பேரூர்:காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு. இவர், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை, ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை கண்டறிந்துள்ளார்.கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த, இவரது படைப்பை, பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, சக ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
மாணவர் சந்துரு கூறியதாவது:காஸ் சிலிண்டர் காலியாவதை முன்பே தெரிந்து கொண்டால், "புக்கிங்' செய்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதைக் கருத்தில் கொண்டு, கண்டுபிடிப்பை உருவாக்கினேன். எடை பார்க்கும் தராசில், சுழலும் தகட்டில் ஒரு தகடு இணைக்கப்பட்டுள்ளது.காஸ் சிலிண்டரை வைக்கும் போது, அதிக எடையின் காரணமாக, சுழலும் தட்டு, இடதுபுறமாக சுழலும். சிலிண்டரில் காஸ், குறைய குறைய, வலது புறமாக சுழல ஆரம்பிக்கும். சிலிண்டரிலுள்ள கேஸ் தீரும் நிலைக்கு சற்று முன், தராசில் இணைக்கப்பட்டுள்ள ஒலி எழுப்பும் கருவி, ஒலியை எழுப்ப துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.