புதுடில்லி:சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள், நான்கு பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, மேலும், ஆறு வார காலத்திற்கு நீட்டித்து, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது.
தமிழகம் - கர்நாடகா வனப் பகுதியில், சந்தன மரங்களை வெட்டியும், யானைகளை கொன்று தந்தங்களை வெட்டியும், அட்டூழியம் செய்து வந்த, சந்தன கடத்தல் வீரப்பன், 2004ம் ஆண்டு, தர்மபுரி அருகே, அதிரடிப் படை போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டான்.முன்னதாக, 1993ம் ஆண்டு, அவனையும், அவன் கூட்டாளிகளையும் பிடிக்க, காட்டுக்குள் சென்ற அதிரடிப் படை போலீசார் மீது, கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அதிகாரிகள் உட்பட, 22 போலீசார் உடல் சிதறி பலியாகினர்.இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேருக்கு, 2004ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.ஜனாதிபதிக்கு அவர்கள் அனுப்பியிருந்த கருணை மனுக்கள், ஒன்பது ஆண்டு தாமதத்திற்கு பிறகு, இம்மாதம், 13ம் தேதி நிராகரிக்கப்பட்டது. இதையே காரணமாக காட்டி, தங்களது, ஒன்பது ஆண்டு கால சிறை வாசத்தை சுட்டிக்காட்டி, தூக்கு தண்டனை விதிக்க கூடாது; ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, வீரப்பன் கூட்டாளிகள், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்திருந்தனர்.
அந்த வழக்கு, தலைமை நீதிபதி, அல்டமஸ் கபீர் தலைமையில், நீதிபதிகள், ஏ.ஆர்.தவே மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோரை கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரிக்கப்பட்டது. இதில், இம்மாதம், 18ம் தேதி, பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவில், வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் தூக்கு தண்டனை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.நேற்று இந்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி அல்டமஸ் கபீர் பிறப்பித்த உத்தரவில், ""தண்டனை நிறுத்தம் குறித்த இடைக்கால உத்தரவு, மேலும், ஆறு வார காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது,'' என, அறிவித்தார்.
அவர் அளித்த உத்தரவில் மேலும் கூறியுள்ளதாவது:இது போன்ற வழக்குகள், வேறு பெஞ்சுகளில் நடந்து வருகின்றன. அந்த வழக்குகளின் தீர்ப்புகள் வழங்கப்படும் வரை, இந்த வழக்கின் தீர்ப்பையும், ஒத்தி வைப்பது தான் சரியாக இருக்கும் என கருதுகிறோம். எனவே, இந்த வழக்கின் முடிவை, ஆறு மாதத்திற்கு தள்ளி வைக்கிறோம்.ஆகவே, கடந்த, 18ம் தேதி நாங்கள் பிறப்பித்த, தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும் இடைக்கால உத்தரவு தொடர்கிறது.இந்த வழக்கை பொறுத்தவரை, தண்டனை வழங்கப்பட்டவர்களின் உரிமையை, கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற, ஒன்பது ஆண்டு தாமதம் ஆகியுள்ளதால், தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரியுள்ளனர்.இதை தான் நாங்கள் முக்கியமாக கருத்தில் கொண்டுள்ளோம். மேலும், இது போன்ற மேலும் சில வழக்குகள், பிற பெஞ்சுகளிலும் நடந்து வருகின்றன. அந்த வழக்குகளில், சிறப்பு வழக்கறிஞர்களாக, ராம் ஜெத்மலானி மற்றும் டி.ஆர்.அந்தியர்ஜுனா ஆகிய, மூத்த வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர் என்ற தகவலும், எங்களுக்கு கிடைத்தது.தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்ற கால தாமதம் ஆனதால், தங்களின் தண்டனையை குறைக்க கோரி தொடரப்பட்டுள்ள, மேலும், சில வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை.தேவேந்தர் சிங் புல்லார் மற்றும் எம்.என்.தாஸ் ஆகிய தண்டனை கைதிகள் தொடர்பான, இந்த வழக்கு விசாரணை முடிவடையவில்லை என்பதை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஹரேன் ராவல் எங்களுக்கு தெரிவித்தார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக, மூன்று குற்றவாளிகள் குறித்த மரண தண்டனை வழக்கும் முடிவை எட்டவில்லை.இவற்றை கருத்தில் கொண்டு, இந்த நால்வரின் தூக்கு தண்டனையை, ஆறு வார காலத்திற்கு நிறுத்தி வைக்கிறோம். ஏற்கனவே அளித்த தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்த இடைக்கால உத்தரவு தொடர்கிறது.இவ்வாறு, தலைமை நீதிபதி, அல்டமஸ் கபீர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில், வீரப்பன் கூட்டாளிகள் சார்பில், மூத்த வழக்கறிஞர், கோலின் கன்சால்வேஸ் ஆஜரானார். அவர் தன் வாதத்தின் போது, புல்லார் மற்றும் தாஸ் வழக்குகளை முன்வைத்து வாதாடினார். அந்த வழக்குகளின் முடிவுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது போல, இந்த வழக்கும் தள்ளி வைக்கப்பட வேண்டும் என கோரினார்.
தடை நீடிப்பு: உறவினர்கள் மகிழ்ச்சி :
வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை நீடிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்களும், அவரது உறவினர்களும் நிம்மதியடைந்துள்ளனர். வீரப்பன் கூட்டாளிகள் சைமன், பிலவேந்திரன், ஞானபிரகாசம், மீசை மாதையா ஆகியோரின் தூக்கு தண்டனை கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதையடுத்து, அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்து வந்தன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ஆறு வாரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையறிந்த, நான்கு பேரின் குடும்பத்தினரும், உறவினர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்த தகவல் சிறையிலுள்ள நான்கு பேருக்கும் தெரிவிக்கப்பட்டது.
நான்கு பேரையும் சந்தித்த உறவினர்கள் சிலர் கூறுகையில், "ஆறு வாரம் தடை நீடிக்கப்பட்டுள்ள தகவலை கேட்டவுடன், நான்கு பேரின் முகத்தில் லேசான மலர்ச்சி ஏற்பட்டது. தங்கள் தண்டனை ரத்தாகும், என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவர்கள் உயிர் பெரிதென்றால், இவர்களால் கொள்ளப்பட்டவர்லின் உயிர்களும் பெரிதுதானே தூக்கு தண்டனை என்றால், உயிர் போய்விடும் என்பதால்தானே, அதை குறைக்க சொல்கிறார்கள்? அப்படியென்றால், இவர்கள் மற்றவர்களை கொன்றார்களே, அவர்களது உயிரும், உயிர்தானே அதுமட்டும் மனித உரிமை மீறல் இல்லையா? கொலை செஞ்சவனுக்கு தண்டனை கொடுப்பது மட்டும்தான் "மனித உரிமை மீறலா?" கொலை செய்வது மனித உரிமை மீறல் இல்லையா? இவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்து, இவர்களின் உயிரை பறிப்பது "மனித உரிமை மீறல்" என்றால், இவர்கள் செய்ததும் "மனித உரிமை மீறல்"தானே? நாட்டுல எவ்வளவோ, கற்பழிப்பு, கொலை நடந்துகிட்டு தானே இருக்கு? அதெல்லாம் "மனித உரிமை மீறல்" இல்லையா? அப்போ எங்கே போய்விடுகிறார்கள் "மனித உரிமை ஆர்வலர்களாக" தங்களை காட்டிக்கொள்ளும் உத்தமர்கள்? குற்றாவளிகள் தண்டனையிலிருந்து தப்பிபதற்கு துணை போனவனும் குற்றவாளிதான். அப்படியென்றால், முதலில், மனித உரிமை ஆர்வலர்கள் என்று சொல்லி, கிரிமினல் குற்றவாளிகளை காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும், கூட்டத்தினரை முதலில் தூக்கில் போடவேண்டும்.
முன்னால் காங்கிரஸ் தீவிர தொண்டன் மற்றும் இந்நாள் குடியரசு தலைவர் ஆகிய திரு பிரணாப் அவர்கள் காங்கிரஸ் ஊழலை மறைக்க ,நாட்டு மக்களை திசை திருப்ப சிரமேற்கொண்ட முயற்சிகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு. பிரபித்து உள்ளது .அடுத்து அன்னை எந்த காங்கிரஸ் விசுவாசியை வைத்து என்ன அறங்கேட்ட போறாரோ தெரியலை ராம நீதான் அயல் நாட்டு அன்னை இடமிருந்து உன் இந்திய மக்களை காப்பாற்ற வேண்டும்
தாமதிக்கப்பட்ட தண்டனை என்பதால் ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் ... வழங்கப்படும் தீர்ப்பினால் ஏற்ப்படும் பிரச்சினைகளால் வரும்காலங்களில் தண்டனைகள் தாமதிக்கப்படது என்று நம்பலாம். ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்ட மனுவை ( ஒன்பது ஆண்டு காலதாமதமானாலும் ) உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு மீண்டும் தண்டனையை மாற்றி தீர்ப்பு வழங்கப்பட்டால் ஜனாதிபதியின் நிராகரிப்புக்கு ஒரு அர்த்தமும் இருக்காது . மேலும் இந்த மாதிரியாம்ன நடவடிக்கைகளால் வேறு விசயங்களிலும் ஜனாதிபதியின் உத்தரவுகள் உச்சநீதிமன்றன்களால் விசாரிக்க நேரிடும். ஒன்பது ஆண்டுகள் தாமதம் ஆனதை காரணமாக கூறி தீர்ப்பை மாற்றினால் இந்த தாமதத்திற்கு தற்போதைய ஜனாதிபதி பொறுப்பல்லவே. உச்ச நீதிமன்றம் வழங்கும் மரண தண்டனையை ( ஜன்னதிபதிக்கு மனு அழிக்க & பரிசீலிக்க - கால அவகாசத்தையும் சேர்த்து ) ஆறு மாதங்களில் ஜனாதிபதி முடிவு அறிவிக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செயல்ப்ப்டுத்தப்படவேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.