திருப்பூர்: பெருந்தொழுவு, பி.ஆண்டிபாளையம் கிராமத்தை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, நோயில்லாத கிராமமாக உருவாக்க தத்தெடுத்துள்ளது.கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் செல்வராஜ் கூறியதாவது:கால்நடைகளை நோய் தாக்காத வகையில், கிராமத்தை தத்தெடுத்து போதிய மருத்துவ உதவி இலவசமாக செய்யப்படுகிறது. இதன் மூலம் கால்நடை வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு, கிராமப்புற மக்களுக்கு வருவாய் கிடைக்கிறது.
அதற்காக, பெருந்தொழுவு, பி.ஆண்டிபாளையம் கிராமம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை சார்பில் தத்தெடுக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில், 75 குடும்பங்கள் வசிக்கின்றன; 25 குடும்பங்கள், வறுமைகோட்டுக்கு கீழ் வாழ்கின்றன. ஏழை மக்களாக இருப்பதால், பலரும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளை நோயின்றி பராமரிக்கும் விழிப்புணர்வு, கிராம மக்களிடம் இருப்பதில்லை.கிராமத்தை தத்தெடுத்த வகையில், ஆண்டிபாளையத்தில் வளர்க்கப்படும் அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது; நாட்டுக்கோழிகளுக்கு "ராணிகட்' தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி, ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்க மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.