லண்டன்: பாராசிட்டாமல் மாத்திரை உட்கொள்ளும் அளவு குறைக்கப்பட்டதால், 600 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வலிநிவாரணியாக பயன்படும் பாராசிட்டாமல் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்வதால், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு, பலர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க, பிரிட்டனில் பாராசிட்டாமல் மாத்திரை விற்பனை குறைக்கப்பட்டது. மருந்தகங்கள் மூலம், 32 பாராசிட்டாமல் மாத்திரைகளும், மருந்தகம் அல்லாத இடங்களில், 16 மாத்திரைகளும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என, கடந்த, 1998ல் பிரிட்டன் அரசு, உத்தரவு பிறப்பித்திருந்தது.
இது குறித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கேத் ஹாட்டன் குறிப்பிடுகையில், "இந்த உத்தரவின் மூலம் பாராசிட்டாமல் உட்கொள்வது குறைக்கப்பட்டதால், 600 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இந்த மாத்திரைகளை இன்னும் குறைப்பதன் மூலம், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மேலும் பலர் உயிரிழப்பதை கட்டுப்படுத்த முடியும்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.