கோவை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவான, வட மாநில ஆசாமிக்கு கோவை மகளிர் கோர்ட் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தது.
கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அப்பகுதியில் வசிக்கும் தர்பேந்திரா, த்ரிலோகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் த்திரிலோகேஷ் 18 வயதுக்கு குறைந்தவர் என்பதால் கோவை சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மகளிர் கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து விட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்பு நடக்க இருந்தது. தற்போதைய சூழலில் இவ்வழக்கில் நிச்சயம் தனக்கு தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில், கடந்த இரண்டு முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட தர்பேந்திரா கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகவில்லை. அதிருப்தி அடைந்த நீதிபதி சுப்பிரமணியம், தர்பேந்திராவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.