மதுரை: பாஸ்போர்ட் பெற, போலி ஆவணங்களை சமர்ப்பித்த விண்ணப்பத்தாரர்கள் மீது, வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மதுரை, நெல்லை பாஸ்போர்ட் சேவை மையங்களில், தினமும் நூற்றுக்கணக்கானோர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். இதற்காக அவர்கள் தாக்கல் செய்யும் ஆவணங்களில் சில, போலியானவை என தெரியவந்துள்ளது. கடந்தாண்டு முதல் இதுவரை 104 போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், பிறப்பு சான்றுகள்தான் (78 ஆவணங்கள்) அதிகம். ராமநாதபுரத்தில் அதிகபட்சமாக 41 ஆவணங்களும், தூத்துக்குடியில் 18, கன்னியாகுமரியில் 13 போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேபோல், திருப்பூர் 1, நெல்லை 7, மதுரை 9, திண்டுக்கல் 4, தேனி 1, விருதுநகர் 3, சிவகங்கை 4, புதுக்கோட்டை 3 போலி ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் மீது மோசடி பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய, அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. "வேறு ஒருவர் மூலம் பெறப்பட்ட சான்று, போலியாக இருந்தாலும் அதற்கு விண்ணப்பத்தாரரே பொறுப்பு' என பாஸ்போர்ட் அலுவலகம் எச்சரித்து உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.