3 Sisters Raped, Bodies Dumped in Well | பசியால் துடித்த சிறுமியர் பலாத்காரம்: கொன்று கிணற்றில் வீசிய கொடூரர்கள்| Dinamalar

பசியால் துடித்த சிறுமியர் பலாத்காரம்: கொன்று கிணற்றில் வீசிய கொடூரர்கள்

Added : பிப் 20, 2013 | கருத்துகள் (87)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பசியால் துடித்த சிறுமியர் பலாத்காரம்: கொன்று கிணற்றில் வீசிய கொடூரர்கள்,3 Sisters Raped, Bodies Dumped in Well

மும்பை :மகாராஷ்டிராவில், வறுமையால் பாதிக்கப்பட்டு, பசியால் வீட்டை விட்டு வெளியேறிய, மூன்று சகோதரிகளை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது.

நாக்பூர் அருகே உள்ள பாந்தாரா மாவட்டத்தின், லக்னி என்ற கிராமத்தை சேர்ந்த, கணவனை இழந்த பெண்ணுக்கு, 11, 9 மற்றும் 5 வயதில், பெண் குழந்தைகள் இருந்தன.போதுமான வருமானம் இல்லாததால், வீடுகளில் வேலை பார்த்து வந்த அந்த பெண், கடந்த, 14ம் தேதி வேலைக்கு சென்று விட்டார். தாய் வர தாமதம் ஆனதால், பசியால் துடித்த குழந்தைகள், வீட்டை விட்டு வெளியேறி, சாலையில் சென்று கொண்டிருந்தன.அங்கிருந்த, "தாபா' எனப்படும், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டலில், சாப்பாடு கேட்டுள்ளனர். அங்கிருந்த சிலர், சிறுமியர் என்றும் பாராமல், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொன்று, அருகில் இருந்த கிணற்றில் வீசி எறிந்துள்ளனர்.

கிணற்றில் இருந்து துர்நாற்றம் வரவே, கிராமத்தினர் சென்று பார்த்த போது, மூன்று சிறுமியர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. போலீஸ் நடத்திய விசாரணையில், "வறுமை காரணமாக சிறுமியர் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்' எனக் கூறி, கொலை வழக்கை, தற்கொலை வழக்கமாக மாற்ற பார்த்துள்ளனர்.சிறுமியர் பசியால் அலைந்ததை அறிந்த கிராமத்தினர், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு, சிறுமியர் உடலை பரிசோதனை செய்ய வைத்தனர். பரிசோதனையில், சிறுமியர் மூவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மது பாட்டில்கள், சிறுமியரின் செருப்பு, கிழிந்த உடைகளை கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து, நாக்பூர் போலீஸ் ஐ.ஜி., ராஜேந்திர சிங் கூறும் போது, ""இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. ஏழு தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகிறோம். நூறு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்,'' என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
22-பிப்-201300:13:13 IST Report Abuse
Venkatesh R Venkatesh இந்த மிருகங்களை நடு ரோட்டில் கட்டிவைத்து கல்லால் அடித்துக்கொள்ளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
21-பிப்-201315:49:54 IST Report Abuse
Rangarajan Pg சமீப காலமாக பாலியல் வன்முறை அதிகரித்து விட்டதே. ஏன்? அதுவும் ஏதுமறியா சிறுமிகளையே குறி வைத்து இந்த குற்றங்கள் நிகழ்கின்றனவே. சமீபத்தில் டில்லியில் நடந்த சம்பவத்திற்காக இவ்வளவு பெரிய போராட்டத்திற்கு பிறகும் பாலியல் கொடுமைகள் நின்ற பாடில்லையே? அதிகரித்து தானே இருக்கிறது. எங்கு தவறு நடக்கிறது. மது பழக்கமா, அல்லது சமுதாயமே ஒட்டுமொத்தமாக சீரழிந்து கொண்டிருக்கிறதா? எப்படி இருந்தாலும் தண்டனை கிடையாது என்ற தைரியம் தான் இதை போன்ற கயவர்களை கட்டவிழ்த்து விடுகிறது. தண்டனைகள் மிக மிக கடுமையாக இருக்க வேண்டும் அதுவும் உடனே நிறைவேற்றப்பட வேண்டும். அந்த பரதேசி நாய்களை சுட்டு தள்ள வேண்டும் அவர்களுக்காக பரிந்து கொண்டு வரும் மனித உரிமை ஆர்வலர் நாய்களையும் சுட்டு தள்ள வேண்டும். மனம் மிக மிக வேதனை அடைகிறது. மனிதர்கள் தானா இவர்கள்????????
Rate this:
Share this comment
Cancel
iyakkunar - chennai,இந்தியா
21-பிப்-201315:39:34 IST Report Abuse
iyakkunar ஆண்டவா இது போன்ற வன்மம் உள்ள மனிதர்களை கொல்ல கொடிய நோய்களை அனுப்பிவிடு இல்லையேல் கண்ணகி மதுரையை எரித்த போது குற்றம் அறியா மனிதர்கள் ,குழந்தைகள் இவர்களை தவிர்த்து அனைவரும் எரிந்து சாம்பலாகட்டும் என்று சாபம் விட்ட அழித்தது போல இந்த பூமியை அழித்து விடு இந்தியா ஒரு வல்லரசு என்று பொய் பேசும் அரசியல் சாத்தான்களே இந்த வேட்ககேடிற்கு நீங்கள் என்ன பதில் கூறபோகிறீர்கள்? இந்தியாவில் பிறந்ததிற்காக வெட்கப்படுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Deva - Sivagangai ,இந்தியா
21-பிப்-201315:13:04 IST Report Abuse
Deva இந்த பேய்களை கொல்லாமல், கொஞ்சுவோமா? எலிக்கும் வண்டுகளுக்கும் கொடுத்து வீணாகும் தானியத்தை கொடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கயவர்களை காப்பாற்ற முயற்சிக்காமல், தூக்கில் போடா வழியை பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
21-பிப்-201315:02:47 IST Report Abuse
MJA Mayuram இவர்களை நாய் பிடிக்கும் கூண்டில் ஏற்றித்தான் கோர்ட்டுக்கு கொண்டுவரவேண்டும்.. நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கே...அரசியல் , சமூக சட்ட மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் இதை தடுக்கலாம்...த்ண்டனைக்குடுப்பதுமட்டுமல்ல ஏன் இது நடைப்பெற்றது என்பதை கண்டுபிடிப்பதும் அரசின் கடமை..
Rate this:
Share this comment
Cancel
BED BUG - doha,கத்தார்
21-பிப்-201314:52:59 IST Report Abuse
BED BUG கொடியது கொடியது வறுமை கொடியது. அதிலும் இளமையில் வறுமை அதைவிட கொடியது. வயிற்று பசிக்காய் வேண்டினர் உணவு. ஆனால் கல்லினும் கொடிய உணர்வு அற்ற காமகொடுரர்களுக்கு ஆயினர் உணவு...மனமற்ற மாக்களே உங்களுக்கும் நேருமடா இதுபோல்...நீங்களும் சாவீர்கலடா துடிக்கத் துடிக்க...எழுத மனம் வரவில்லை..வார்த்தைகள் எழவில்லை
Rate this:
Share this comment
Cancel
Mani Vijay - Singapore,சிங்கப்பூர்
21-பிப்-201314:33:48 IST Report Abuse
Mani Vijay தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் தவறுகள் குறையும்.
Rate this:
Share this comment
Cancel
elavarasan - Manama,பஹ்ரைன்
21-பிப்-201314:18:32 IST Report Abuse
elavarasan இந்தியா வல்லரசு நாடாக போகிறது என்று மார் தட்டிக்கொள்ளும் கேவலமான ஆட்சி நடத்தும் சோனியா,மன்மோகன் மற்றும் முகர்ஜி இவர்களெல்லாம் எங்கே போனார்கள்.பாவம் அப்பாவி மக்கள் நாளுக்கு நாள் பசியால் செத்து மடிகிறார்கள் இதில் கற்பழிப்பு வேறு . என்ன கொடுமை . இங்கு என் உணர்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லையட தமிழா..........
Rate this:
Share this comment
Cancel
mathi - chennai,இந்தியா
21-பிப்-201313:43:00 IST Report Abuse
mathi யாருடா கிடைபாங்கனு அலையறாங்க... பொண்ணுங்க தான் உஷாரா இருக்கனும்....நலத்து கேட்டது சொல்லி குடுக்கணும் பெற்றோர்கள்
Rate this:
Share this comment
Cancel
mathi - chennai,இந்தியா
21-பிப்-201313:40:32 IST Report Abuse
mathi என்ன தான் பசி வந்தாலும் பிச்சை எடுக்கறது தப்புன்னு அந்த தாய் சொல்லி குடுக்கலையே ... தாய் மேல தான் தப்பு உள்ளது..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை