E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
காவிரி தண்ணீர் கிடைப்பதில் பாதக அம்சங்களை அரசு நீக்க வேண்டும்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

21 பிப்
2013
00:13
பதிவு செய்த நாள்
பிப் 20,2013 23:53

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ள பாதகமான அம்சங்களை நீக்க, அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என, டெல்டா விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு, ஆண்டுதோறும், 419 டி.எம்.சி., கர்நாடகாவுக்கு, 270 டி.எம்.சி., கேரளாவிற்கு, 30, புதுவைக்கு, 7 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்க வேண்டும்.ஆனால், இந்த, 419 டி.எம்.சி.,யில், மழையினால் கிடைக்கும் நீர் தவிர, 192 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே, கர்நாடகா கொடுக்க வேண்டும். இந்த, 192 டி.எம்.சி., நீரில், புதுச்சேரிக்கு, 7 டி.எம்.சி., கோடையில் சுற்று சூழலுக்கான ஒதுக்கீடு, 10 டி.எம்.சி., கழித்தால், இறுதியாக, 175 டி.எம்.சி., மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கும்.இதுமட்டுமின்றி, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில், தமிழகத்தின் பாசன பரப்புகளும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. நீண்டகால சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, அரசிதழில் வெளியானது தமிழகத்திற்கு வெற்றி. இருந்தாலும், காவிரி நீரில் தமிழகத்திற்கான முழு உரிமைகளையும் பெறுவதற்கு, அதில் உள்ள பாதகமான அம்சங்களையும் நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் அளித்த பேட்டி:

ஆறுபதி கல்யாணம் - காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு: காவிரி நீர் விஷயத்தில், தமிழகத்திற்கான நீதியை பெற்றுதர, மத்திய அரசு தானாக எதுவும் செய்யவில்லை. தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட் மூலமே இதற்கு தீர்வு கண்டுள்ளது.காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில், தமிழகத்தின் பாசன பரப்பளவு, 29.26 லட்சம் ஏக்கர் என்று குறிப்பிடப்பட்ட நிலையில், இறுதி தீர்ப்பில், 24.41 லட்சம் ஏக்கர் என குறைக்கப்பட்டுள்ளது.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, தமிழகத்திற்கு பாதகமாக இருந்தாலும், அந்த தீர்ப்பை, அரசிதழில் சட்டப்பூர்வமாக்கியுள்ளோம். குறைந்தபட்சம் மேட்டூருக்கு, 375 டி.எம்.சி., தண்ணீர் கிடைத்தால் மட்டுமே, காவிரி பிரச்னையில், தமிழகத்திற்கு சாதகமான நிலை ஏற்படும்.கடந்த, 1970ம் ஆண்டு, பாசன பிரச்னையாக மட்டுமே இருந்த காவிரி நதிநீர் பிரச்னை, சென்னை முதல் ராமநாதபுரம் வரை, இப்போது குடிநீர் பிரச்னையாகவும் மாறி உள்ளது.எனவே, இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, மறு ஆய்வு செய்து, அப்பீல் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து, நீதியை நிலைநாட்ட வேண்டும்.

விமலநாதன் - தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்: காவிரியின் ஒட்டுமொத்த நீரோட்டத்தில், நான்கு மாநிலங்களில் இருந்து கிடைக்கும் நீரின் அளவு, 740 டி.எம்.சி., ஆகும். இதில், கடந்த, 1970 வரை தமிழகம், 566 டி.எம்.சி.,யை பாசனத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளது. ஆனால், இறுதி தீர்ப்பில், இது, 419 டி.எம்.சி.,யாக குறைக்கப்பட்டுள்ளது.

ஜீவக்குமார் - காவிரி டெல்டா விவசாயிகள் சங்க பிரதிநிதி: தமிழகத்தின், 120 ஆண்டு கால போராட்டத்திற்கு, முடிவு கிடைத்துள்ளது. இந்த இறுதி தீர்ப்பின்படி, இதுவரை செயல்படாமல் இருந்த காவிரி நடுவர் மன்றம், காவிரி கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்படும். புதிதாக காவிரி மேலாண்மை குழு, காவிரி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்கப்படும். இக்குழுவாவது, நீதியை நிலைநாட்ட முறையாக இயங்க வேண்டும். அதற்கான முன் முயற்சிகளை தமிழக அரசு இப்போதே எடுக்க வேண்டும்.

விருத்தகிரி - இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு: அரசிதழில் இறுதி தீர்ப்பை வெளியிட்டதால் மட்டும், கர்நாடகா அதை ஏற்றுக்கொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் என்று கூற முடியாது. கர்நாடகா ஒரு வேளை தண்ணீர் தந்தாலும், வரும் காலங்களில் அதுபோதாது. எனவே, காவிரியில் நீர் சேமிப்பு முறைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் வீணாவதை தடுக்க, அதிகளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டியது அவசியம்.

- நமது நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (40)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
21-பிப்-201312:57:13 IST Report Abuse
Muthukumaran உண்மையிலேயே மரியா அவர்களுக்கு மானம் ரோஷம் அதிகம் அதனால தான் இதுக்கு அவரு கருத்து எழுத வரல?
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
21-பிப்-201312:10:32 IST Report Abuse
PRAKASH அரசிதழில் வெளியிட்டாலும் தண்ணீர் கிடைக்குமா என்று சிந்திக்க வேண்டும் .. ஜனாதிபதியின் கருணை மனு நிரகரிக்கபடவர்கள் கூட சுப்ரீம் கோர்ட் சென்று தப்பித்து விட்டார்கள் .. கர்நாடகமும் இது போல் மேல்முறையீடு செய்ய முடியுமா ??
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
21-பிப்-201312:08:14 IST Report Abuse
Ravichandran தீர்ப்பின் படி கவேரி நதி நீர் ஆணையம் கண்டிப்பாக அமையும், ஆணையம் ஞாயம் இன்றி நடந்தால் தெரிந்து விடும். சட்ட பாதுகாப்பு மீண்டு உச்சநீதி மன்றம் செல்ல வழிகொடுக்கும். கவலை வேண்டாம்.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
21-பிப்-201310:34:42 IST Report Abuse
JAY JAY கர்நாடகா அரசு விதண்டாவாத அரசு... போக போக அங்கு நடக்கவிருக்கும் கூத்துக்கள் தமிழகத்துக்கு பாதகமாக தான் முடியும்...ஆனால் உச்ச நீதிமன்றம் எக்காலத்திலும் தமிழகத்துக்கு எதிரா எந்த தீர்ப்பும் கூற முடியாது என்பது ஓன்று தான் தமிழகத்துக்கு சாதகமான விஷயம்....
Rate this:
1 members
1 members
67 members
Share this comment
Cancel
BED BUG - doha,கத்தார்
21-பிப்-201309:35:17 IST Report Abuse
BED BUG "கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி எடுக்கிற அவசியம் இருக்காது..இருப்பது எல்லாம் பொதுவா போனால் அடிக்கிற அவசியம் இருக்காது"
Rate this:
0 members
0 members
14 members
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
21-பிப்-201308:34:52 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் விவசாயிகள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்......அரசு இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று சொல்லுவது மட்டுமல்லாமல், இவர்களின் பங்களிப்பையும் செய்ய வேண்டும்......நீரை வீணடிக்காமல், நீர் குறைவாக தேவைப்படும் விவசாய முறைகள், நெல் விதைகள் இவை அனைத்தும் பண்டைய தமிழன் கண்டுபிடித்து வைத்துள்ளான்....இயற்கை விவசாயத்தில் நீரின் தேவை குறைவாகவே இருக்கும்......ரசாயன உரங்களின் அதிகமான பயன்பாட்டால் மண் சூடேறி, தண்ணீரின் தேவை அதிகரித்தது.......இயற்கை விவசாயத்தில், இந்த பக்க விளைவுகள் இல்லை......விவசாயிகளும் தங்களது செயல்பாட்டை சீர்தூக்கி பார்க்க வேண்டிய தருணம்.....இந்த தீர்ப்பின் முழுமையான வெற்றி அரசின் கையில் மட்டும் இல்லை......ஊர் கூடிதான் தேர் இழுக்க முடியும்...
Rate this:
1 members
0 members
33 members
Share this comment
Cancel
ஹரிபாஸ்கர் - திருச்சி,இந்தியா
21-பிப்-201306:50:45 IST Report Abuse
ஹரிபாஸ்கர் அய்யா தமிழக விவசாயிகளே,,, இந்தோநேசியாவின் பின்தான் என்னும் தீவில் வருடம் முழுவதும் சொட்டுநீர் பாசனம் தான் செய்கிறார்கள்,,,, இங்கு நல்ல மழை பெய்தாலும், மலைபாங்கான பகுதி என்பதால் நீர் தேங்குவது இல்லை,,,பெரும்பாலும் கடலில் தான் கலக்கின்றன,,,,ஏன் நாமளும் சொட்டு நீர் பாசனத்திற்கு மாறக்கூடாது???
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Jayaprakash Subramaniam - Chennai,இந்தியா
21-பிப்-201310:44:05 IST Report Abuse
Jayaprakash Subramaniamநாங்க ரெடி சார், அதுக்கு பணம் வேணும். bank -ல சாதாரண விவசாயி பணம் வாங்க முடியாது....
Rate this:
1 members
1 members
5 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
21-பிப்-201305:51:48 IST Report Abuse
villupuram jeevithan முதலில் வீட்டு பட்டா இல்லாமல் இருந்தோம். இப்போ பட்டா கிடைத்ததின் மூலம் அந்த வீட்டின் மீதுள்ள நமது உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. இனி நாம் ஆக்கிரமிப்பாளரை நாம் பகுதியிலிருந்து விரட்ட வேண்டும். அப்படி விரட்டினால் தான் நாம் பயன் பெற முடியும்?
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
21-பிப்-201305:03:22 IST Report Abuse
Samy Chinnathambi அப்பாடா இப்பவாவது உண்மையை போட்டு உடைசிங்களே...ஆக தமிழகத்திற்கு 196 டிஎம்சி தான் கிடைக்கும்..அதுவும் உறுதி கிடையாது...அடுத்த பத்தியில் ஜெயாவை மிக புகழ வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே செய்தி வெளி இடப்பட்டு இருக்கிறது. பரவாயில்லை. இந்த அளவுக்காவது வந்ததற்கு ஜெயாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...
Rate this:
10 members
3 members
14 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
21-பிப்-201301:32:31 IST Report Abuse
NavaMayam ரா பிச்சைகாரனுக்கு கல்யாணத்தை பதிவு பண்ணி வச்சாச்சு ... அவன் பசி போயிடுமா....
Rate this:
135 members
0 members
19 members
Share this comment
sankar - trichy,இந்தியா
21-பிப்-201303:05:46 IST Report Abuse
sankarபிச்சை எடுப்பவன் கூட நாலு வீடு போய் கேட்டதால் சோறு கிடைக்கும் , உங்க தலிவர் மாதிரி படுத்து தூங்கினால் மண்ணு தான் கிடைக்கும் . அவருகென்ன தஞ்சை விவசாயி எக்கேடு கேட்டல் என்ன , ...
Rate this:
7 members
0 members
24 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
21-பிப்-201304:57:33 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅரசிதழ்லே இருந்து தண்ணி கொட்டுவதைப் பாக்கல்லியா ??...
Rate this:
7 members
0 members
17 members
Share this comment
Sankar Pillai - kovilpatti,இந்தியா
21-பிப்-201308:54:49 IST Report Abuse
Sankar Pillaiசென்னை போன்ற பெருநகரத்தில் வசிக்கும் நவ மாயம் போன்ற பிச்சை போடும் முதலாளி களுக்கு பிச்சைகாரனின் கஷ்டம் தெரியாது...
Rate this:
7 members
0 members
11 members
Share this comment
Jayaprakash Subramaniam - Chennai,இந்தியா
21-பிப்-201310:46:40 IST Report Abuse
Jayaprakash Subramaniamஹலோ நீங்க அந்த பிச்சகாரன்கிட்டதான் பிச்சை எடுக்கறீங்க......
Rate this:
2 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.