Strike not affected Tamil nadu | தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை : பஸ், ஆட்டோ இயங்கின ;வங்கி, காப்பீடு முடங்கின| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை : பஸ், ஆட்டோ இயங்கின ;வங்கி, காப்பீடு முடங்கின

Updated : பிப் 22, 2013 | Added : பிப் 20, 2013 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை : பஸ், ஆட்டோ இயங்கின ;வங்கி, காப்பீடு முடங்கின,Strike not affected Tamil nadu

சென்னை: மத்திய தொழிற் சங்கங்கள் நேற்று துவங்கிய, 48 மணி நேர பொது வேலை நிறுத்தத்தால், தமிழகத்தில் இயல்பு வாழ்க்கையில், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ், ஆட்டோ, பள்ளி, கல்லூரி மற்றும் கடைகள் வழக்கம் போல் இயங்கியன.

வங்கி, காப்பீடு, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழக அரசு ஊழியர்கள் சங்கம், மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியன போராட்டத்தில் ஈடுபட்டதால், மாநில அரசு அலுவலகங்களில், ஊழியர்கள் வருகை குறைந்திருந்தது.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல்; வேலைவாய்ப்பை உருவாக்குதல் உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., - ஐ.என்.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., - எல்.பி.எப்., - பி.எம்.எஸ்., உள்ளிட்ட, 11 தொழிற்சங்களின், 48 மணி நேர வேலை நிறுத்தம் நேற்று காலை துவங்கியது.ஆனால், அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்கம், வேலைநிறுத்ததிற்கு ஆதரவு அளிக்காமல், தனித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதனால், பல மாநில அரசு ஊழியர்கள் சங்கங்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.பி.எஸ்.என்.எல்., வங்கி, காப்பீடு, வருமான வரித்துறை, கலால் மற்றும் சுங்க துறை, பாஸ்போர்ட் அலுவலகம், மத்திய கணக்குத் துறை, கப்பல் போக்குவரத்து அலுவலகங்கள், ராஜ்பவன், சாஸ்திரி பவன் ஆகியவற்றில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இவற்றில் பணி புரியும், 90 சதவிகித ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். சென்னை விமான போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும், 250 லோடு மேன்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால், விமானங்களில் பார்சல்கள் ஏற்றப்படவில்லை.இதனால், பார்சல்கள் வெளியூர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. வங்கிகளில் அதிகாரிகள் பெரும்பாலும் வராததால் இயங்கவில்லை. . காசோலைகள் பரிமாற்றம் முற்றிலும் முடங்கியது. இதனால், தமிழகத்தில், 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான, காசோலைகள் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.ஏ.டி.எம்., சேவைகளை நம்பியே பண பரிவர்த்னைகள் நடந்தன அர” பஸ், ஆட்டோக்கள் இயங்கின. இதனால், இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

வேலைநிறுத்தம் குறித்து, தொழிற்சங்க தலைவர் சண்முகம் கூறியதாவது:மாநில அரசின் வருவாய், வளர்ச்சி, வணிக வரி உள்ளிட்ட துறைகளில் 50 சதவிகித பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். அரசு போக்குவரத்துத் துறையில், மொத்தமுள்ள 15,000 பஸ்களில், 5,000 பஸ்கள் இயக்கப்படவில்லை.திருச்சி பெல், சேலம் ஸ்டீல் பிளான்ட், என்.எல்.சி., ஆகிய மத்திய அரசு அலுவலகங்களில், 50 சதவிகிதமும், வங்கி, காப்பீடு, பி.எஸ்.என்.எல்., ஆகிய துறைகளில், 90 சதவிகித தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


2,000 பேர் கைதாகி விடுதலை:

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் தலைமையில், 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், மே தின பூங்காவிலிருந்து ஊர்வலமாக சென்று, சிம்சன் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.இதேபோல், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., சவுந்திரராஜன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.வங்கி ஊழியர்கள், பிராட்வே யூனியன் வங்கி முன்பும், காப்பீட்டு ஊழியலர்கள், அண்ணாசாலை எல்.ஐ.சி., முன்பும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில், 2,000க்கும் மேற்பட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகி, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - Chennai,இந்தியா
21-பிப்-201311:21:27 IST Report Abuse
Hari தேர்தல்லி ல் மத்தியாரசுக்கு மக்கள் எதிர்ப்பை காட்ட தெளிவாக உள்ளார்கள்
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
21-பிப்-201309:42:38 IST Report Abuse
MJA Mayuram பொதுத்துறை பங்குகளை விர்க்ககூடாதாம் இவனுக வெற்றிலை பாக்கை போட்டுகிட்டு வெட்டி கதைப்பேசி நஸ்டத்தில ஓட்டுவானுக்கலாம் அரசாங்கம் அதப்பாத்துகிட்டு வாய மூடிகிட்டு போயிடனுமாம். ரொம்ப நாள் கழிச்சு ஜெயா பாண்டியன் களத்துல இறங்கிருக்கு...போயஸ் ல பர்மிசன் வாங்கிடுச்சா இல்லையான்னு தெரியல
Rate this:
Share this comment
Cancel
Sankar Pillai - kovilpatti,இந்தியா
21-பிப்-201308:38:47 IST Report Abuse
Sankar Pillai எல்லா இந்தித்ய குடிமக்களுக்கும் ஒன்று நினைவு கூற விரும்புகிரியன் எந்த காலத்திலும் தமிழ்நாடு இந்தியாவில் இருபதாக மத்திய அரசு நினைத்து கூட பார்த்தது இல்லை இங்க இயல்பு வாழ்க்கையில் பாதிப்பும் ஏற்பட்டலும் ஏற்படவில்லை என்றாலும் மத்திய அரசு அதனை பொருட்படுத்த போறதும் இல்ல ..அப்புறம் எதுக்கு இந்த செய்தி ...
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
21-பிப்-201305:43:21 IST Report Abuse
Guru நீங்க என்ன செய்தாலும் பிரதமர் வாய் திறக்க மாட்டார்
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
21-பிப்-201303:59:33 IST Report Abuse
Baskaran Kasimani அரசாங்க ஊழியர்களுக்கு இப்பொழுது கொடுக்கும் சம்பளமே அவர்கள் செய்யும் வேலைக்கு மிக அதிகம். வேலைக்கு தகுந்த மாதிரி கூலி இல்லை என்றால் அரசாங்கம் நொடித்துப்போக சந்தர்ப்பம் அதிகம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
Rate this:
Share this comment
குண்டலகேசி - chennai,இந்தியா
21-பிப்-201308:34:26 IST Report Abuse
குண்டலகேசிஹலோ சார்வாள். அத சிங்கப்பூர் சம்பளம் வாங்கிட்டு நீங்க பேச படாது. ஒரு 4 பேரு வேல பாக்குறதுக்கு 40 பேருக்கு billing பண்ற வேல IT-ல நடக்கிறது ஊருக்கே தெரியும். bench-அ தேச்சிட்டு ஐம்பதாயிரம், அறுவதாயிரம் சம்பளம் வாங்குறப்ப இவங்க வாங்குற சம்பளம்லாம் ஒண்ணுமே இல்ல. இந்த பொது வேலை நிறுத்தம் வெறும் சம்பள உயர்வுக்கு மட்டும் இல்லை....
Rate this:
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
21-பிப்-201309:03:42 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் எனக்கு ஒரு சந்தேகம்...நீங்கள் எழுத வந்தது கூலிக்கு தகுந்த மாதிரி வேலை இல்லை என்றால் அரசாங்கம் நொடித்து போக சந்தர்ப்பம் அதிகம் என்றுதானே......
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
21-பிப்-201301:06:13 IST Report Abuse
NavaMayam என்ன தா பாண்டியன் தலைமையில் ஆயிரம் பேரா ... பத்து பார்லிமென்ட் சீட்டுல அம்மாட்ட கேட்பாரு...
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
21-பிப்-201305:43:53 IST Report Abuse
villupuram jeevithanஆமாம், கருணா, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி என்று ஒரு குடும்பத்திலேயே பலர் தேர்தலில் நிற்கவேண்டும், பதவிகளை பெற வேண்டும் என்று அனைத்துக்கும் ஆசைப் படும்போது மற்றவர் ஆசைபட்டால் அது கேலி பொருளாகத் தான் தெரியும் உங்களுக்கு....
Rate this:
Share this comment
meekannan - Chennai,இந்தியா
21-பிப்-201310:42:48 IST Report Abuse
meekannanஎன்ன விழுபுரத்தாரே அப்படின்னா தா.பா.விற்கு அதிமுக கூட்டணியில் 10 சீட்டா?...
Rate this:
Share this comment
Kuwait Tamilan - Salmiya,குவைத்
21-பிப்-201311:57:42 IST Report Abuse
Kuwait Tamilanஇப்படியே கூவிக்கொண்டு இருந்தாலும் உங்களுக்கு எந்த சீட்டும் மம்மி கொடுக்க போவது இல்லை. சசி குடும்பம் தான் தேர்தலில் நிற்க போகிறார்கள். அப்போ நீங்களும் கேலி பொருளாகத் தான் தெரிவீர்கள் மற்றவர்களுக்கு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை