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே ..." என்று தமிழ் நாட்டின் குறைகளையெல்லாம் களைந்து விடலாமே ?? நிறைய துளசி , நந்தியாவட்டை , அரளி , செம்பருத்தி , பவழமல்லி , அருகம்புல், தர்ப்பை புல் , வேப்ப மரம் , அரச மரம் இவற்றையும் அதி விரைவாக வளர்க்கவும். முடிந்தவரை பூக்களை கொய்யாமல் அப்படியே தேனீக்கள் மற்றும் பல பறவையினங்களின் ஏன் நம் மனித இனங்களின் கண்ணுக்கு விருந்தாக விட்டு வைக்கவும். நிறைய பழ வகைகள் குரங்கு , வௌவால் , கிளி போன்றவை புசிக்க விட்டு வைக்கவும். "அவனியென்பதோர் பூந்தோட்டம் / இதில் அன்புகொண்டார்க்கே கொண்டாட்டம் .....தட்டிப்பறிக்க பருந்துக்கும் இடமுண்டு , இதை மறவாதே ...இதை உணர்வாயே " ( திருப்புகழ் பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் அற்புதமான கவிதை...அவர் கவிதையெல்லாம் சாட்சாத் காளி தேவியின் கவிதையே )
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
18-பிப்-201311:09:12 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இது போல் அனைத்து மக்களும் முயற்சித்தால் தாவரங்களை வளர்த்தால் தூய்மையான காற்றும் கிடைக்கும். நல்ல மழை வளமும் பெறலாம்.
Rate this:
Share this comment
thamilaga.velanmai - Dharmapuri,இந்தியா
19-பிப்-201301:34:16 IST Report Abuse
thamilaga.velanmaiஉண்மை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை