77 தங்க பதக்கம் வென்ற பெண் தொழிலாளி : தமிழக முதல்வரை சந்திக்க விருப்பம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

வால்பாறை:விளையாட்டு போட்டியில், 77 தங்கப் பதக்கங்களை குவித்த பெண் தொழிலாளி, தமிழக முதல்வரை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்துள்ளது, சின்கோனா லாசன் டிவிஷன். தமிழக அரசுக்கு சொந்தமான இந்த தேயிலை எஸ்டேட்டில், தொழிலாளியாக பணிபுரிபவர், கணேசன். இவர் மனைவி ஜானகி, 36. இத்தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.விளையாட்டில் ஆர்வமுள்ள ஜானகி, 2000ம் ஆண்டு முதல், வனத்துறை சார்பில், மாநில, தேசிய அளவில் நடத்தப்பட்ட தடகள போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றுள்ளார்.

தொடர்ந்து, 13 ஆண்டுகளாக விளையாட்டு போட்டியில், சாதனை படைத்து வருகிறார். இந்த ஆண்டு கோவையில், மாநில அளவில் நடந்த ஓட்டப் பந்தயத்தில், 8 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இதுவரை, 77 தங்கப் பதக்கமும், 7 வெள்ளிப் பதக்கமும், 13 வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.ஜானகி கூறுகையில், ""படிக்கும் வயதிலேயே விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. திருமணத்திற்கு பிறகும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வென்றுள்ளேன். வனத்துறையில், என் தகுதிக்கு ஏற்ப, ஏதாவது ஒரு வேலை கிடைத்தால், மேலும் உற்சாகமாக இருக்கும். தமிழக முதல்வரை, நேரில் சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
20-பிப்-201310:29:31 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM முதல்வர் நிச்சயம் உங்களை பெருமைபடுதும் .........விதமாகவும் ........நல்ல வேலையும் ........தருவார் ........கவலை வேண்டாம் ...........
Rate this:
Share this comment
Cancel
raj raj - Dubai,இந்தியா
19-பிப்-201322:17:20 IST Report Abuse
raj raj உடன் பிறவா சகோதரியே "உடன் பிறவா சகோதரியை" மீறி உங்க செய்தி அம்மாக்கு போனா ,அந்த சகோதரி கு கிடைக்கும் உதவியில் ஒரு அரை சதம் உங்களுக்கு கிடைச்சா கூட வோட்டு போட்ட நீங்க உயரலாம் பெருமை படுகிறேன் உங்களுக்காக வேதனை படுகிறேன் நம் நாடு நிர்வாகம் பற்றி-நம்பிக்கை நாகராஜ் துபாய்
Rate this:
Share this comment
Cancel
Mani Ramalingam - Chennai,இந்தியா
19-பிப்-201318:46:28 IST Report Abuse
Mani Ramalingam முதல்வர் இப்பெண்ணை கண்டிப்பாக சந்திப்பார் இப்பெண்ணுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது ,கவலை வேண்டாம் வாழ்த்துக்கள் மேலும் சாதனை படையுங்கள் பெண்ணே
Rate this:
Share this comment
Cancel
priyadharshan - Chennai,இந்தியா
19-பிப்-201318:46:00 IST Report Abuse
priyadharshan வாழ்த்துக்கள். அவரது கணவர் கணேசனுக்கும் பாராட்டுக்கள். தினமலருக்கும் பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Saravanan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
19-பிப்-201317:30:20 IST Report Abuse
Saravanan மேலும் பரிசு
Rate this:
Share this comment
Cancel
ram - johor,மலேஷியா
19-பிப்-201317:01:39 IST Report Abuse
ram அம்மாவின் பிறந்த நாளில் உங்களுக்கு அழைப்பு வரும்.
Rate this:
Share this comment
Cancel
Muthu Ramaswamy - Jeddah,சவுதி அரேபியா
19-பிப்-201313:27:10 IST Report Abuse
Muthu Ramaswamy இப்பொழுது நிறைய கோரிக்கை தினமலர் மூலமாகதான் நிறை வேறுகிறது..உளவு துறை சரியாக செயல் படுகிறதோ, இல்லையோ..தினமலர் மூலமாக இது போன்ற நிறைய செய்திகள் சேர வேண்டிய இடத்திற்கு சரியாக செல்கிறது..மேலும் மேலும் பல பதக்கங்கள் வெல்ல வாழ்த்துக்கள்..கூடிய செக்கிரம் அம்மாவின் கடைக்கண் உங்கள் மேல் விழும்..."தளராத மனம்..தயங்காத துணிச்சல்...வாடிய குடும்பம்...வளராத வாழ்க்கை...வெளிவராத உண்மை..வெளிக்காட்டாத கணவர்...தினமலர் மூலம் வெளிகொணர்ந்த உண்மை..வாழ்க...வாழ்க...
Rate this:
Share this comment
Cancel
SasiRekha - Kanchipuram,இந்தியா
19-பிப்-201312:13:45 IST Report Abuse
SasiRekha மேலும் சாதனைகள் பல புரிய வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
19-பிப்-201311:49:56 IST Report Abuse
LAX சத்தமில்லாமல் சாதனைகள் - வாழ்த்துக்கள் ஜானகி. மனைவியின் விளையாட்டு ஆர்வத்துக்கு தடை போடாமல் ஜானகியை ஊக்குவித்து சாதனைகள் புரிய உதவும் அவரது கணவர் கணேசனுக்கும் பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
deepiha - dindigul,ஆப்கானிஸ்தான்
19-பிப்-201311:19:57 IST Report Abuse
deepiha ஆல் தி பெஸ்ட் சிஸ்டர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்