நடந்தாய் வாழி காவிரி... :
1890: ஆங்கிலேயர் ஆட்சியில் மைசூர் சமஸ்தானமாகவும், மெட்ராஸ் ராஜதானியாகவும் இருந்த காலத்தில், காவிரிப் பிரச்னை தலைதூக்கியது.
1892: நதிநீர் பங்கீடு குறித்து முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. சில ஆண்டுகள் கழித்து இந்த
ஒப்பந்தத்தை மைசூர் சமஸ்தானம் நிராகரித்தது.
1910: கர்நாடகாவில் கண்ணம்பாடி அணை கட்ட முடிவானது. இதை தமிழகம் எதிர்த்தது. மேட்டூரில் அணை கட்ட தமிழகம் முடிவு செய்தது.
1924 பிப்.18: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் அப்போதிருந்த சென்னை மாகாணம் மற்றும் மைசூர் அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
1956:
மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்டது. சென்னை மாகாணத்துக்கு
உட்பட்டிருந்த காவிரி உற்பத்தியாகும் இடமான குடகு, கர்நாடகாவுடன் இணைந்தது.
1974 பிப்.18: சென்னை மாகாணம் -மைசூர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்தானது.
1990
ஜூன் 2: காவிரி நதி நீர்ப்பங்கீடு குறித்து விசாரிக்க பிரதமர் வி.பி.சிங்,
சித்ததோஷ் முகர்ஜி தலைமையில் மூவர் நடுவர் நீதி மன்றத்துக்கு
உத்தரவிட்டார்.
1991 ஜூன் 25: ஆண்டுக்கு 205 டி.எம்.சி., (1 டி.எம்.சி.,
= 100 கோடி கன அடி) தண்ணீர் தமிழகத்துக்குத் தரவேண்டும் என்றும்,
காவிரியால் பயன் பெறும் 11.2 லட்சம் ஏக்கரின்அளவை உயர்த்தக் கூடாது என்றும் கர்நாடகாவுக்கு உத்தரவு.
1991 டிச.11: நடுவர் நீதி மன்றத்தின் உத்தரவை ஏற்குமாறு, கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை. இந்த உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதில் 20 பேர் பலி.
1993 ஜூலை: இடைக்கால உத்தரவை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா உண்ணாவிரதம்.
1996 ஆக.,- 1997 ஜன.5: சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரைப்படி தமிழக முதல்வர் கருணாநிதிக்கும்,
கர்நாடக முதல்வர் படேலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை, தீர்வு எட்டப்படாமல் முடிந்தது.
1998 ஜூலை 20: நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தினால் கர்நாடகா - தமிழகம் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள், பிரதமர் வாஜ்பாயிடம் மனு.
1998 ஜூலை 21: ஆக. 21க்குள் தமிழகத்துக்குச் சேர வேண்டிய 205 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
1998 ஆக.8: காவிரி பிரச்னையில் சுமூகத் தீர்வு
காணாவிட்டால், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவு வாபஸ் என ஜெயலலிதா எச்சரிக்கை.
1999 மே 7: 1991-92ல் கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணத்தை மே 15க்குள் வழங்க சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவு.
2002 அக்.,: கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்ததிற்காக கோர்ட்டில் மன்னிப்புக் கோரி, காவிரி நீரை திறந்து விட உத்தரவிட்டார்.
2002 அக்.12: காவிரியில் தண்ணீர்த் திறந்துவிடக் கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம்.
2003 ஜன.13: தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் தண்ணீர் தர கர்நாடகா ஒப்புதல்.
2006 ஆக.3: காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
2007 பிப்.5: காவிரி நடுவர் நீதிமன்றம், இறுதி
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தின் ஒவ்வொரு முநேற்றதிற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை வித்தாக எப்போதும் இருப்பவர் நம் கலைஞர் என்பதை இந்த தீர்ப்பில் இருந்து புலப்படும். 1970,1971ல் நடுவர்மன்றம் அமைக்க சட்டமன்ற தீர்மானம் போட்டு பின்பு அதோடு நின்றுவிட்டதை மீண்டும் தனக்கு ஆட்சி அளித்த மக்களுக்காக 1989ல் உயிர்பித்து அதை செயல் வடிவம் தந்து 1990ல் வி.பி.சிங் ஆட்சி காலத்தில் கருணாநிதியின் வர்புறுத்தனினால் துணிவோடு நடுவர்ம்றம் அமைத்து தந்து அதன் இடைகால தீர்ப்பையும் 1991ல் பெற்று தந்தார் அந்த இடைகால தீர்ப்பை நிறைவேற்ற கோரி அம்மா ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார் என்பதை நாடறியும். இதன் முடிவாக 2007ல் நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பை பெற்று தந்தார். இப்படி அவரின் மூலம் கஷ்ட்டப்பட்டு வாங்கப்பட்ட தீர்ப்பை அம்மா ஆட்சிகாலத்தில் அரசிதழில் வெளிவரவைத்ததிற்கு அம்மாவிற்கு நன்றி.
இதில் தமிழக ஆளும் கட்சி பெருமைபட்டுகொள்ள ஒன்றும் இல்லை... இது முழுக்க முழுக்க அரசியல் காரணம் போலவே தோன்றுகிறது... காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக ராகுல் ஆன பிறகு நடக்கும் மாற்றங்களில் இதுவும் ஓன்று... காங்கிரஸ் ஜெயலலிதாவுக்கு வலை வீசுகிறது, மற்றும் செப்டம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் வரும் என்பதற்கான அறிகுறிகள் தான் இவை... ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு காங்கிரஸ் இந்த பரிசை கொடுத்து அம்மையாரை குளிர்விக்க முயற்சி செய்கிறது என்றே தோனுகிறது............... [ ஆனால் அரசிதழில் வந்து விட்டால் மட்டும் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்து விட முடியாது...கர்நாடகம் , எங்களது 270 tmc தண்ணீரே எங்களிடம் இருப்பு இல்லை என்று சொன்னால் , 470 tmc தமிழகத்துக்கு எங்கிருந்து கொடுக்க முடியும் என்று அடுத்த கேள்வி எழுப்பும். மீண்டும் இது உச்சமன்றதுக்கு போகும்... இப்படி ஓடும் கதை... சட்டபூர்வமாக மத்திய அரசு ஒத்து கொண்டுள்ளது என்பது மட்டும் தான் நேற்று நடந்தது...ஆனால் இனி தமிழ்நாட்டுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு கொண்டு தான் கர்நாடகம் வேறு வேலை பார்க்கும் என்று நாம் நினைத்தால் நாம் முட்டாள்கள்...] .வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா முன்பு உள்ளது மூன்றே சாய்ஸ்.. 1 . மறுபடியும் வெட்கத்தை விட்டு தேமுகவை தாஜா பண்ணி கூட்டணியில் இழுக்க வேண்டும்..இங்கே அதிமுக இழக்க வேண்டியது வெட்கம்.. 2 . தேமுதிக, காங்கிரஸ், திமுக கூட்டணி அமைந்தால் அது அதிமுகவிற்கு மிக பெரிய இழப்பு..அத்தகைய சூழ்நிலையில் அதிமுகவிற்காக வலிய காத்து நிற்கும் காங்கிரசை ஈகோ பாராமால் தனது பக்கம் இழுத்து கொண்டு , அதிமுக, காங்கிரஸ், பாமக கூட்டணி அமைத்தால் , தேமுதிக/திமுக கூட்டணியை கவிழ்துவிடலாம்... இங்கே அதிமுக இழக்க வேண்டியது ஈகோ...3 . இல்லைஎன்றால் திமுக/தேமுதிக/காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் , ஜெயலலிதா தனித்து நிற்கிறேன் பேர்வழி என்று பாமக/மற்றும் கம்யுனிஸ்ட் மதிமுக ஆகியவற்றுடன் மட்டும் கூட்டணி சேரவேண்டும் அல்லது பாஜக/மதிமுக/பாமக வுடன் கூட்டணி சேர வேண்டும்...இங்கு இழக்க வேண்டியிருப்பது சிறுபான்மையினர் ஓட்டுக்கள்... ஆக மொத்தம் அதிமுக வெட்கத்தை விட்டு, தேமுதிகவை கூட்டணியில் சேர்த்து கொள்வார்களா, அல்லது வெட்கத்தை விட்டு காத்து இருக்கும் காங்கிரசை , அதிமுக ஈகோவை விட்டொழித்து கூட்டணி சேர்த்து கொள்வார்களா என்பது காலத்தின் கையில் உள்ளது, என்றாலும் போட்டி கடுமையாக இருப்பதால் ஜெயலலிதா கடைசி சாய்ஸ் ஐ தான் கடைசியில் தேர்ந்தெடுப்பார் என்பது போல தான் தற்போதைய நிகழ்வுகள் நடக்கின்றன....
காவேரியில் வரப்போகும் தண்ணீரை விட டாஸ்மாக்கில் வழங்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆத்தா இதற்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். மேலும் தமிழக மக்கள் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளிவிட்டதை கொண்டாடுவதில் பெருந்தன்மையோடு கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும், நமது சிரிப்பு அடுத்தவருக்கு (கர்நாடகவிற்க்கு) எரிச்சலை உண்டுபன்னக்கூடாது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.