சென்னை: அகில இந்திய அளவில், இன்று துவங்கி இரு நாட்கள் நடக்கும், பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிப்போம்; ஆனால், பணிக்கு செல்வோம் என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்க பொதுச் செலயர் ஜான்வெஸ்லி வெளியிட்ட அறிக்கை: மத்திய தொழிற்சங்கங்கள், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதற்கு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் ஆதரவு அளிக்கிறது. ஆனால், சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில், பங்கேற்க மாட்டார்கள்.கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து, மத்திய, மாநில அரசுகள் ,கோரிக்கைகள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வலியுறுத்தி பணிக்கு செல்வர். இவ்வாறு அறிக்கையில் ஜான்வெஸ்லி கூறியுள்ளார்.
அரசியல் உள்நோக்கம்: "மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள, இரு நாட்கள் பொது வேலை நிறுத்தம், அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில், தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது' என, சங்கத்தின் மாநிலத் தலைவர் கணேசன் கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.