உள்துறை அமைச்சர் ஷிண்டேக்கு எதிராக போராட்டம்: பா.ஜ., திட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"இந்து தீவிரவாதம்' எனக்கூறிய, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேவுக்கு எதிராக, பார்லிமென்ட்டில் போராட்டம் நடத்த, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. "சுஷில் குமார் ஷிண்டே, தன் பேச்சுக்காக, பகிரங்க மன்னிப்பு கேட்கும்வரை, எங்களின் போராட்டம் தொடரும்' என, பா.ஜ., அறிவித்துள்ளது.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், நாளை துவங்கவுள்ளது. "ஹெலிகாப்டர் ஊழல், இந்த கூட்டத் தொடரில், பெரும் புயலை கிளப்பும்' என, எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத் தொடரில், பா.ஜ., - எம்.பி.,க்கள், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க, கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம், நேற்று நடந்தது.இந்த கூட்டத்துக்கு, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி தலைமை வகித்தார்.

கூட்டம் முடிந்த பின், கட்சியின் செய்தி தொடர்பாளர், ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:பட்ஜெட் கூட்டத் தொடரில், கட்சியின் அணுகுமுறை குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, நாளை காலை நடக்கவுள்ள, தே.ஜ., கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.

"இந்து தீவிரவாதம்' என்ற வார்த்தையை பயன்படுத்திய, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேவுக்கு எதிராக, நாடு முழுவதும், போராட்டங்கள் நடத்தப்படும். தான், அவதூறாக தெரிவித்த கருத்துக்களுக்கு, இதுவரை, ஷிண்டே, மன்னிப்பு கேட்கவில்லை.அவர் மன்னிப்பு கேட்கும் வரை, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரிலும், அவருக்கு எதிராக போராடுவோம். இந்த போராட்டம், எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை, தற்போது தெரிவிக்க முடியாது. ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சர் மட்டுமல்ல; லோக்சபா சபை முன்னவர் என்ற பொறுப்பும், அவருக்கு உள்ளது. எனவே, தான் தெரிவித்த கருத்துக்கு, அவர், மன்னிப்பு கோர வேண்டும். ஹெலிகாப்டர் ஊழல் குறித்த விஷயத்தையும், பார்லிமென்ட்டில் எழுப்புவோம்.

ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என, மத்திய அரசின் ஊழல்கள், ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகின்றன. இந்த ஊழல் விவகாரம் குறித்து, ஒவ்வொரு மத்திய அமைச்சரும், ஒவ்வொருவிதமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்."ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில், முறைகேடு நடந்திருந்தால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்' என, ராணுவ அமைச்சர், அந்தோணி கூறுகிறார். "ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை' என, வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறுகிறார். யார் கூறுவதை, மக்கள் நம்ப வேண்டும் என, தெரியவில்லை.

இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர், மார்கண்டேய கட்ஜு, ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர்.அரசியல் பற்றிய விஷயங்களை, அவர் பேசுவது நல்லதல்ல. குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கு எதிராக, மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்த கருத்துக்கள், கண்டனத்துக்குரியவை. இவ்வாறு, ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Advertisement


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
20-பிப்-201311:42:34 IST Report Abuse
Baskaran Kasimani "யார் கூறுவதை, மக்கள் நம்ப வேண்டும் என, தெரியவில்லை" - திராவிட முன்னேற்ற காங்கிரசில் முகவுக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் சொல்வதை நம்பலாம். சிலவேளைகளில் பசி ( எல்லாத்துறைக்கும் பொதுவான அமைச்சர் ) சொல்வதையும் நம்பலாம். மீதம் அத்தனையும் டம்மிகள் ....
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
20-பிப்-201310:26:00 IST Report Abuse
R.BALAMURUGESAN ...சுஷில் குமார் ஷிண்டே, பங்காரு லட்சுமணன் போன்றவர்கள் என்றால் பிஜேபி காரர்கள் வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்ப்பார்கள்... ஏன் என்று யாவருக்கும் தெரியும் அய்யா... அது இந்தியாவின் மற்ற முடியாத தலைவிதி...
Rate this:
Share this comment
Cancel
Unmaiyalan - chennai,இந்தியா
20-பிப்-201307:49:37 IST Report Abuse
Unmaiyalan அயோக்கிய பயளுகளுக்கு லொல்ல பாரு , யகதலாத பாரு. உண்மைய சொன்னால் உங்களுக்கு ஏண்டா போருக்க முடியலா ? பேரணி சென்று முற்றுகையாம் மதவாதிகள் அயோக்கியர்கள்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-பிப்-201301:17:35 IST Report Abuse
Nallavan Nallavanஎன்ன செய்வது உண்மையாளரே .... தீவிரவாதிகளை உற்பத்தி செய்ய மதரசாக்கள் என்னும் உற்பத்திக் கூடத்தை நடத்தத் தெரியாமல் இப்போது இவர்கள் புலம்பி என்ன பிரயோஜனம் ???? இல்லையா பாய் .......
Rate this:
Share this comment
SULAIMAN - TANJORE,இந்தியா
21-பிப்-201322:30:10 IST Report Abuse
SULAIMANபொய்யை சொல்லி கெட்டவராக மாராதீங்க...
Rate this:
Share this comment
Cancel
Krishnakumar - Nellore,இந்தியா
20-பிப்-201307:18:47 IST Report Abuse
Krishnakumar ஹிந்துக்கள் l சார்பாக பேச பிஜேபி யாவது இருக்குதே ...... ஹிந்துக்கள் நம்பிக்கைக்கு எதிராக பேசுவோரை புறம் தள்ளுவோம்.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
20-பிப்-201300:51:09 IST Report Abuse
Thangairaja ஷிண்டேவை பயன் படுத்தி அடுத்து ஏதோ காரியம் சாதிக்க திட்டமா.......ப சி உள்துறை மந்திரியாக இருந்த வரை ஒன்றும் ஆட்ட முடியவில்லை......
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
20-பிப்-201300:24:38 IST Report Abuse
mangai இந்து-னா திருடன்னு ஒருத்தர் சொன்னாரு அப்படியே அதையும் கொஞ்சம் விசாரிங்க ... எங்களை கண்டால் இவங்களுக்கு இளக்காரமா இருக்கு.. கோயிலுக்கு போக மாட்டாங்களளாம்.. ஆனா குல்லா போட்டு கஞ்சி குடிப்பார்களாம் கேட்டால் பகுத்தறிவாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்