சென்னை:"அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கரும்பு கொள்முதல் விலை, டன்னுக்கு, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, அறிவித்ததை, ஏன் நிறைவேற்றவில்லை?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை, அரசு எப்போது நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்புடன், தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு, முதல்வர் பதிலளித்த போது, கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிப்பார் என, எதிர்பார்த்திருந்த நேரத்தில், வழக்கம் போல இந்த ஆட்சியில், அவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின், மூன்றரை லட்சம் கரும்பு விவசாயிகள் உள்ளனர். கூட்டுறவு துறையில், 16; பொதுத்துறையில், 3; தனியார் துறையில், 28 என, சர்க்கரை ஆலைகள் உள்ளன. தற்போது கரும்பு கொள்முதல் விலையாக, 2,350 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், வாகன வாடகைக்கு, 100 ரூபாய் பிடித்தம் போக, மீதம், 2,250 ரூபாயைத் தான், விவசாயிகளிடம் கரும்பு ஆலை நிர்வாகங்கள் வழங்குகின்றன.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கரும்பு கொள்முதல் விலை, டன்னுக்கு, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, அறிவித்திருந்தனர். இந்த ஆண்டிலாவது, டன் ஒன்றுக்கு, 2,500 ரூபாயை அறிவிக்கப்படும் என, எதிர்பார்த்தனர். ஆனால், இந்த ஆண்டும், 2,350 ரூபாய் என்ற அளவிற்குத் தான் உயர்த்தியுள்ளனர். கரும்பு வெட்டுக் கூலி மற்றும் வாகன வாடகையை, சர்க்கரை ஆலை நிர்வாகங்களே ஏற்க வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கரும்பு கொள்முதல் விலை சர்க்கரை ஆலைகள் அரைவை துவங்கும் முன்னரே அறிவித்தால் கரும்பு விவசாயிகள் பயன் பெறுவார்கள் .கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள கரும்பை தனியார் சர்க்கரை ஆலைகள் சட்ட விரோதமாக கடதிசெல்ல அவகாசம் அளித்துவிட்டு அரைவை முடியும் பொது விலை உயர்த்தி அறிவித்தால் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தங்களின் ஆண்டு அறைவைதிரனை பூர்த்தி செய்ய இயலாது .கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை நலிவடைய செய்வதும் தனியார் சர்க்கரை ஆலைகளை ஊக்கவிக்கவும் அரசு கையாளும் தந்திரமாக எண்ணுகிறார்கள் விவசாயிகள்.எந்த ஆட்சி நடந்தாலும் இது தான் நிலை .
மரியா உன்னையெல்லாம் திருத்தவேமுடயாத.ஒரேஒரு காசு மின்சார உயர்வை திரும்பபெற போராடிய விவசாயிகளை துப்பாக்கி சூடு நடத்தி அடக்கிய பாவி கருணானி தீ தானே.அவருக்கு தெரிந்த விவசாயம் கண்ணதாசனிடம் கேட்டால் சொல்லுவர்.அல்லது பயிர் நிலத்தை பறிகொடுத்த ஓபி ராமனிடம் வினவினால் விடை தருவார். என்ன செய்ய இருவருமே இல்லையே.அதனால் தான் பெரிசு உளறுகிறது என்றல் உங்களை போல் சிலர் ஒத்து ஊதுகிறீர்கள்.
தயவு செய்து இந்த மாதிரி சந்தர்பங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து விவசாயத்துக்கு அதரவு குரல் எழுப்புங்கள், வீணாக அவரை திட்ட வேணாம். மேலும் கரும்பு வெட்டு கூலி, போக்குவரத்து ஏற்று கூலி இறக்கு கூலியை அரசாங்கமே ஏற்று கொண்டால் நல்ல இருக்கும், மற்றும் வட்டியில்லா கடன் கொடுங்கள், மேலும் ஒவ்வொரு கரும்பு ஆலையிலும் கிடைக்கும் கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்க, மற்றும் இயற்கை உரம் தயரிக்க் ஆவன செய்யுங்கள். அதனை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் ( நீங்க ஒன்னும் நழ்டதுக்கு கொடுக்க வேணாம்) வழங்குங்கள், மேலும் பண்ணை பொருட்கள் வாங்க கடனுதவி உடனடியாக கிடைக்க வழி செய்யுங்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.