திருப்பூர்: திருப்பூரில், புழுக்களுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறி, பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சி, 55, 57வது வார்டுகளுக்கு <உட்பட்ட சுண்டமேடு, ஜவகர் நகர், முருகம்பாளையம், பெரியார் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வினியோகிக்கப்படும் குடிநீர், சேறும், சகதியுமாக வருவதாகவும், இதனால், பொதுமக்கள் பாதிப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.நேற்று காலை குழாய்களில், குடிநீர், கலங்கலாகவும், சேறும், சகதியுமாக வந்தது; புழுக்களும் நெளிந்துள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த பெண்கள், தரமான குடிநீர் வினியோகிக்கக்கோரி, முருகம்பாளையம் ரிங் ரோட்டில் 9.00 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும், மாநகராட்சி உதவி கமிஷனர் செல்வநாயகம் மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அவர்களிடம், பெண்கள் குடிநீரை காண்பித்து, இதனால், காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டியுள்ளதாக ஆக்ரோஷமாக கூறினர். குடிநீரை சோதனை செய்த அதிகாரிகள், "உடனடியாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு, அடுத்தமுறை தரமான குடிநீர் சப்ளை செய்யப்படும்,' என உறுதியளித்தனர். அதன்பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அரை மணி நேரம், முருகம்பாளையம் ரிங் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.