The last hours of the 12-year-old son of a Tamil Tiger | பதுங்குகுழியில் பிரபாகரன்மகன்; படங்கள் வெளியீடு சுட்டு கொன்றது இலங்கை ராணுவமே என ஆதாரம்| Dinamalar

பதுங்குகுழியில் பிரபாகரன்மகன்; படங்கள் வெளியீடு சுட்டு கொன்றது இலங்கை ராணுவமே என ஆதாரம்

Updated : பிப் 19, 2013 | Added : பிப் 19, 2013 | கருத்துகள் (217)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கொழும்பு : ராணுவ பிடியில் வைக்கப்பட்டு பின்னர் பிரபாகரன் மகன் சுட்டு கொல்லப்பட்டான் என்பதற்கு ஆதாரமாக சில புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் இலங்கை ராணுவ வெறியாட்டம் போர் விதி மீறல் வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது. சமீபத்தில் வெளியான படங்கள் மேலும் தமிழ் ஆர்வலர் அமைப்புகள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சானல் 4 ஏற்கனவே வெளியிட்ட போர்காட்சிகள் உலக அளவில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இந்நிலையில பிரபாகரன் மகன் கொடூரமாகத்தான் கொல்லப்பட்டுள்ளான் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. லண்டனில் இருந்து வெளியாகும் தி இண்டிபென்டன்டு என்ற ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் முன்னர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கிடந்தான். இவன் எப்படி கொல்லப்பட்டான் என்பது மர்மமாக இருந்து வந்தது. இன்றைய படங்களின் மூலம் பாலச்சந்திரன் ராணுவத்தினரின் பிடியில் வைக்கப்பட்டு பின்னர் சுட்டு கொல்லப்பட்டு அவனது உடல் வீசப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. காரணம் என்னவெனில் தற்போது வெளியாகியிருக்கிற 3 புகைப்படங்களும் ஒரே காமிராவில் ஒரு நேர இடைவெளிக்குள் எடுக்கப்பட்டது என்று நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.


ஏக்க பார்வை :


இந்த படத்தில் ராணுவ பதுங்கு குழியில் பாலச்சந்திரன் அமர்த்தி வைக்கப்பட்டுள்ளதும். இப்போது அவன் யாராவது நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்ற ஏக்க பார்வையையும் பார்க்க முடிகிறது. மேலும் அவனது கையில சின சினாக்ஸ் பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டு சாப்பிட வைக்கப்பட்டுள்ளான். பின்னர் அவன் இறந்த நிலையில் கிடக்கிறான். இது போன்ற ஆதாரங்கள் ஐ.நா., குழுவில் சமர்ப்பிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாலச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

போரில் அப்பாவி மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று இலங்கை கூறி வந்தாலும், மனித உரிமை செயளாலராக இருந்த பான் கீமுன் குழுவானது மேற்கொண்ட ஆய்வறிக்கையில் 40,000 க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


தலைவர்கள் கண்டனம் :

பிரபாகரன் மகன் குறித்த புதியபுகைப்படம் வெளியானது குறித்து தலைவர்கள் தெரிவித்த கண்டனம் வருமாறு, வைகோ: பாலச்சந்திரனை சுட்டுக்கொன்றது மனிதாபிமானமற்ற செயல். இலங்கை ராணுவத்தின் கொடூரத்தை மன்னிக்க முடியாது. நல்லக்கண்ணு: இலங்கை ராணுவத்தின் கொடூர செயல், ஐ.நா. மனித உரிமை மீறலை இலங்கை வெளிப்படுத்தியுள்ளதை காட்டுகிறது.நெடுமாறன்: இந்த கொடூர செயல் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும்.தா..பாண்டியன்: இலங்கை ராணுவத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். படத்தை பார்த்தபின்னர் எனது மனம் கொதித்து போனது.ஞானதேசிகன்: இலங்கை -இந்தியாவுடன் இணக்கமான சூழ்நிலையில் இருந்தால் தான் உதவமுடியும். இந்த கொடூர செயல் குறித்து ராஜபக்சேவுடன் விசாரிக்க வேண்டும்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (217)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
omprabhushanthi - Chennai,இந்தியா
26-பிப்-201312:29:13 IST Report Abuse
omprabhushanthi THOSE WHO SUPPORT THIS MURDER ARE NOT HUMAN BEIINGS. ALL HUMAN WILL CONDEMPT THIS MURDER NOW ATLEAST AWAKE AND FIGHT ONLY FOR HUMANITY. all those see this please post your thoght if you are human and love fellow human
Rate this:
Share this comment
Cancel
Nandakumar - Chennai,இந்தியா
26-பிப்-201300:16:35 IST Report Abuse
Nandakumar ஒருநாள் இலங்கை அரசு வீழும்
Rate this:
Share this comment
Cancel
Durai selvaraju - Al Mangaf,குவைத்
20-பிப்-201308:39:17 IST Report Abuse
Durai selvaraju மனம் வலிக்கிறது. கண்கள் கலங்குகின்றன. இந்த முகத்தை பார்த்து சுடுவதற்கு எப்படியடா மனம் வந்தது?... அந்த கபடம் இல்லாத சிறுவனின் கண்களைப் பாருங்கள்... எதற்காகவோ காத்திருக்கும் அந்த பார்வையை பாருங்கள்..கல் நெஞ்சம் கூட கரைந்திடுமே..இதற்காகவா... நீங்கள் மனிதனாகப் பிறந்தீர்கள்?....இப்படி ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை கொன்ற கயவனே... உனக்கா எங்கள் நாட்டில் கோவில் மரியாதை?... உனக்கா...சிவப்பு கம்பள வரவேற்பு?... நீ வந்ததும் உன்னைக் கண்டு அந்தத் தெய்வமே விலகிப் போயிருக்கும் கோயிலை விட்டு......
Rate this:
Share this comment
Cancel
G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ
20-பிப்-201308:22:41 IST Report Abuse
G. Madeswaran இதற்கு துணை போன எல்லா நயவஞ்சக வெறி நாய்களும், ராஜபக்சேவும் கும்பி பாதம் செய்து நரகலோகதிற்கு ஒரு நாள் அனுப்பபடுவார்கள்....வீர பிரபாகரன் வந்துகொண்டிருக்கிறார்... பாலச்சந்திரன்-வீரத்திருமகன்..
Rate this:
Share this comment
Cancel
SRIKANTH - CHENNAI,இந்தியா
20-பிப்-201308:01:03 IST Report Abuse
SRIKANTH அவன் அவன் குடும்பத்துல இருக்குரவனுக்கு இந்த மாதிரி நடந்து இருந்தா தான், அவங்களுக்கு இந்த கஷ்டம் புரிஞ்சு இருக்கும். அப்படி புரியும் வரை நாம் ஒற்றுமையா இருக்க மாட்டோம்....
Rate this:
Share this comment
Cancel
Chandrasekaran Kalimuthu - Coimbatore,இந்தியா
20-பிப்-201307:04:56 IST Report Abuse
Chandrasekaran Kalimuthu what India would doing ...after so many genocide did by srilanka government because of Indian mi help. indain government should stop helping of srilanka , one day my Tamil head prabkaran will resume back ..he will u all. am scare to say Indian
Rate this:
Share this comment
Cancel
Ram Sethuraman - Mississauga, Canada,கனடா
20-பிப்-201303:47:03 IST Report Abuse
Ram Sethuraman An International probe is required to know the complete truth behind the ings of Tamils in Sri Lanka. The probe must include Manmohan Singhs role as a partner in this crime and his support for the Sri Lankan Government in conducting this War crimes against innocent people.
Rate this:
Share this comment
Cancel
Thayagam Suresh - Umm al hasam,பஹ்ரைன்
20-பிப்-201303:42:33 IST Report Abuse
Thayagam Suresh தமிழ் நெஞ்சங்களே, உங்கள் துயில் நாடகம் கலையுங்கள் நம்மினம் அழிக்கப்படும் அவலத்தை கண்டு துடித்தெழுங்கள் சிங்களனின் ரத்தவெறிக்கு நம் இனம் காக்க போராடிய மாவீரனின் புதல்வனாம் இப்பாலகனின் மரண கொடூரம் பாருங்கள் கீழ் நோக்கி ஏந்தினாலும் "தீ" மேல் நோக்கி தான் தகிக்கும் அது போல் தான் நம் தமிழினமும்.., நம் இந்த்தை கீழே அழுத்தி தள்ளிட முயலும் சிங்களன் அறிந்திருக்கவில்லை நம்மினத்தின் குணம் மேல் நோக்கி தகிக்கும் "தீயின்" குணம் என்று. பேசாவிட்டாலும் சாகத்தான் போகிறோம் ஆகையால் எதையாவது பேசிவிட்டு செத்து போகிறேன் என்று புரட்சியாளன் ஃபனான் சொன்னான் இப்போது அதை நினைவில் வையுங்கள் இப்போது பேசாவிடின் எப்போது பேச போகிறீர்கள்? தமிழீழம் என்கிற தேசத்திற்கான விடியலும் விடுதலையும் உங்கள் பேச்சிலிருந்து வலுப்படட்டும் இன்றே பேச தொடங்குங்கள், உங்கள் நண்பர்களிடத்தில், உறவுகளிடத்தில், பணியிடத்தில், என்று இன்றே பேச தொடங்குங்கள் ஈழத்தில் அரங்கேறியவை எல்லாம் "போர்க்குற்றங்கள்" மட்டுமல்ல அவையாவும் "இனப்படுகொலைகள்" என்று...,
Rate this:
Share this comment
praj - Melbourn,ஆஸ்திரேலியா
20-பிப்-201306:52:10 IST Report Abuse
prajநம் தமிழ் தலைவர்களின் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?.. தன் இனத்துக்காக தன் செல்ல மகனை முன்னிறுத்தி போராடிய பிரபாகரன்.... வெளிநாட்டில் தப்பியோடாமல் தன் மக்களுடன் அவர்களுக்கு முன்னால் நின்று போராடிய பிரபாகரன்.... தனிமனித உரிமைக்காக போராடிய பிரபாகரன்.... உண்மையிலே..மாபெரும் வீரன்தான்...மாபெரும்..தலைவன்தான்... தமிழ் ஈழம் தோற்கவில்லை..... ...
Rate this:
Share this comment
Cancel
Zack Sakthi - london,யுனைடெட் கிங்டம்
20-பிப்-201301:59:55 IST Report Abuse
Zack Sakthi இது ரத்தத்தை உறைய வைகிற விசயம் இதுல போய் அரசியல் சார்பா பேசுறது சரில்லை ஆனால் ஸ்ரீலங்கன் அரசாங்கத்துக்கு ஒன்று மட்டும் மிச்சம் ராஜபக்சிய தூக்குலபோடுறதுக்கு கையறுதேவை படாது அவன் கழுத்தில் உள்ள சிகப்பு துண்டு போதும்
Rate this:
Share this comment
Cancel
Vasudevan - Thanjavur  ( Posted via: Dinamalar Android App )
19-பிப்-201323:52:15 IST Report Abuse
Vasudevan கொடூரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை