திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், வரும் ஏப்., - மே மாதங்களில் சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆயத்த பணிகளை, மாவட்ட புள்ளியில் துறை துவக்கியுள்ளது.கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் அடிப்படையில், நாடு முழுவதும் சமூக பொருளாதார கணக்கெடுப்பு வரும் ஏப்., மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட புள்ளியியல் மற்றும் பொருளியல் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தி, அதன் மூலமாக சிறு, குறு தொழில்கள், குடிசை தொழில்கள் என அனைத்து வகையான தொழில் துறையினரும் கண்டறியப்படுவர். அவர்களது பொருளாதார நிலையை புள்ளிவிவரங்களுடன் சேகரித்து, பொருளாதார அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அதற்காக, வரும் ஏப்., - மே மாதங்களில் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
புள்ளியியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவதற்காக, எட்டு லட்சம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. அதன் மூலமாக பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்படும். வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும். கடந்த காலங்களில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் விவரங்களை, ஒன்றியம், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் வருவாய்த்துறையிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும். வரும் ஏப்., - மே மாதங்களில் கணக்கெடுப்பு நடைபெறும், என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கணக்கெடுப்பு செய்தே காலத்தை ஓட்டுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் உள்ளன. உதாரணத்திற்கு இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி வாக்காளர் பட்டியலை அரசு வலைதளத்தில் பார்த்தால் பாகம் எண் பட்டியலில் உள்ள பகுதிக்கு பதிலாக வேறு பகுதி உள்ளே இருக்கும் PDF file -ல் உள்ளது. PIN Code அனைத்து ஊர்களுக்கும் தவறாக உள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வேறு தெரு வேறு ஊர்களில் பெயர் உள்ளது. இது குறித்து செய்தி வெளியிட தினமலர் விரும்பினால் என ஈ-மெயில் முகவரியில் தொடர்பு கொண்டால் விளக்கமளிக்கிறேன்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.