Jayalalithaa has chance meeting with Vaiko | வைகோவுடன் தமிழக முதல்வர் திடீர் சந்திப்பு: புதிய கூட்டணிக்கு அச்சாரம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வைகோவுடன் தமிழக முதல்வர் திடீர் சந்திப்பு: புதிய கூட்டணிக்கு அச்சாரம்?

Updated : பிப் 20, 2013 | Added : பிப் 19, 2013 | கருத்துகள் (126)
Advertisement
வைகோவுடன் தமிழக முதல்வர் திடீர் சந்திப்பு:புதிய கூட்டணிக்கு அச்சாரம்?,Jayalalithaa has chance meeting with Vaiko

திருப்போரூர்:மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார நடைபயணத்தை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், திருநெல்வேலியில் துவக்கி, மதுரையில் முடித்தார்.இரண்டாம் கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்து, நேற்று முன்தினம் பகல், 1:30 மணிக்கு, கோவளத்தில் நடைபயணத்தை துவக்கினார். இரவு, திருப்போரூர் வந்தடைந்தார்.காலை, 10:30 மணிக்கு, மீண்டும், திருப்போரூரிலிருந்து புறப்பட்ட வைகோ, பையனூர் சென்றார்.


முதல்வர் சந்திப்பு :

மாலை, 3:15 மணிக்கு, பையனூர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது, சென்னையிலிருந்து, சிறுதாவூருக்கு சென்ற, தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவ்வழியே வந்தார். அப்போது எதிர்புற சாலையில், வைகோ நடந்து வருவதைக் கண்டு, தன் காரை நிறுத்தும்படி கூறினார்; கார் நின்றதும் முதல்வர் கீழே இறங்கினார்.எதிர்புறம் நடந்து சென்று, வைகோவை சந்தித்தார். திடீரென முதல்வர் காரிலிருந்து இறங்கி வந்ததைக் கண்ட வைகோ, அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவருக்கு, வணக்கம் செலுத்தினார். முதல்வர், பதில் வணக்கம் தெரிவித்தார்.பின் வைகோவிடம் முதல்வர், அவரது நலம் மற்றும் குடும்பத்தினர் நலம் குறித்து விசாரித்தார். பதில் அளித்த வைகோ, முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின், நடைபயணம் குறித்து முதல்வர் விசாரித்து விட்டு, புறப்பட்டு சென்றார். முதல்வர்-வைகோ சந்திப்பு இரண்டு நிமிடங்கள் நீடித்தன.இது குறித்து ம.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் சத்யா கூறுகையில், ""இச்சந்திப்பு எதிர்பாராதவிதமாக நடந்தது. முதல்வருடனான சந்திப்பு, எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,'' என்றார்.


அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:

அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து, தே.மு.தி.க., பிரிந்து சென்றுவிட்ட நிலையில், சட்டசபை தேர்தலின் போது கூட்டணியிலிருந்து கழற்றி விடப்பட்ட ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சந்திப்பு, வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இணையும் வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தால், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., ஆகியவற்றை இணைத்து, புதிய கூட்டணியை, அ.தி.மு.க., உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசியல் பிரமுகர்கள் கருதுகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - bangalore,இந்தியா
20-பிப்-201309:56:27 IST Report Abuse
Bharathi எல்லாம் சரி, நாஞ்சில் சம்பத் என்ன செய்வார்
Rate this:
Share this comment
Cancel
Bharathi - bangalore,இந்தியா
20-பிப்-201309:55:40 IST Report Abuse
Bharathi ஜெயலலிதாவின் திட்டமிட்ட சந்திப்பு, இதை வை.கோ சரியாக பயன்படுத்தி அரசியல் செய்வாரா தெரியாது
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
20-பிப்-201309:52:56 IST Report Abuse
Pannadai Pandian தமிழகத்துக்காக ஆட்சியில் இல்லாத போதும், பலர் கட்சியை விட்டி ஓடிய போதும் மனம் தளராது அன்றும் இன்றும் என்றெண்டும் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் வைகோ தான். மற்றவர்கள் நாடகம் ஆடுகிறார்கள் என்றால் கலைஞர் செய்வது கயவாளித்தனம். ஈழ தமிழர்கள் பிரச்சனையையாகட்டும், முல்லை பெரியார், காவிரி பிரச்சனையாகட்டும், மீனவர் பிரச்சனையாகட்டும், இந்த டாஸ்மாக் பிரச்சனையையாகட்டும் வைகோவை மனதார பாராட்ட வேண்டும். இதன் காரணமாகத்தான் முதல்வரும் வைகோவை சந்தித்து மதிப்பளித்திருக்கிறார். அத்வானி, வாஜ்பாய், சோனியா, மன் மோகன் சிங் ஆகியோரை பந்தாடும் ஜெயா இந்த எளிமையான அரசியல்வாதியை சந்திக்க தானே காரை விட்டு கீழே இறங்கி பேசியது பாரதத்தில் கண்ணன் ராஜ்ஜியம், செல்வம், படை, சுற்றம் சூழார் என்று வளம் வந்த துரோனர்களுக்கு தன் கருணையை காட்டாமல் பஞ்ச பரதேசிகளாய் நாடு கடத்தப்பட்ட பாண்டவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியது தான் ஞாபகத்துக்கு வருகிறது. காரணம் பாண்டவர்களிடத்தில் தர்மம் இருந்தது, துரோனர்களால் நாட்டில் அதர்மம் தலைவிரித்தாடியது. நல்லவர்கள் நல்லவர்களுடன் இணைய வேண்டும். அது தர்ம கூட்டணி. அப்போதுதான் தர்மம் வெல்லும் நாட்டை சுரந்தும் சக்திகள் ஒழியும்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-பிப்-201301:39:17 IST Report Abuse
Nallavan Nallavan"துரோனர்களுக்கு .... துரோனர்களால்" என்று சொல்லாதீர்கள் ... பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் குரு அவர் ... "துரியோதனக் கும்பல்" என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள் ... சண்டையிட்டு ராஜ்ஜியம் ஜெயிப்பதற்குப் பதிலாக சூதாட்டம் என்ற குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தவர்கள் கவுரவர்கள் .... தீய சக்திகளுக்கு உவமானம் காட்டப்பட வேண்டியவர்கள் .... மத்தியில் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டு ஆளும் கட்சிக்கு அவப்பெயர் தேடித் தருகிறார்கள் அல்லவா ????...
Rate this:
Share this comment
Cancel
mano - Chennai ,இந்தியா
20-பிப்-201309:51:04 IST Report Abuse
mano இனி வைகோ ஜெயாவை தாக்கி பேசமாட்டார் ,வைகோவின் நடை பயணத்தின் பலனும் ஜெயாவுக்கு கிடைத்துவிட்டது லாபம் ஜெயாவுக்கு தான்
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
20-பிப்-201309:35:33 IST Report Abuse
Ambaiyaar@raja பூரண மது விலக்கு அவசியம் நேற்று இரவு திருச்செந்தூர் அருகே ஒருவர் குடி வெறியில் தன மனைவி, மகன், இரு மகள்கள், 4 பேரையும் ஆட்டு உரலால் அடித்து கொன்று விட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்து உள்ளார். எனவே வைகோ அவர்களின் உண்மையான நோக்கம் நிறைவேறவேண்டும் அவருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-பிப்-201309:27:08 IST Report Abuse
Srinivasan Kannaiya தன்மான சிங்கத்துக்கு எத்தனவாட்டி அடி பட்டாலும் புத்தி வரபோவதில்லை. அரசியல் வாதிகள் எல்லாமே சந்தர்பவாதிகள் தான்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-பிப்-201301:40:27 IST Report Abuse
Nallavan Nallavanஇதே வைகோ தன்மீது கொலைப்பழி சுமத்தி வெளியேற்றிய திமுகவுடன் உறவாடினால் அப்போதுதான் "தன்மானச் சிங்கம்" இல்லையா ???? ...
Rate this:
Share this comment
Cancel
Neelaambari Rani - Kumbakonam,இந்தியா
20-பிப்-201309:25:14 IST Report Abuse
Neelaambari Rani என்ன எல்லோரும் அரசியல் நாகரிகம் அரசியல் நாகரிகம்னு பேசுறீங்க. இதே வைகோ வை தமிழக அமைச்சர் ஒருவர் நடைபயணத்தில் சென்று பேசி இருந்தால், அவரது பதவி இருந்திருக்குமா? இருந்திருக்காதா? சிந்திக்க வேண்டிய கேள்வி. யாராவது பதில் சொல்லுங்க பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
20-பிப்-201309:23:22 IST Report Abuse
JALRA JAYRAMAN அரசியல் சித்து விளையாட்டு. இதில் நல்லவன் வெற்றி பெறுவது கடினம்.
Rate this:
Share this comment
Cancel
dharma - nagpur,இந்தியா
20-பிப்-201309:20:26 IST Report Abuse
dharma நாஞ்சிலு நாஞ்சிலு ஐயோ ஐயோ
Rate this:
Share this comment
Cancel
Kanal - Chennai,இந்தியா
20-பிப்-201309:14:33 IST Report Abuse
Kanal தனியாக நிற்போம். நாற்பது தொகுதியைபும் கைப்பற்றுவோம் என்ற வீராப்பு காற்றிலே கரையும் காலம் நெருங்கிக்கொண்டிருப்பதையே இந்த எதிர்பாராதா சந்திப்பு (?) எடுத்துக்காட்டுகிறது. தேவை என்றால் வலியச் சென்று வழிவதும் தேவையில்லாவிட்டால் குப்பை போல தூக்கி எறிவதும் மம்மிக்குக் கைவந்த கலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை