மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, நேற்று, தரிசனம் செய்தார். ராஜாத்தி, நேற்று காலை, 9:00 மணிக்கு, விமானம் மூலம் மதுரை வந்தார். விஜயா தாயன்பன் உட்பட, நான்கு பேர், அவருடன் வந்தனர். அவர்களது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், கட்சியின் முக்கிய நிர்வாகி சிலர் மட்டும், விமான நிலையம் சென்று வரவேற்றனர். காலை, 10:00 மணிக்கு, பிள்ளையார்பட்டிக்கு சென்று, விநாயகர் கோயிலில், மதியம், 12:00 மணி வரை தரிசனம் செய்தார். மாலை, 4:00 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற ராஜாத்தி, தன் வருகை போலீசுக்கு கூட தெரியக் கூடாது என்று, தரிசனம் செய்ய, வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழியை தவிர்த்து, 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண சீட்டு வாங்கி, தரிசனம் செய்தார். அங்கு, கனிமொழி உட்பட குடும்பத்தினர் பெயருக்கு, சிறப்பு அர்ச்சனை செய்தார். அவருடன் வந்தவர்களும், சிறப்பு தரிசன கட்டண சீட்டு பெற்றே, தரிசனம் செய்தனர். மாலை, 4:15 மணி வரை கோவிலில் இருந்த அவர், பின் விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை கிளம்பி சென்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2 ஜி மெகா ஊழலில் ராசா மீதும் கனிமொழி மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்ய அமலாக்கத்துறை anaiththu ஏற்பாடுகளையும் செய்துவிட்டது, ஓரிரு வாரத்தில் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்ய உள்ளார்கள் என்று நேற்று தான் பத்திரிகையில் செய்தி வந்தது. அதன் எதிரொலியோ ?. சுருட்டிய கோடிகளை அரசிடம் கொடுத்துவிட்டு வந்து மீனாட்சி அம்மனை வழிபட்டாலாவது ஏதாவது விமோசனம் கிடைக்கும், சுருட்டிய பணத்தை அப்படியே அமுக்கிவைத்துகொண்டு இப்படி கோவில் கோவிலாக ஏறி இறங்கினாலும் ஒன்றும் வேலைக்கு ஆகாது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.