புதுடில்லி: மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையேயும், கடும் சட்ட போராட்டத்திற்கும் இடையே இன்று காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது. மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து அரசாணை நகல் தமிழகத்திற்கு வழங்கப்பட உள்ளது. தனக்கு மனநிறைவை தருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழகம் - கர்நாடகம் இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1989ல், காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம், 1990ல், இடைக்கால தீர்ப்பை வழங்கியது.அதை, உடனடியாக அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன்பின், 2007ல், நடுவர் மன்றம், தன் இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆனால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உடனடியாக, சுப்ரீம் கோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்தப் பிரச்னையால், இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடாமல், ஆறு ஆண்டுகளாக, மத்திய அரசு காலம் கடத்தி வந்தது.இந்நிலையில், இந்த விவகாரத்தில், சமீபத்தில் தலையிட்ட, சுப்ரீம் கோர்ட், "இன்றைக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.உடன், இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில், மத்திய சட்ட அமைச்சகமும், நீர்வளத்துறை அமைச்சகமும் தீவிரம் காட்டின. அதனால், சில நாட்களுக்கு முன்னதாகவே, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகலாம் என, நம்பப்பட்டது. ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவால், அரசிதழில் வெளியிடுவது தடைபட்டது.
இந்நிலையில் இன்று காவிரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதற்கான அரசாணை நகல் தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.இனி தமிழகத்திற்கு தடையின்றி 419 டி.எம்.சி. தண்ணீர் தடையின்றி கிடைக்கும்.
நீர்பங்கீடு எவ்வளவு
அரசிதழில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. ,கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி., கேரளாவிற்கு 30 டி.எம்.சி. , புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., தண்ணீர் தடையின்றி கிடைக்கும்.
மனநிறைவை தருகிறது: ஜெ.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது: காவரி நடுமன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது எனக்கு மன நிறைவை தருகிறது. 22 ஆண்டு கால போராட்டத்தி்ற்கு கிடைத்த வெற்றி .இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி,தமிழக மக்களின் போராட்டத்திற்கு நீதி கிடைத்துள்ளது .இனி கர்நாடகா தண்ணீர் இல்லை என கைவிரிக்க முடியாது என்றார்.
நாராயணசாமி வரவேற்புகாவரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியானது மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறுகையில், தமிழக மக்களுக்கு மிகுந்த மகி்ச்சியளிக்கிறது. இதன் மூலம் காவிரி விவகாரத்தில் சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.
கர்நாடகாவில் போராட்டம்
காவிரி நடுவர்மன்ற குழுவின் தீர்ப்பை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகா ரட்சக வேதிக அமைப்பின் சார்பில் பெங்களூரு ரயில் நிலையம், மைசூர் ரயில் நிலையம் ஆகியவற்றில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று சொன்னால் அது முற்றிலும் உண்மை. அதை மீறி சாதனை ஆ .... ஊ என்பதெல்லாம் ஓவர். மழை பொய்த்து விட்ட நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்று விட்ட நிலையில் அரசு பொறுப்பில் இருப்பவர் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார். கோர்ட்டுக்கு போனது அவரது கடமை. கோர்ட் நம்மிடம் இருக்கும் நியாயத்திற்கு செவி சாய்த்து ஆணையிட்டது.
"""நீதி மன்றம் மூலம் மத்திய அரசை நிர்பந்தித்து வெற்றி கண்டுள்ளார், வாழ்த்துக்கள் """ என்று கருணாநிதியின் நிழலாக கருத்து சொல்லிவரும் மரியாவே இங்கு கருத்து தெரிவித்து இருப்பது புல்லரிக்கவைக்கின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா வெற்றி கண்டுள்ளார் என்று நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள விஷயம் உங்கள் பாஸ் .. .. அதான் , மஞ்சதுண்டுகாரருக்கு தெரிந்தால், உங்களுக்கு டின் கட்டிவிடுவார்கள் ஜாக்கிரதை. குஷ்பு கதை மறந்து விட்டதா?.
சும்மா சொல்லகூடாது , காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று போராடி, சுப்ரீம் கோர்ட் வரை சென்று , வெற்றிகனியையும் பறித்து தமிழக மக்களுக்கு காணிக்கையாக்கிவிட்டாரே ஜெயலலிதா . தன் மனைவி, மகன்கள், மகள்கள், பேரன்கள் என்று சின்ன வட்டத்தை விட்டு வெளியே வர முடியாமல் சுயநலமாக இருப்பவர்களுக்கு மத்தியில் , திடமான முடிவெடுத்து , போராடி - சாதித்து , தான் யார் என்று இந்த உலகுக்கு காட்டிவிட்டார் ஜெயலலிதா.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.