சென்னை:""காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளாதால், தமிழக டெல்டா விவசாயிகளின் எதிர்காலத்திற்கும் உத்தரவாதம் கிடைத்து உள்ளது,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:கடந்த, 1991ம் ஆண்டு, முதல்வராக முதல் முறை, நான் பொறுப்பேற்றதற்கு அடுத்தநாள், காவிரி நடுவர் மன்றம், இடைக்கால தீர்ப்பை வழங்கியது. அப்போதே அதை எதிர்த்த கர்நாடகா, அந்த தீர்ப்பு செயலற்று போக வேண்டும் என்பதற்காக, கர்நாடக சட்டசபையில், ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.
இடைக்கால தீர்ப்பு :
தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடுத்ததையடுத்து, இந்த சட்டமே செல்லாது, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு வெளியானது. அதன் பின், இடைக்கால உத்தரவை, மத்திய அரசிதழில் வெளியிட மத்திய அரசு சுணக்கம் காட்டி வந்தது.இடைக்கால தீர்ப்பை வெளியிட, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்த்து, அதன் அடிப்படையில், 1991ம் ஆண்டு, டிசம்பர் இறுதியில், அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன் பின், பலமுறை, தமிழக அரசு கோர்ட்டிற்கு சென்றுள்ளது. ஆனால், தொடர்ந்து, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. இடைக்கால தீர்ப்பை செயல்படுத்த, மத்திய அரசும் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.
பல்வேறு வழக்குகள் :
இதனால், டெல்டா மாவட்டங்களில், மழை பெய்தபோது விவசாயம் செய்ய முடிந்தது. மற்ற நேரங்களில், கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து, நான்கு அணைகளும் நிரம்பி, தண்ணீரை அங்கு தேக்க முடியாத நிலை ஏற்பட்டதால், வந்த உபரி நீர்தான், தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது.சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகளை தமிழக அரசு தொடுத்ததன் விளைவாகத்தான், காவிரி ஆணையம் மற்றும் கண்காணிப்புக் குழு ஆகியவை அமைக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பின், ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பின், காவிரி ஆணையக் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், அந்த ஆணையம் பிறப்பித்த உத்தரவையும், கர்நாடகம் பின்பற்றவில்லை.தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றதால், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது, 22 ஆண்டுகள் நடத்தப்பட்ட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.கடந்த, 30 ஆண்டு கால அரசியலில், உண்மையாக இன்று தான் நிறைவு ஏற்பட்டுள்ளது. இது எனக்கும், அரசுக்கும், காவிரி டெல்டா மாவட்ட விசாயிகளுக்கும் கிடைத்த வெற்றி.
கர்நாடகா கட்டுப்படும்:
இதன் மூலம், அவர்கள் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி, தண்ணீர் விட்டாக வேண்டும் என்ற கட்டாயம் கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ளது.காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால், அது கர்நாடக அரசை கட்டுப்படுத்தும்; கர்நாடகம், தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் விடுவித்தாக வேண்டும். இனிமேல், நிச்சயம் மழை பெய்யும் போது, நிறைய தண்ணீர் இருக்கும் போது, கர்நாடகம் ஒவ்வொரு ஆண்டும் நீரை விடுவிக்கும்.மழை சரியாக பெய்யாவிட்டால், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி, எப்படி அந்த இடர்ப்பாடு காலத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டுமோ அதையும் செய்வோம்.
மீண்டும் மருத்துவமனை:
தேசிய பசுமை தீர்ப்பாயம் முன்பு, ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள புதிய கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக, தமிழக அரசு மாற்றக் கூடாது என்ற வழக்கு, இருந்தது. அந்த வழக்கிலும், தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது.இனிமேல், ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள புதிய கட்டடத்தில், மருத்துவமனை அமைக்கலாம் என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இன்று (நேற்று) பிற்பகலிலேயே, அந்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலங்கை மீது பொருளாதார தடை:
""பிரபாகரன் மகனாக பிறந்த ஒரே காரணத்திற்காக, பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்கமுடியாத போர்க்குற்றம். இதற்கு இலங்கை அரசு பதில் சொல்லியாக வேண்டும்,'' என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:இலங்கை ராணுவத்தால், 12 வது சிறுவன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது, கடும் கண்டனத்திற்குரியது. பாலச்சந்திரன் எவ்வித குற்றமும் புரியவில்லை. பிரபாகரன் மகனாக பிறந்த ஒரே காரணத்திற்காக, இலங்கை ராணுவம் அந்த குழந்தையை சுட்டுத் தள்ளியுள்ளது.இந்த ஆதாரங்களையும், பல தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களையும் பார்க்கும் போது, தற்போதுள்ள இலங்கை அரசின், தன்மையும், எண்ணமும் புரிகிறது.இதை பார்க்கும் போது, ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சிக் காலத்தில், யூதர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டது நினைவிற்கு வருகிறது. அதைப் போலவே, இலங்கை அரசு தமிழர்களை வேட்டையாடி, அழிக்கிறது.எனவே, மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டு, அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துக்கள் கொண்ட நாடுகளுடன் சேர்ந்து, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்களுக்கு, தண்டனை வழங்க தீர்மானம் இயற்றி, அதை, ஐ.நா., சபையில் கொண்டு வர வேண்டும்.மேலும், இலங்கையின் மீது, வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியான தடைகளை விதிக்க வேண்டும். இலங்கையில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கே செல்ல அனுமதிக்கப்பட்டு, அங்குள்ள சிங்கள பிரஜைகளுக்குள்ள உரிமைகள், தமிழர்களுக்கு கிடைக்கும் வரை, இந்த தடையை நீடிக்க வேண்டும்.பாலச்சந்திரன் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத போர்க் குற்றம். இதற்கு இலங்கை அரசு பதில் சொல்லியாக வேண்டும். இதை நிகழ்த்தியவர்களை, சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி, தக்க தண்டனை வழங்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எங்க ஊர் பக்கம் 'பொங்குன சோற்றுல மாங்கா' அப்படின்னு ஒரு பழமொழி உண்டு. அதாவது சமையற்காரர் சமைத்து அதை இலையில் பரிமாறிவிட்டு போய்விடுவார். கடைசியாக ஒருத்தர் மாங்கா ஊறுகாயை அனைவருக்கும் வைத்துக்கொண்டே வருவார். சாப்பிடும் அன்பர்கள் சாப்பாடு பிரமாதம் என்று அவரைப்பார்த்து சொல்லுவார்கள். அந்த கதை தான் இங்கேயும்...அரிசி கொண்டுவந்தவன் அமைதியாக இருக்கிறான். உமி கொண்டுவந்தவன் ஊதி ஊதி தின்கிறான்...நல்ல பொழப்புடா சாமி...
ஜெயாவின் கடுமையான முயற்சிக்கும், இடைவிடாத கண்காணிப்புக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இந்த தீர்ப்பு. வரலாற்றில் விவரிக்கவேண்டியவை இந்த தீர்ப்பு. முட்டுக்கட்டை கருணா மற்றும் தி.மு.க அல்லகைகளுக்கு ஒரு மாபெரும் பினடைவு & சரியான ஒரு சம்பட்டி அடி, முட்டுக்கட்டை எவ்வளவோ தடுக்க முயன்றும் ஒன்றும் பண்ணமுடியவில்லை, முட்டுக்கட்டை கருணாவிற்கு பின்னடைவுதான்
நன்றிகளை உரித்தாக்குகிறோம் காரணம், 1. டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயரை துடைத்ததற்க்கு, 2. சிறுவன் பாலச்சந்திரன் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததற்கு, 3. இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வர வலியுறுத்தியதற்கு, 4. எதிகட்சிகளின் வாயை அடைத்ததற்கு ( முக்கியமாக கருணா ). மேலும் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் தமிழகத்தில் விலைவாசியை குறைத்து, தடையில்லா மின்சாரம் வழங்கினால் 40/40 உறுதி.
கருணாவின் முட்டுகட்டைகளுக்கு பின்னும், அம்மா உச்சநீதி மன்றம் சென்று ஒரு நல்ல தீர்ப்பை பெற்றார். அம்மாவிற்கு நன்றி. இது நாள் வரை இழுத்தடித்த மத்திய அரசுக்கும் ஒரு நன்றி. நேற்றே அந்த தலைவர் விரிவான அறிக்கை விட்டு விட்டார் வி பி சிங் காலத்தில் இருந்து நடந்ததை ஒரு கதையாக அறிக்கைவிட்டு, தானும் காவிரிக்காக நிறைய ஆணிகளை புடிங்கியதாக அறிக்கை சொல்கிறது. இரண்டாயிரத்து ஏழு ஆம் ஆண்டு நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு கொடுத்து விட்டது, அன்று முதல் இவர்தான் தமிழ்நாட்டின் முதல்வர் மத்தியிலும் பங்குதாரர் அப்போது ஏன் தீர்ப்பை கெஜட்டில் பதிவு செய்யா திரணியற்றவராக இருந்தீர், தமிழன் சாகட்டும் என்ற அவரின் நல்ல எண்ணம்தான் காரணம். இந்த ஒரே ஆண்டில் அம்மா சுமார் ஐந்து வழக்குகள் ஞாயம் கேட்டு போட்டார், நீர் போட்டதுண்ட டெல்லியில் சோனியாவையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் துங்ககூட விடாமல் ஞாயம் பெற்றார், நீர் இவர்களிடம் உமது பிள்ளைகளுக்கு மந்திரி பதவி மட்டும் தான் கேட்டு பெற்றிரே அல்லது காவேரி குறித்து ஒரு அழுத்தமெனும் கொடுத்தது உண்டா. தமிழகம் காவேரி கேட்டு போட்ட வழக்கை கூட உமது மகள் பெங்களூர் செல்வியின் சொத்துகளுக்கு பங்கம் வரக்கூடதூ என்பதிற்காக பக்கத்துக்கு மாநிலத்தோடு சண்டை வேண்டாம் என்று ஒரு அறிக்கை விட்டு வழக்கை வாபஸ் பெற்று தமிழனை கெடுத்ததுதான் உமது சாதனை. போரும், பொய் பிழையாதிரும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.