பதிவு செய்த நாள் :
கருத்துகள் (8)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

போக்குவரத்துத் துறை அமலாக்கப் பிரிவை வலுப்படுத்த, கருத்துரு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, அமலாக்கப் பிரிவை, தொழில்நுட்பம், அமலாக்கப் பிரிவு - பொது என, பிரித்து உருவாக்குவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும், 1.63 கோடிக்கும் மேற்பட்ட போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் இயங்குகின்றன. இவற்றில், அனுமதி சீட்டு, காப்பு சான்று, தகுதி சான்றுகளின்றி பல வாகனங்கள் ஓடுகின்றன. குறிப்பாக, ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனங்களை இயக்குவோர் எண்ணிக்கையும், அதிகரித்து வருகிறது.முறையான ஆய்வுக்கு, வாகனங்களை உட்படுத்தாததால், விதி மீறல்களும் தொடர்கின்றன. சாலை வரியை, உரிய காலத்தில் செலுத்தாத வாகனங்களால், அரசுக்கு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இதை தடுக்க, இணை, துணை போக்குவரத்து கமிஷனர் அலுவலகங்களில், அமலாக்கப் பிரிவு செயல்படுகிறது. இருப்பினும், வாகனங்களை கண்காணிக்க, போதிய அளவில், அமலாக்கப்

பிரிவினர் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

விதிமீறல்:விதி மீறல் வாகனங்களால், அரசுக்கு, பல நெருக்கடியான சூழ்நிலை ஏற்படுகிறது. இதையடுத்து, அமலாக்கப்பிரிவை வலுப்படுத்த, போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான கருத்துருவை, போக்குவரத்து துறை, அரசுக்கு அனுப்பி உள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:போக்குவரத்து துறையில், விழுப்புரம், திருச்சி, சென்னை வடக்கு, தெற்கு, தஞ்சை, சேலம், மதுரை, விருதுநகர், கோவை, ஈரோடு மற்றும் நெல்லை ஆகிய, 11 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் உள்ள அமலாக்கப் பிரிவில், மொத்தம், 32அதிகாரிகளே உள்ளனர்.வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அவற்றை கண்காணித்து, விதிமீறலை தடுக்க, தற்போதுள்ள அதிகாரிகள் எண்ணிக்கை, போதாது. இதனால், போக்குவரத்து துறை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் எண்ணிக்கையை, மூன்று மடங்குகிற்கு மேல் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அரசுக்கு கருத்துரு

Advertisement

அனுப்பி உள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன், அமலாக்கப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்ப்பு:வாகனங்களின் ஆவணங்களை ஆய்வு செய்வது, ஆய்வின் போது ஓட்டுநர் உரிமம் சரிபார்ப்பு, சாலை வரி சரிபார்ப்பு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு போன்ற பணிகளில், அமைச்சு பணியாளர்களை ஈடுபடுத்த முடியும்; மாறாக, போக்குவரத்து துறை, தொழில் நுட்ப பணியாளர்களை ஈடுபடுத்தி வருகிறது.இதற்கு, போக்குவரத்து பணியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருவதோடு, அதை மாற்றியமைக்க வேண்டும்என்றும், அவர்கள் கூறி வருகின்றனர். வாகனங்களை சோதனை செய்யும் அமலாக்கப் பிரிவை, வட்டார போக்குவரத்து அலுவலக அளவில் உருவாக்கி, அப்பிரிவில், அமைச்சு பணியாளர்களான மோட்டார் வாகன ஆய்வாளர்களை (தொழில்நுட்பம் அறியாதவர்) நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து பணியாளர்கள் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் பணிபுரியும் தொழில் நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக பணியையும் சேர்த்து கவனிக்க, ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவே, பல விதி மீறல்கள் நடக்க வழி வகுக்கிறது என்றும், அத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-பிப்-201300:40:11 IST Report Abuse
Ramki இங்கே அரபு நாடுகளில் உள்ளது போல எந்தவண்டியானாலும் மோட்டார் சைக்கிள் உள்பட வருடாவருடம் வண்டியை சாலையில் ஓட்டுவதற்கு passing செய்து , இன்சூரன்ஸ் ரினுவல் செய்து காவல் துறையில் பதிவு செய்து, பின்னர் அதற்க்கான ஸ்டிக்கரை வண்டியில் ஒட்டி பிறகு தான் கவலை இல்லாமல் சாலையில் அடுத்த ஓராண்டு வரையில் வண்டி ஓட்டமுடியும் இதுபோல கடுமையான சட்டங்களை கொண்டுவந்தால் தான் இந்தியாவில் வாகனதுறையை சீர் படுத்தமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
jay - toronto,கனடா
20-பிப்-201320:52:58 IST Report Abuse
jay அசோக் உன்மாதிரி ஆட்களால் தான் தட்டி கேட்க இல்லாமல் பொய் விட்டது ,,,
Rate this:
Share this comment
Cancel
E Sreekanth - singapur,சிங்கப்பூர்
20-பிப்-201320:05:26 IST Report Abuse
E Sreekanth இதுக்குதான் நாங்க ஆப்பு வச்சிருக்கோமில்ல.... அதன் கரண்ட் கட்டு..... எப்படி...
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
20-பிப்-201310:21:06 IST Report Abuse
Mohandhas நாலு காசு பாக்கனும்னா இந்த வேலைக்கு போறதுதான் நல்லது,, ஏற்கனவே லஞ்சம் வாங்க அரசே மறைமுகமா ஓகே சொல்லிட்டாங்க....
Rate this:
Share this comment
Cancel
ஹரிபாஸ்கர் - திருச்சி,இந்தியா
20-பிப்-201308:08:00 IST Report Abuse
ஹரிபாஸ்கர் வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம், சாலை வரி, காப்பிடு மேலும் பல ஆவணங்களை ஒருகிணைத்த எலக்ரானிக் அடையாள அட்டை மூலம் இணைத்து, அவற்றை ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் எலக்ரானிக் கார்டு ரீடர் மூலம் விரைவாக சரிபார்த்து முறையான சிக்னல் கிடைத்தால் மட்டுமே எரிப்பொருள் நிரப்பபடும், என்ற முறையை அமுல்படுத்தினால் இவற்களின் சிரமம் குறையும், வாகன திருட்டும் தவிற்கப்படும்,,,,உதாரணம், ஒட்டுனர் உரிமம் காலாவதி ஆகி இருந்தாலோ, அல்லது காப்பிடு காலாவதி ஆகி இருந்தாலோ, கார்டு ரீடரில் படிக்கும் போது, சிகப்பு விளக்கு எரிய வேண்டும், அப்படி சிகப்பு விளக்கு எரிந்தால், எரிப்பொரும் நிரப்ப முடியாது,,, பச்சை விளக்கு எரிந்தால் எரிப்பொருள் நிரப்பலாம்,,,, கூடவே விரைவில் காலாவதி ஆக விருக்கும் ஆவணம் பற்றி தெரிவித்து மஞ்சள் விளக்கும் கொடுக்து வாகன ஓட்டிகளை உஷார் படுத்தலாம்,,,,,சம்பத்தபட்டவர்கள் ஆவணம் செய்ய வேண்டும்,,,,,,வெளிநாடுகளில் Credit Bureau என்ற ஒரு அமைப்பு உள்ளது அதில் நம் அடையாள எண்ணை தெரிவித்தால் எத்தனை வங்கிகளில் கடன் வாங்கி உள்ளேன், எத்தனை வ்ங்கி கணக்கு வைத்துள்ளேன், எத்தனை முறை திவால் ஆகி உள்ளேன் என்ற விவரங்களை தெரிவித்து,,,,முடிவுகளுக்கு ஏற்றார் போல் சலுகைகளை பயன் படுத்த அனுமதி தரப்படுகின்றது,,,,இதே முறையை வாகனங்களுக்கும் செயல் படுத்தலாமே
Rate this:
Share this comment
ashok - madurai,இந்தியா
20-பிப்-201310:39:39 IST Report Abuse
ashokஇப்படி செய்தால் தான் இந்தியா முன்னேறி விடுமே போங்க பாஸ் போயி வேலையை பாருங்க...
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
20-பிப்-201316:46:45 IST Report Abuse
sethuஎங்கேயும் மெசின் கொள்ளையடித்ததாக சரித்திரம் இல்லை, அதேபோல அதை கண்டுபிடித்து சந்தைப்படுத்தியவனும் கொள்ளையடித்ததில்லை. ஆனால் அதை பயன்படுத்துபவன் மட்டுமே கொள்ளையடிக்கிறான்.அதனால நாம் முதலில் மனித இயந்திரகளை மாற்றனும். சம்பளம்,அதற்க்கான வேலை இதுதான் என அரசு வூளியர்களுக்கு புரியும் படியாக அனைத்து இடங்களிலும் கமெர வைத்து கையும் கல்வூமாக பிடித்து தண்டனை உடனேயே கிடைத்து மறுபடிக்கும் அரசு பதவிக்கு வராமல் தீர்ப்பு வழங்கினால் ஒழிய நாட்டில் நல்லது நடக்காது ....
Rate this:
Share this comment
panbalan - chennai ,இந்தியா
20-பிப்-201317:07:02 IST Report Abuse
panbalanபெட்ரோல கேன்ல வாங்கி ஊத்திக்குவோம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.