அமிர்தசரஸ்:மூன்று நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், நேற்று அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்றார். நூற்றுக்கணக்கான இந்தியர்களை கொன்று குவித்த, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள, பிரிட்டன் பிரதமர், தனது பயணத்தின் கடைசி நாளான நேற்று, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றார். கோவிலை சுற்றி பார்த்த பின், அருகில் உள்ள, ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்திற்கு சென்றார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் பதிவேட்டில், "இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, பிரிட்டன் வரலாற்றில் மறக்க முடியாத தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இது வெட்கத்திற்குரிய செயல். இந்த சம்பவம் மறக்க முடியாத ஒன்று. உலக அமைதிக்கு, பிரிட்டன் தொடர்ந்து பாடுபடும்' என, குறிப்பிட்டார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்று, 94 ஆண்டு முடிவடைந்த நிலையில், இங்கு வந்து பார்வையிட்ட, முதல் பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், 1997ம் ஆண்டு, இங்கு வந்து பார்வையிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்னதான் வருத்தம் தெரிவித்தாலும் இங்கு ஆங்கிலேயர் நடத்திய கோர தாண்டவம் எங்கள் நெஞ்சிலிருந்து மறையாது. எங்களிடம் கொள்ளையடித்த பொருட்களை எங்களிடமே சேர்ப்பிக்க உங்களால் முடியுமா? அப்படி நடந்தால் நாங்கள் பொருளாதார வல்லரசு ஆகிவிடுவோம். உங்கள் நாடு ஏழை நாடாகிவிடும். சும்மா நீலி கண்ணீர் வடிக்காதீர்கள். உண்மையிலேயே நீங்கள் எங்கள் நாட்டுக்கு உதவவோ, இல்லை முன்னர் செய்த பாவங்களுக்கு பிராயசித்தம் தேடவோ முயற்சி செய்கிறீர்கள் என்றால் உலக அளவில் இந்திய முன்னேற எடுக்கும் அணைத்து முயற்சிகளுக்கும் தடையின்றி உதவுங்கள். வேறு ஒன்றும் வேண்டாம். நாங்கள் உலகிற்கு கொடுத்தது அனைத்தும் விலை மதிப்பில்லாதது.
காலம் கடந்த செயல். பிரிடிஷிடம் இன்னும் எவ்வளவோ இழந்திருக்கிறோம். காலத்தால் ஆற்ற முடியாத காயமது. நமது நாட்டின் செல்வங்களை கொள்ளை அடித்து, கணக்கில் அடங்கா இந்தியர்களை கொன்று குவித்துவிட்டு, காமன்வெல்த் என்ற ஒரு அமைப்பின் [எல்லா காலனி நாடுகளின் செல்வங்களையும் வளங்களையும் கொள்ளையடித்தபிறகு] மூலம் மீண்டும் சுரண்டும் இவர்கள் மன்னிப்பு கேட்கவே தகுதியற்றவர்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.