கோவை:"பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை பார்க்க, அனுமதிக்க வேண்டும்; குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி, அவர் தாய் நேற்று, கலெக்டரை சந்தித்து, அழுதவாறே கோரிக்கை விடுத்தார்."கோவையில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியை அரசு தத்தெடுத்து, எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்' என, இந்திய தேசிய மாதர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. மற்றொருவர் வீடு மீதும் மக்கள் ஆவேசம்: கோவையில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாப்பம்பட்டி பிரிவு கருப்புசாமி வீட்டின் மீது, பொதுமக்கள் கற்களை வீசி நேற்று தாக்குதல் நடத்தினர்; திருச்சி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.கோவையில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த "ராகம்' சவுண்ட் சர்வீஸ் கருப்புசாமி வீட்டின் மீது கற்கள் வீசி பொதுமக்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். அதே போல் நேற்று மதியம் குற்றம்சாட்டப்பட்ட பாப்பம்பட்டி பிரிவில் வசிக்கும் கருப்புசாமியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆவேசமடைந்த பொதுமக்கள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியல்: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சின்னையன், கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமையில் திரண்ட, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், திருச்சி ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்," சிறுமியை நாசம் செய்த காமுகர்களை தூக்கில் போடவேண்டும். சிறுமியை சித்ரவதை செய்த அவர்களுக்கு கருணையே காட்டக்கூடாது'என்றனர்.தகவல் அறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேசி மறியலை கைவிடச்செய்தனர். லட்சக்கணக்கில் பேரம்கட்சி பிரமுகர்கள் தீவிரம்: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள நபர்களில் இருவரை காப்பாற்ற, முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் களத்தில் குதித்துள்ளனர். பொதுமக்கள் தரப்பில் கூறப்படுவதாவது:ராமநாதபுரம், "சவுண்ட் சர்வீஸ்' உரிமையாளர் கருப்புசாமி ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர். ரியல் எஸ்டேட் உரிமøயாளர் கருப்புசாமி தி.மு.க.,, முக்கிய புள்ளி ஒருவருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.இவ்வழக்கில் இருந்து இருவரையும் விடுவிக்க பலத்த முயற்சி நடக்கிறது. டாக்டர்கள், போலீசாரிடம் 20 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை, சமூக பிரச்னையாக கருத வேண்டும். ஆனால், அரசியல் செல்வாக்கில் பணத்தை வாரியிறைத்து தப்பிக்க நினைப்பவர்களின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக, இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் போராட்டங்களில் குதித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் பெறும்வரையிலும் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்கும் போலீசார், அரசியல் கட்சிகளின் "வலையில்' சிக்காமல், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். குற்றவாளிகளை தப்பவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, அரசியல் பிரமுகர்கள், போலீசார் பற்றி போஸ்டர் ஒட்ட திட்டமிட்டுள்ளோம். கூடிய விரைவில் இவை வெளியாகும் என்றனர். "பாலியல் குற்றவாளிகளுக்குசட்ட உதவி கிடையாது': ""கோவையில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஐந்து பேருக்கு ஆதரவாக, கோர்ட்டில் ஆஜராக போவதில்லை,'' என, கோவை பெண் வக்கீல்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.இந்த சங்கத்தின் அவசரக் கூட்டம், தலைவர் வெண்ணிலா தலைமையில் நேற்று நடந்தது. செயலாளர் அம்பிகா, துணைத்தலைவர் செல்வி முன்னிலை வகித்தனர். " ராமநாதபுரத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களுக்கு ஆதரவாக, மூன்று மாத காலத்துக்கு பெண் வக்கீல் சங்கத்தினர் யாரும் ஆஜராவதில்லை. தோழமை சங்கங்களான கோவை வக்கீல்கள் சங்கம், கிரிமினல் கோர்ட் வக்கீல்கள் சங்கம் மற்றும் அட்வகேட் அசோசியேஷன் சங்கங்களைச் சேர்ந்த வக்கீல்களும் ஆஜராகக்கூடாது என, கேட்டுக்கொள்ளப்படுகிறது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொருளாளர் நிர்மலா நன்றி கூறினார். பின்னணியில் வேறு யார்? கோவை, ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, கடந்த ஓராண்டாக, பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, முதியவர் உட்பட, ஐந்து பேரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, குற்றவாளிகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சிறுமியின் தாய், கடந்த, 11 ஆண்டுகளாக, அவரது கணவரை பிரிந்து, இளைய மகளுடன், தனி வீட்டில் வசித்து வருகிறார். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி, தந்தையின் பராமரிப்பில் இருந்து வந்தார். அப்போது தான், தந்தையின் சகோதரி கணவர் கோபால கிருஷ்ணன், 60, உட்பட, ஐந்து கொடூரர்களின் காமப் பசிக்கு இரையாகியுள்ளார். மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து, தகவல் அறிந்த தாய், நேற்று முன்தினம் மகளை சந்திக்க, மகளிர் காப்பகத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவரை சந்திக்க, அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, தாய், பாட்டி ஆகிய இருவரும், நேற்று, கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.கலெக்டர் கருணாகரனை சந்தித்து, மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும் என, அழுதவாறே கோரிக்கை விடுத்தார். "எனது மகளை பார்க்கணும் ஐயா... குற்றவாளிகளுக்கு, தூக்குத் தண்டனை கிடைக்கணும்' என, கதறினார். அனுமதி மறுத்தது ஏன்? சிறுமியை சந்திக்க, அவளது தாயை, அனுமதிக்காதது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ""விசாரணையின் ஆரம்ப கட்டத்தில், தாயை சந்திக்க சிறுமி விருப்பமில்லை என்று கூறிவிட்டாள். இந்நிலையில் சிலரின் தூண்டுதலால் சிறுமியை சந்திக்க வேண்டுமென்று, அவளது தாய் போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார்.அதனால், போலீஸ் கண்காணிப்பில் சிறுமியை சந்தித்து பேச அனுமதித்துள்ளோம். மாஜிஸ்திரேட் ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கு முன், சிறுமியின் மனநிலையை குழப்பம் செய்து விடுவார்கள் என்பதால் யாரை சந்திக்க அனுமதிக்காமல், போலீஸ் பாதுகாப்பில் வைத்துள்ளோம்,'' என்றனர். ரகசிய வாக்குமூலம்! கோவையில், ஐந்து பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியிடம், ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.கோவை, ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 13 வயது மகள், 9ம் வகுப்பு படிக்கிறாள். தந்தையின் உறவினர், ராமநாதபுரம், தேவர் வீதியிலுள்ள ஈஸ்வரி என்பவரின் வீட்டில் சிறுமி வளர்க்கப்பட்டாள். ஈஸ்வரியின் கணவர் கோபாலகிருஷ்ணன், 59, ராமலிங்கஜோதிநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை "கம்பவுண்டர்' பாலு என்கிற பாலசுந்தரம், 72, ஆகியோர் சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.அதன்பின், ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த ராகம் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் கருப்புசாமி, 59, கண்ணம்பாளையம் பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கருப்புசாமி, 55, ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.சிறுமிக்கு திருமண ஆசைவார்த்தை கூறிய, கார்த்திக் என்ற வாலிபரும் பலாத்காரம் செய்துள்ளார். போலீஸ் கண்காணிப்பு: சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்த, கோபாலகிருஷ்ணன் மகன் பாலகிருஷ்ணன், உதவியுடன், சிறுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். தந்தையின் கொடூரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாலகிருஷ்ணிடம் @பாலீŒõர் விசாரிக்கின்றனர். வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அன்புள்ள வாசகர்களே!, நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
கோவை, ராமநாதபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, ஐந்து பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து, கோவையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறுமியை நாசம் செய்தவர்களை கண்டித்தும், பெண்களுக்கு சமூக பாதுகாப்பு வேண்டியும் கோஷமிட்டனர். மாதர் சம்மேளத்தின் மாவட்ட செயலாளர் நிர்மலா, மாவட்ட தலைவர் தமிழ்செல்வி, இ. கம்யூ., மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராஜ், நகர செயலாளர் சுதர்சன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் கோவை மாவட்ட தலைவி தமிழ்செல்வி கூறுகையில், ""சிறுமிக்கு நேர்ந்த கொடுமை, இனி, யாருக்கும் நேராத அளவுக்கு, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
சிறுமியின் எதிர்காலமே பாழாகி விட்டது. அச்சிறுமியால் இனி மேல் பள்ளியில், நிம்மதியாக படிக்க முடியாது. சமுதாயத்தில் நிம்மதியாக வாழ முடியாது. அந்த சிறுமியின் வாழ்க்கைக்கு அரசு உதவி செய்ய வேண்டும். சிறுமியை அரசு தத்தெடுத்து, எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பு, உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அரசாங்கமே படிக்க வைத்து, வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிறுமியின் தாயார் கூறுகையில், ""தந்தையிடம் வளரும் மூத்த மகளை, அவளது அத்தை வீட்டிற்கு சென்று அடிக்கடி சந்தித்து பேசுவேன். அவளுக்கு நேர்ந்த கொடூரத்தை நினைக்கும் போது, எனது உயிரே போய்விடுகிறது.குடும்ப பிரச்னையால் கணவனையும், மகளையும் பிரிந்தேன். மகளை நன்றாக வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். உறவினர் வீட்டில் ஒப்படைத்ததால் அவளது வாழ்க்கையே பாழாகி விட்டது. எனது மகளை சந்திக்க போலீசார் அனுமதிக்க மறுக்கின்றனர். மகளை நாசம் செய்தவர்களை தூக்கிலிட வேண்டும்,'' என்றார்.
முன்னதாக, சிறுமியின் தாய், நிருபர்களிடம் கூறியதாவது:மாமியார் - மருமகள் பிரச்னையால், என் கணவரை, பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. என் மூத்த மகளுக்கு, இரண்டு வயதாக இருக்கும்போது, கணவரை பிரிந்து, அதே ஊரில் வசித்து வருகிறேன். என்னுடன் இளைய மகள் இருக்கிறாள். நான் கூலி வேலை செய்து, இளைய மகளை பார்த்து வருகிறேன். மூத்த மகளை பார்க்கவும், பேசவும், நான் பல முறை முயற்சி செய்தும், கணவரும், அவரது வீட்டாரும், என்னை அனுமதிக்கவில்லை. தந்தை மற்றும் உறவினர்களின் வற்புறுத்தல் காரணமாக, வெளியே வைத்து எங்காவது பார்த்தாலும், மகளும் என்னிடம் பேசுவதில்லை. ஆனால், தங்கையுடன் அன்பாக பேசுவாள்.நான் கணவரை பிரிந்த பின், மறுமணம் எதுவும் செய்யவில்லை. ஆனால், மறுமணம் செய்துள்ளதாக போலீசுக்கு, தவறான தகவலை கூறியுள்ளனர். என் மகள் வாழ்க்கையை, சீரழித்து விட்டனர். அவளை பார்க்க அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, ஐ.சி.யு.,வில் இருப்பதாக தெரிவித்து, அனுமதிக்கவில்லை. தற்போது, அவளை தங்க வைத்துள்ள காப்பகத்துக்கு சென்றபோது, அங்கும் என்னை அனுமதிக்கவில்லை. தாய் என்ற முறையில், என்னிடம் மட்டுமே அனைத்து சம்பவங்களையும் அவளால் கூற முடியும். இந்த பரிதாபமான நிலையில், அவளுக்கு, என் அன்பும், அரவணைப்பும் தேவைப்படுகிறது. தந்தை வீட்டில் அலட்சியமாக இருந்ததால் தான், என் மகளுக்கு இந்த கொடூர நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில், வேறு யார் இருக்கின்றனர் என்ற உண்மையை அறிய வேண்டும்; எனது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்; தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்; அவளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டும்; வழக்கு விசாரணைக்குப் பின், அவளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஓராண்டாக முதியவர்கள் நான்கு பேர் மற்றும் வாலிபர் ஒருவரால், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.கோவை போலீஸ் கமிஷனரிடம் சிறுமி புகார் கொடுத்ததையடுத்து, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.மருத்துவ பரிசோதனை: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது. இதன் அறிக்கை, கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய, போலீசார் நேற்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியிலுள்ள மருத்துவ பரிசோதனை அனுமதிக்காக ஜே.எம். எண் 4 கோர்ட்டிலும், மற்ற ஐந்து பேரின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வேண்டி, ஜே.எம்.எண் 6 கோர்ட்டில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (கிழக்கு) முனீராபேகம் மனு தாக்கல் செய்தார். கோர்ட் அனுமதி வழங்கியதும் மருத்துவ பரிசோதனை நடக்கும்.ரகசிய வாக்குமூலம்: மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, கோவையிலுள்ள காப்பகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியிடம், நடந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்ய, போலீசார் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். தலைமை குற்றவியல் நீதிபதி உத்தரவையடுத்து ஓரிரு நாட்களில், சிறுமியின் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.
-நமது நிருபர்-
கற்பழிப்பு, ஆசிட் வீச்சு சம்பவங்களை அரசியல் ஆக்காமல் இந்த மாதிரி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கும், பெண்களின் மீது ஆசிட் வீசுபவர்களுக்கும் அரபு நாடுகளில் அளிக்கப்படுவதைப போல கடுமையான தண்டணைகளை நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே கற்பழிப்பு குற்றங்களும், ஆசிட் வீச்சு சம்பவங்களும் மேற்கொண்டு நடைபெறாமல் இருக்கும்.
ராக்ஷச குணம் பிடிச்ச மாமியாருக்க இருக்கும் வரை இதே ராவுசுதான் . பெண்ணுக்கு பெண்ணே சத்ரு . இவுகளே பார்த்து திருமணம் முடிச்சுட்டு வந்தவளை வாழ வுடாம கழுத்தறுக்கும் இனமே மாமியார் இனம் . ஒரு சிலர் தன மகளைப்போலவே மருமகளை நடத்துராக .ஆனால் பல மாமியார்கள் கடைசிவரை மருமகளை ஜன்ம விரோதியாவே ட்ரீட் பன்னுராக .அதுவும் இல்லாமையும் சேர்ந்தால் போரும் கொடுமை தாங்கவே முடியாது.இதுலே சதி மதம் எல்லாம் ஒரு குப்பையும் இல்லே மனதுதான் காரணம் . தமரி இல்லை தண்ணி போல ஓட்டும் ஒட்டாமலே இருக்கு பல மாமிய மருமவ உறவு
அம்மா அன்பு தாயே என் பொண்ணு என் பொண்ணுன்னு இப்போ சொல்றியே, நீ உன் கணவனை விட்டுட்டு, உன் பிள்ளைகளை விட்டு போனியே அப்போ உனக்கு தெரியல இது உன் பொண்ணுன்னு...... இது உன் கணவன்னு. அப்போ எந்த ஆசை உன் கண்ணை மரச்சிது. அது பணமா இல்ல வேற ஏதாவது ஆசையா இதுக்கு மேல என்னால அசிங்கமா சொல்ல முடியாது. இந்த நாட்டுல என்னோட சகோதரிகள் சில பேர் இப்படிதான் பணம் / படுக்கை சுகம் என்ற பேய்களுக்கு அடிமையாகி கட்டின கணவனையும் பெற்ற பிள்ளைகளையும் தெருவுல விட்டுட்டு போயிடறாங்க. அப்பறம் ஏதாவது இது போன்ற பிரச்சனையை வந்தபின் ஐயோ என் பொண்ணு ஐயோ என் கணவன்னு வந்து கண்ணீர் விட வேண்டியது. இதுக்கு பேசாம அந்த அசிங்கமான பேய் பிடிக்கும்போது அதை மறக்கணும் இல்ல தற்கொலை செஞ்சிக்கனும். இதை நான் நம் பெண்களை அவமதிக்கனும்ன்னு சொல்லல. நான் என் கண்ணால கண்ட சில கும்பங்கள் இப்படியும் இருக்கு. இது போல பிரச்சன வந்தப்புறம் எனக்கு மாமியார் கொடுமை, மச்சினன் கொடுமைன்னு சொல்றாங்க. நாம கல்யாணம் பண்ணிக்கும்போது என்ன பிரச்சனையை வந்தாலும் நாம பிரியக்கூடாதுன்னு சொல்லித்தான் ஒன்னு சேருவோம். அதை கடைபிடிக்கலன்ன அப்பறம் எதுக்கு அந்த மாதிரி வசனத்தை எல்லாம் சொல்லன்னு. இதுக்காக இப்போ தப்பு பண்ணின அந்த பண்ணிகளை நான் நல்லவனுங்கன்னு சொல்லல. பேத்தி பாக்குற வயசுல ஒரு பிஞ்சு பொண்ண நாசம் பண்ணின அவனுங்க ...................... அறுத்து எடுத்துடுங்க சார்.
நம்ம நாடு சரி இல்ல சரி இல்லன்னு சொல்ற என் சகோதரர்களுக்கு நான் ஒன்னு சொல்லி கொள்ள விரும்புகிறேன். நமது இந்தியா என் இந்தியா எனது தாய்நாடு எப்போதும் எல்லோர்க்கும் உண்மையாக இருக்கின்றாள். ஆனால் இங்குள்ள சில பன்றிகள் நமது தாய்நாட்டின் பேரை நாசம் ஆக்க இருக்காங்க. அந்த பன்றிகளால நம்ம இந்திய அசிங்கபடுது. தயவுசெய்து கருத்து சொல்ற சகோதரர்கள் நம்ம நாடு, நம்ம நாடுன்னு சொல்லாம சம்மந்தப்பட்ட பண்ணின்களோட பெயரை மட்டும் சொல்லுங்க. இது எனது தாய் இந்தியாவுக்காக, நமது இந்தியாவுக்காக அவளது மகன் கேட்கின்ற வேண்டுதல். தவறாக நினைக்க வேண்டாம்.
அந்த தாய்க்கு புகுந்தவீடும் நரகம் புருஷனும் கரகம் பேடியா இருப்பின் தற்கொலை செஞ்ச்சுக்குவா ஆனாலும் இவ தன இளைய மகளை நல்லமுரைலேதான் கூலிவெலை செஞ்சு வளக்கறா . புருஷனுக்கு பாத்துக்கு துப்பிள்ளே பெண்ணை மத்தவன் வூட்லெ வுட்டுருக்கான் தாயுடனே இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமா பெண்ணின் மனதையும் கெடுத்து இப்போ பாவம் அவள் வாழ்வே போச்சு ...
