சென்னை:புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, தேசிய பசுமை தீர்ப்பாயம், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருப்தியடைந்த பின், மருத்துவமனை செயல்பட ஒப்புதல் வழங்க வேண்டும் என, தெளிவுபடுத்தியுள்ளது.
அதே நேரத்தில், சுற்றுப்புறச்சூழல் ஆய்வு ஆணையத்தின் நடவடிக்கையை, ரத்து செய்யவும், தீர்ப்பாயம் மறுத்து விட்டது.சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற, கடந்த ஆண்டு, மே, 16ம் தேதி, மாநில அளவிலான சுற்றுப்புறச்சூழல் ஆய்வு ஆணையம், தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது.இந்த அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து, வழக்கறிஞர் வீரமணி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், சென்னை, "பெஞ்ச்' விசாரித்து வந்தது.
நேற்று, இவ்வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி சொக்கலிங்கம், உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர், பிறப்பித்துள்ள உத்தரவு: மருத்துவமனை நடவடிக்கைகள் செயல்படுவதற்கு முன், தேவையான நிபந்தனைகளை பிறப்பிப்பது போதுமானதாக இருக்கும் என, தீர்ப்பாயம் கருதுகிறது. பல்நோக்கு மருத்துவமனை செயல்பட, போதிய பாதுகாப்பு அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.எனவே, கடந்த ஆண்டு, மே, 16ம் தேதி, மாநில அளவிலான சுற்றுப்புறச்சூழல் ஆய்வு ஆணையம் எடுத்த நடவடிக்கையை, ரத்து செய்ய தேவையில்லை. பொது நலன் கருதி, உன்னத நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டுள்ளதால், ரத்து செய்ய வேண்டியதில்லை.ஆணையம் வகுத்துள்ள நிபந்தனைகள் அனைத்தும், மிக, மிக தேவையானவை. மருத்துவமனை இயங்குவதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒப்புதல் அளிக்க வேண்டும். மருத்துவமனை இயங்குவதற்காக அந்த ஒப்புதலைப் பெற, கண்டிப்புடன் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சேர்க்க வேண்டும்.
அதன்படி, தொற்று நோய் பரவாத வகையில், பல்நோக்கு மருத்துவமனையில், சிறப்பு பிரிவுகள் முறையாக அமைக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறும், பல்வேறு மருத்துவக் கழிவுகளை கையாளுவதற்கு உரிய வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.மருத்துவமனை செயல்பாட்டால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான, மத்திய சுகாதார துறையின் வழிகாட்டிநெறிமுறைகள், டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை போன்றவற்றில், மருத்துவமனை வளாக சுகாதார பராமரிப்பு மற்றும் மருத்துவ கழிவுகளை கையாள கடைபிடிக்கப்படும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மருத்துவமனைக்கு அருகில் உள்ள சாலைகளில், வாகன ஒலியை எழுப்பக்கூடாது என்பதை அறிவிக்கும் பலகைகளை வைக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில், ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதபடி, வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்திற்குள், பேட்டரியில் இயங்கும் வாகனங்களை இயக்க வேண்டும்.சுற்றுப்புறச்சூழல் அம்சத்தைப் பொறுத்தவரை, எந்த சமரசமும் இல்லை. பல்நோக்கு மருத்துவமனையில், விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின், அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என திருப்தியடைந்த பின், மருத்துவமனை செயல்படுவதற்கான ஒப்புதலை, வழங்க வேண்டும்.இவ்வாறு, தீர்ப்பாய, "பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்நோக்கு மருத்துவமனைக்கு சுகாதார துறை அதிகாரிகள் மும்முரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அடுத்து, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட, புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை, இயக்குவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை, "பெஞ்ச்' நேற்று, தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து, பல்நோக்கு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவை, மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.பல்நோக்கு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை நிறுவுவதற்கான பணிகள், இன்று துவங்குகின்றன. படிப்படியாக இப்பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில், இம்மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, முழுவீச்சில் இயங்கும் என, சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பசுமைத் தீர்ப்பாய ஆணையின் நகல், பொதுப்பணித் துறையிடம், நேற்று மதியம் வழங்கப்பட்டது. இதனால், ஏற்கனவே தயார் நிலையில் இருந்த, 50க்கும் மேற் பட்ட ஊழியர்கள், கீழ்தளத்தில் சாய்வுத்தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மரியா, கட்டியவன் எவனோ அல்ல. உங்களுக்கு மிகவும் வேண்டியவர். அவரை அவன் இவன் என்ற ஏக வசனத்தில்
நீங்களே திட்டுகிறீர்களே. நீங்கள் கட்டியது திண்ணை கூட அல்ல. சர்கஸ் கூடாரம். அரசுப் பணம். தலைவரின்
சொந்தப்பணம் அல்ல. அன்று காவிரி அன்னைக்கு முச்சந்தியில் சிலை வைத்தார். அந்த அன்னை பின்னாளில் உடைந்து
நடுரோட்டில் புழுதியில் விழுந்து கிடந்தாள். நீங்கள் செய்யும் காரியம் எதுவும் இப்படித்தான் இருக்கும்.
ஜெயாவின் கடுமையான முயற்சிக்கும், இடைவிடாத கண்காணிப்புக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இந்த தீர்ப்பு. வரலாற்றில் விவரிக்க வேண்டியவை இந்த தீர்ப்பு. முட்டுக்கட்டை கருணா மற்றும் தி.மு.க அல்லகைகளுக்கு ஒரு மாபெரும் பின்னடைவு & சரியான ஒரு சம்பட்டி அடி, முட்டுக்கட்டை எவ்வளவோ தடுக்க முயன்றும் ஒன்றும் பண்ணமுடியவில்லை, முட்டுக்கட்டை கருணாவிற்கு பின்னடைவுதான்
மக்களின் வரிபணத்தை தன் வீட்டு பணம் போல் செலவழித்து ஒரு கட்டிடம் கட்டினார் கருணா அவர்கள்,அது முடிக்க படும் முன்பே இரண்டு கோடி ருபாய் அளவுக்கு செலவு செய்து செட் போட்டு திறப்பு விழா நடத்தினார்,நடத்தி முடிச்ச கொஞ்ச மாதத்திற்குள் சுற்றி உள்ள சுவர்களை மெட்ரோ ரயிலுக்காக இடித்து விட்டார்கள்.
முன்பு ஜெயலலிதா அவர்கள் தன் பெயர் சரித்திரத்தில் வர வேண்டும் என்பதற்காக ராணி கல்லூரி இடிக்க பட்டு அங்கு தலைமை செயலகம் அமைக்க படும் என்று கூறினார். அதற்க்கு திமுக முட்டுக்கட்டை போட்டது,கருணா கட்டி எங்கே சரித்திரத்தில் பெயர் எடுக்க ஆசைபட்டார் விடுவாரா இவர் , மறுபடியும் பழையபடியே பழைய தலைமை செயலகத்திற்கு செலவு செய்து அங்கு சென்று விட்டார். இங்கு மீண்டும் ஐம்பது கோடி செலவு செய்து மருதுவமனை ஆக்கிவருகிறார் ,எல்லாம் மக்கள் வரிப்பணம். இவ்வளவு பணம் இருந்து இருந்தால் இந்நேரம் எதாவது இரண்டு அணைகள் கட்டி இருக்கலாம் அல்லது மின்சாரம் தேவைக்கு ஏதாவது செய்து இருக்கலாம்.
இவர்கள் இரண்டு பேருடைய போட்டியால் வீணாக்கபட்டது மக்களின் வரி பணம் தான்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.