Advertisement
ஆடம்பர விமான வசதி அதிநவீன சொகுசு பஸ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2013,23:05 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 20,2013,23:39 IST

புதுடில்லி:தனியார் ஆடம்பர, "ஜெட்' விமானங்களில் உள்ளது போன்ற, அதிநவீன வசதிகள் கொண்ட, ஆடம்பர பஸ், டில்லியில் விரைவில் இயக்கப்பட உள்ளது.

விமானங்களில் உள்ள வசதிகளை போலவே, பஸ்களிலும் இருக்காதா என, ஏங்கும் சாதாரண பயணிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில், டில்லியில், அதிநவீன வசதியுடன் ஆடம்பர பஸ் இயக்கப்பட உள்ளது.அசோக் லேலேண்ட் நிறுவனமும், "டூ பிள்ல்ஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பும் இணைந்து, இந்த ஆடம்பர பஸ்சை உருவாக்கியுள்ளன. இந்த பஸ்சிற்கு, "அசோக் லேலண்டு லக்சுரா மேஜிக்கல் இந்தியா' என, பெயரிடப்பட்டுள்ளது.இந்த பஸ்சில், குளிர்விக்கப்பட்ட மற்றும் சூடான உணவு வகைகள், நவீன பொழுதுபோக்கு சாதனங்கள், குளியலறை, உடற்பயிற்சிக்கூடம் போன்ற பல அதிநவீன வசதிகள் உள்ளன.

ஒன்பது பேர் பயணிக்க கூடிய இந்த ஆடம்பர பஸ்சின் வடிவமைப்பாளர், திலீப் சாப்ரியா கூறியதாவது:ஆடம்பர, தனியார், "ஜெட்' விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளை போல, இந்த பஸ்சில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்பது பேர் பயணிக்க முடியும் இந்த வாகனத்தில், விமானத்தை விட குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.காலையில் டில்லியில் இருந்து புறப்பட்டு, ஆக்ரா சென்று, அன்று மாலையிலேயே டில்லி திரும்ப, 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.இவ்வாறு திலீப் சாப்ரியா தெரிவித்தார்.

டில்லியை சேர்ந்த மான் டிராவல்ஸ், இந்த ஆடம்பர பஸ்சை சுற்றுலா பயணங்களுக்கு ஏற்பாடு செய்ய உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில், இந்த ஆடம்பர பஸ், டில்லியிலிருந்து இயக்கப்பட உள்ளது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (11)
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
24-பிப்-201315:13:13 IST Report Abuse
K.Balasubramanian 9 நபர் டெல்லி ஆக்ரா பயணம் என்பது வெளி நாடு பயணிகளின் தேவையின் சேவை . கூடுதல் காலம் நடத்த பிரயாணிகள் கிடைக்க வில்லை எனில் டப்பா பஸ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
jasmine banu - madras,இந்தியா
23-பிப்-201313:02:36 IST Report Abuse
jasmine banu பஸ் ரோட்லே ஓடுமா இல்லை மேல பறக்குமா??
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
23-பிப்-201304:23:06 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே சாமானிய மக்கள் அப்படீன்னு யார சொன்னீங்க? 65000 ரூபாய் சாமானியர்களுக்கு சும்மாவா/ இல்லை கக்கூஸ் மன்னர்களான சாண்டா,பாண்டா சிங்குக்க?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Rao - Doha,கத்தார்
22-பிப்-201306:26:22 IST Report Abuse
Rao ஊர் சொத்த கொள்ளை அடிச்சவன்(எந்த நாதாரிங்கள சொல்றன்னு மக்களுக்கு புரிஞ்சிருக்கும்) மட்டும் தான் இந்த பஸுல சவாரி செய்யமுடியும். 65000 ஆயிரமா,..... யப்பா தலய சுத்துதுரா சாமி.... ராவ் தொஹா, கத்தார்.
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
22-பிப்-201300:26:37 IST Report Abuse
Venkatesh R Venkatesh 65000/- ரூபா கொடுத்து இந்த பஸ்ல போறதுக்கு பிளைட்லேயே பிசினஸ் கிளாஸ்ல போயிட்டு வரலாமே? எந்த விஷயம் தேவையோ அதை ஆடமரமாக செய்யவேண்டுமே ஒழிய,பஸ்ல போகும்போது எதுக்கு குளியல்,உடற்பயிற்சி புண்ணாக்கு எல்லாம்,யோசனையில்லாத செயல்.WASTE
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
bala - tuty  ( Posted via: Dinamalar Android App )
21-பிப்-201314:07:51 IST Report Abuse
bala its costly compare with flight fare.
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
21-பிப்-201314:07:13 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM இந்த பஸ் சுளையும் ...........எங்கு வேனாலும் .......ஏறி ..........எங்கு .....வேனாலும் ......இறங்கலாமா........???????? ஹெலிகாப்ட்டர் போல ......................
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
GURU.INDIAN - beiruth,லெபனான்
21-பிப்-201311:36:13 IST Report Abuse
GURU.INDIAN டெல்லியில் இருந்து ஆக்ரா சென்றுவர 65.000 ஆயிரமா ? இதுதான் சாமானிய மக்களின் கனவா ? மொத்த குடும்பமே 650 ரூபாயில் பொய் வந்து விடுவோம்
Rate this:
1 members
1 members
21 members
Share this comment
R BALA KRI - NewDelhi,இந்தியா
21-பிப்-201309:52:10 IST Report Abuse
R BALA KRI இவ்வளவு காஸ்ட்லியா இருந்தா எங்கள மாதிரி சாமானிய மக்கள் எப்படி பயணம் செய்ய முடியும்?
Rate this:
3 members
0 members
11 members
Share this comment
arivaali - chennai,இந்தியா
21-பிப்-201306:19:18 IST Report Abuse
arivaali பேருந்து எப்படி இருந்தாலும் நம்ம ஊர் சாலையில்தானே ஓடப்போகிறது?
Rate this:
1 members
0 members
41 members
Share this comment
Gopi Ka - blr,இந்தியா
24-பிப்-201300:50:03 IST Report Abuse
Gopi Ka நினைவு இருக்கட்டும் நம்ம ஊர் மண் லாரிய தாண்டிதான் போகணும் ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.