"காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் வரை, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடக் கூடாது' என, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கர்நாடகா அனைத்து கட்சி குழுவினர் முறையிட்டனர்.
தமிழகம் - கர்நாடகம் இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட, காவிரி நடுவர் மன்றம், 2007ல் இறுதி தீர்ப்பை வழங்கியது. இருந்தும், அதை அரசிதழில் வெளியிடாமல், மத்திய அரசு காலம் கடத்தி வந்தது.காவிரி நதி நீர் பிரச்னை தொடர்பான வழக்கை, சமீபத்தில் விசாரித்த சுப்ரீம் கோர்ட், "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, நாளைக்குள் ( 20ம் தேதி), மத்திய அரசு, தன் அரசிதழில் வெளியிட வேண்டும்' என, இறுதி கெடு விதித்தது.இதையடுத்து, இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில், சட்ட அமைச்சகம் மற்றும் நீர்வளத் துறை அமைச்சகம் தீவிரம் காட்டியும், கடைசி நேரத்தில், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவால், அரசிதழில் வெளியிடுவது தடைபட்டது.
இந்த சூழ்நிலையில், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில், அனைத்து கட்சித் தலைவர்கள், நேற்று டில்லி வந்தனர். காலை, 11:00 மணிக்கே டில்லி வந்த இவர்கள், கர்நாடக பவனில் தங்கியிருந்தனார். மாலை, 6:00 மணிக்கு, பிரதமர் இல்லம் சென்று, அவரை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, "எந்த சூழ்நிலையிலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடக் கூடாது' என, வலியுறுத்தினர். இதுதொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும், பிரதமரிடம் அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாகவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொடர்பாகவும், சுப்ரீம் கோர்ட்டில், நிறைய வழக்குகள் நடக்கின்றன. அந்த வழக்குகளில், இன்னும் பல விபரங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.இந்நிலையில், இறுதி தீர்ப்பை, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடுவது சரியாகாது. அவசர அவசரமாக, இதுபோன்ற முடிவை, மத்திய அரசு எடுக்கக் கூடாது.காவிரி நடுவர் மன்ற செயல்பாடுகள் எல்லாம், தற்போது முடங்கிப் போயுள்ளன. காவிரி நடுவர் மன்ற தலைவராக இருந்த, என்.பி.சிங், பதவி விலகி விட்டார். அதன்பின், இரண்டரை ஆண்டுகளாக, நீதிபதிகள் சுதிர்நாராயணா மற்றும் ராவ் ஆகிய இருவர் மட்டுமே, உறுப்பினர்களாக தொடர்கின்றனர்.என்.பி. சிங், பதவி விலகிய பின், தலை இல்லா அமைப்பாக, நடுவர் மன்றம் உள்ளது. முதலில், அந்த பதவிக்கு நியமனம் நடைபெற வேண்டும்.பெங்களூரு நகருக்கு, குடி தண்ணீர் தேவை என்பது, மிக முக்கியமானது. ஆனால், அந்நகருக்கே, தற்போது, குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. அதனால், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது; இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பிரதமருடன் நடந்த சந்திப்பின்போது, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வீரப்பமொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, முனியப்பா, ரகுமான்கான் ஆகியோர் உடனிருந்தனர்.
"காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, நாளைக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டிப்புடன் கூறியிருந்தும், அந்த அறிவுருத்தலையும், கண்டிப்பையும் அலட்சியப்பப்படுத்தும் வகையில், கர்நாடகா அனைத்து கட்சி குழுவுக்கு, நேரம் தந்து, அவர்களை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துள்ளார்.
-நமது டில்லி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உங்க கிட்டே தானே இந்த தமிழ்நாட்டை ஒப்படைச்சோம். அதுக்கு என்ன செஞ்சீங்க. அதுக்கு மேலே போய் மொத்த மாநகராட்சியும் எல்லா நகராட்சியும் ஒன்னுவிடாம அனைத்து ஊராட்சியும் உங்க கிட்ட தானே மக்கள் கொடுத்தார்கள் அதுக்கு பரிகாரமா இந்த மக்களுக்கு என்ன செஞ்சீங்க. சொல்லுங்க. அப்பறம் இந்த திரோக கருணாநிதியை பத்தி பேசலாம். வாய் சவடாலில் வல்லவர்கள் இந்த அதிமுக அல்லகைகள். அது தெரிஞ்சு தான் என்னமோ இந்த அம்மா சும்மாவே இருக்குது. டயலாக் நிறுத்துங்க வேலைய பாருங்க. எல்லாத்துக்கும் கருணாநிதி தான் காரணம் என்று சொல்லிட்டு இருங்க அப்பரும் எல்லாத்துக்கும் கருணாநிதி தான் காரணம் என்றால் கருணாநிதி ஆட்சி செஞ்சப்ப எல்லாம் நல்ல படியா தான் போயிட்டு இருந்தது ஆகையால் மீண்டும் கருணாநிதிக்கே ஒட்டு போட்டால் எல்லாம் நல்ல படியாகவே முடியுமுன்னு மக்கள் யோசிச்சாங்கன்னா உங்க டப்பா டான்ஸ் அடிருமடி. பாத்து சூதானமா இரு. ஆமா எத்தனை நாள் நீங்கள் மக்களை கூமுட்டையனாகவே நினைப்பீர்கள்?
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டத்தை என் கூட்டவில்லை என்று கேட்கிறவர்களுக்கு ஒரு கேள்வி. காவிரி பிரச்சினையை தனது சொந்த மகளின் சுகத்திற்காக விட்டுகொடுத்த கருணாநிதி என்றே தீய சக்தியை ஏன் கலந்து ஆலோசிக்க வேண்டும். யாரவது ஒத்து கொள்ளும் ஒரு விளக்கம் தரமுடியுமா. 1974ல் ஒப்பந்தத்தை புதிப்பிக்க ஏன் தவறினேன்,கர்நாடக விருப்பப்பட்ட அணைகளை கட்டிக்கொள்ள ஏன் அனுமதித்தேன்,உச்ச நீதி மன்றத்தில் இருந்து வழக்கை ஏன் திரும்பபெற்றேன் என்கின்ற கேள்விகளுக்கு கருணாநிதி ஒரு வெள்ளை அறிக்கை தரட்டும். அதன் பிறகு தி மு க வை கலப்பதா வேண்டாமா என்று தீர்மானிக்கலாம். முதல்வரின் செயல்பாட்டை தி மு க, தே மு தி க, இன்னும் சில குழுக்கள் தவிர அனைவரும் ஆதரிக்கிறார்களே. உச்ச நீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்காமல் போனால் என்ன செய்வது என்றும் அம்மா முடிவுசெய்து இருப்பார்கள்.தன்னுடைய எம்பீக்கள் பிரதமரை சந்தித்து காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளி இட வேண்டாம் என்ற குற்றச்சாட்டை இன்று வரை மறுக்காத ஒருவ(நு)ருக்கு ஏன் வக்காலத்து வாங்க இத்தனை ஆர்வம்.
ஷெட்டர் ஏன் அனைத்து கட்சிகளை கூட்டிகொண்டு போகின்றார் என்றால் அவர்கள் பக்கம் வலு இல்லை நியாயம் இல்லை என்பதால் தான். நிறையை ஒருவரே அனுபவிக்கலாம்... குறையை பங்கு போட்டுகொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஷெட்டர் நடந்துகொள்கின்றார். ஷெட்டர், சோனியா, சிங்க், தலைவர், ஜெயலலிதா இவர்கள் எல்லோரும் இன்று இருப்பார்கள்.. நாளை இருக்கமாட்டார்கள். ஆனால் காவிரி என்றும் இருக்கும். அதை நினைவில் வைத்து செயல்படுங்கள்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு நிராகரிக்குமானால் அனைத்து குற்றங்களுக்கும் நீதிமன்றங்கள் அளிக்கும் தண்டனையை பொதுமக்களாகிய நாம் ஏன் ஏற்கவேண்டும். மக்கள் அமைத்த அரசே நீதிமன்ற உத்தரவை புறக்கணிக்குமானால் அது முன்மாதிரியாக ஆகிவிடாதா? சட்ட வல்லுனர்கள் இதைப்பற்றி என்ன கூறுகின்றார்கள்? தினமலர் கருத்து தெரிவிக்குமா?
மிகச்சரியானது....யார் மூலமாகவோ கர்நாடகாவின் அனைத்துக் கட்சித்தலைவர்களுக்கும் இந்த விஷயத்தில் விளக்கம் தந்து... அந்ததந்த தலைவர்கள் மூலம் அந்த மாநில மக்களுக்கு பொதுக்கூட்டங்கள் மூலம் விளக்கம் அளித்து காரியத்தை சாதிக்க வேண்டும்... இந்த வழி மூக்கை சுற்றிவளைத்து தொடுவதுபோல இருந்தாலும் இதுவே சரியான வழி.. அங்குள்ளவர்கள் மக்களின் ஓட்டுகளுக்கு (தனது பதவிகளுக்கு) பயந்தே நீதிமன்றங்களின் உத்தரவை கடைபிடிப்பதில்லை.......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.