DISTRICT NEWS | எப்போது!கூவத்துடன் விருகம்பாக்கம் கால்வாய் இணைப்பு கழிவுநீரும் குப்பையும் தேங்குவதால் மக்கள் அவதி| Dinamalar

தமிழ்நாடு

எப்போது!கூவத்துடன் விருகம்பாக்கம் கால்வாய் இணைப்பு கழிவுநீரும் குப்பையும் தேங்குவதால் மக்கள் அவதி

Added : பிப் 20, 2013 | கருத்துகள் (1)
Advertisement
எப்போது!கூவத்துடன் விருகம்பாக்கம் கால்வாய் இணைப்பு கழிவுநீரும் குப்பையும் தேங்குவதால் மக்கள் அவதி

சென்னை:கூவம் ஆற்றில், விருகம்பாக்கம் கால்வாயை, இணைக்கும் திட்டத்தை, பொதுப்பணித்துறை கிடப்பில் போட்டு உள்ளது. அரசின் பிற துறைகள்
ஒத்துழைக்க மறுப்பதால், திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
சென்னை, நெற்குன்றத்தில் துவங்கி, முனியப்பா நகர், சின்மயா நகர், சாலிகிராமம், வடபழனி, அரும்பாக்கம், சூளைமேடு வழியாக அமைந்தகரை பகுதி யில், கூவத்துடன் இணைகிறது, விருகம்பாக்கம் கால்வாய். இது துவக்கத்தில் செஞ்சேரி கிராம குடிநீர் கால்வாய் என, அழைக்கப்பட்டது. சென்னை நகரில், மக்கள் தொகை அதிகரித்த போது, இந்த கால்வாய் மாசடைந்தது.
இதனால், கால்வாயையொட்டி உள்ள குடியிருப்புகளில் இருந்து, வெளியேறும் மழை நீரை வெளியேற்றும் வகையில், கால்வாய் மாற்றப்பட்டது. தற்போது, குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த கால்வாயில் விடப்படுகிறது.
கூடுதல் கால்வாய்
குடியிருப்பு பகுதிகளை தொட்டுக்கொண்டு கால்வாய் செல்வதால், குப்பை நிறைந்துள்ளது. பல இடங்களில் ஆக்கிரமிப்பும் உள்ளது. இதனால், மழைநீர் வழிந்தோடுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. கடந்த, 2008 ம் ஆண்டு மழையில், இந்த கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால், கால்வாயை ஒட்டிய பகுதிகளில்
வசித்தோர் மிகவும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, கால்வாயில் அதிகளவில் உபரிநீர் வருவதை சமாளிக்கும் வகையிலும், நீர் விரைவாக செல்லும் வகையிலும், கால்வாய் வழித்தடமான, விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியில் இருந்து, ஒரு கிளை கால்வாய் அமைப்பது என, 2010ல், பொதுப் பணி துறை முடிவு
செய்தது.
44 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், சின்மயா நகர் காளியம்மன் கோவில் சாலை வழியாக, கோயம்பேடு நூறடி சாலையை கடந்து, கோயம்பேடு மேம்பாலம் அருகே, கூவம் ஆற்றுடன் கால்வாயை இணைக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டம் போடப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அதை செயல்படுத்துவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
இந்த திட்டம் உருவாக்கப்பட்ட அதே நேரத்தில், இந்த கால்வாயில் மழைநேரத்தில் வரும் தண்ணீரை கட்டுப்படுத்த, மற்றொரு திட்டமும் உருவாக்கப்பட்டது. மழைகாலத்தில் அளவுக்கு அதிகமாக வரும் தண்ணீர், கால்வாய் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பாய்ந்து சேதம் ஏற்படுவதை தடுக்க, இருபுறமும் பக்கவாட்டு தடுப்புச் சுவர் அமைப்பதுதான் அந்த திட்டம்.
குப்பையை, கால்வாயில் வீசுவதை தடுக்கும் வகையிலும், இது உருவாக்கப்பட்டது. திட்டத்தின் படி, கால்வாயில், 12 கி.மீ., தூரத்திற்கு, இருபுறமும் பக்கவாட்டு சுவர் கட்டும் பணியை, பொது பணித்துறை, 2010ம் ஆண்டு துவங்கியது. இதை, அமல்படுத்துவதிலும் தடங்கல் ஏற்பட்டது.
முதற்கட்டமாக, 3 கி.மீ., தூரத்துக்கு மட்டுமே சுவர் கட்டப்பட்டது. கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை காரணமாக காட்டி, 9 கி.மீ., தூரத்திற்கு, திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதனால், கால்வாயில் குப்பை கொட்டுவது நிரந்தரமாகி, ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி,
சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது.
இதனால், விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி பகுதிகளில் நிலத்தடி நீர், மாசு அடைவதாக அந்த பகுதிவாசிகள் தெரிவித்தனர். கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அப்பகுதிவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
காலதாமதம்
விருகம்பாக்கம் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் அருமைநாதன்
கூறியதாவது:
விருகம்பாக்கம் கால்வாயில் குப்பை கொட்டாமல் இருக்க, பாதுகாவலர்களை நியமித்து, குப்பை போடுவோருக்கு
அபராதம் விதிக்க வேண்டும். கால்வாயை கூவத்துடன் இணைக்கும்
திட்டத்தை செயல்படுத்ததால், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து
வருகிறது. அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை, சம்பந்தப்பட்ட துறை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கால்வாய் செல்லும் வழித்தடத்தில், இருபுறமும் சுவர் எழுப்பும் பணிக்கு, ஆக்கிரமிப்புகளே தடையாக உள்ளன. கால்வாயை கூவத்துடன் இணைக்கும் பணிக்கு, மின்சார வாரியம், மாநகராட்சி, பி.எஸ்.என்.எல்., துறைகள், ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளன.
குடிநீர் வாரியத்தின் அனுமதி கிடைக்க வில்லை. இதனால், திட்டம் துவங்குவதில், கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. அத்துறையினரின் அனுமதி கிடைத்த உடன், திட்டத்தை விரைந்து
செயல்படுத்துவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ர.மணி. - சென்னை.,இந்தியா
21-பிப்-201310:22:16 IST Report Abuse
ர.மணி. கூடிய விரைவில் !!!!!!????? அனுமதி கிடைத்து விடும் கவலை வேண்டாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை