Advertisement
"ஈவ் - டீசிங்' கும்பலை அடித்து விரட்டிய பெண் மீது வழக்கு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 20,2013,23:58 IST

திருவனந்தபுரம்: "ஈவ் - டீசிங்' செய்தவர்களை, தன் கராத்தே சண்டை திறமையால், விரட்டி அடித்த, கேரள இளம் பெண் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலக பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக, கடந்த, 14ம் தேதி, "ஒன் பில்லியன் ரைசிங்' என்ற நிகழ்ச்சி உலகம் முழுவதும் நடந்தது. "போராடுவோம், நடனமாடுவோம், குரல் கொடுப்போம்' என்ற, குறிக்கோளுடன் நடத்தப்பட்ட நிகழ்ச்சி, உலகம் முழுவதும் நடந்தது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, தன் பெற்றோருடன் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார், கல்லூரி மாணவி அம்ரிதா. காரை மறித்த இளைஞர்கள் சிலர், அவருடன் வம்பு செய்து தகராறு செய்தனர். கேலியும், கிண்டலும், செய்ததால், ஆத்திரமடைந்த அம்ரிதா, அந்த இளைஞர்களை, தன்னந்தனி ஆளாக எதிர்த்து, சண்டையிட்டு விரட்டி அடித்தார். தனியொரு பெண்ணாக அம்ரிதா சாதித்ததை அறிந்த பெண்கள் அமைப்பினர் மற்றும் சமூக அமைப்புகள், அம்ரிதாவுக்கு பாராட்டு தெரிவித்தன.
இந்நிலையில், அம்ரிதாவிடம் அடி வாங்கிய இளைஞர்களில் ஒருவர், அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை முதலில் பெற போலீசார் தயக்கம் காட்டியதும், உள்ளூர் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ள அந்த நபர், அம்ரிதா மீது வழக்கு தொடர, அனுமதி கோரினார்.
நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, அம்ரிதா மீது போலீசார், அடிதடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு, அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "பெண்கள் பாதுகாப்பு என வாய் கிழிய பேசுபவர்கள், ஈவ் - டீசிங் செய்தவர்களை விரட்டி அடித்ததற்கு, வழக்கு பதிவு செய்வதா...' என, கண்டனம் தெரிவித்து உள்ளனர். மாநில பெண்கள் கமிஷன் தலைவர், கே.சி.ரோசாகுட்டி, "அம்ரிதா மீது வழக்கு தொடரப்பட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்' என, போலீசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
r.sundararaman - tiruchi,இந்தியா
21-பிப்-201309:07:09 IST Report Abuse
r.sundararaman எதிர்ப்புமட்டும் போதாது .அநீதிக்கு அனுமதியா ? இதை அனுமதிக்கலாமா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
21-பிப்-201306:53:54 IST Report Abuse
Guru அந்த பெண்ணை பாராட்டி விருது கொடுக்க வேண்டும்..,
Rate this:
0 members
0 members
9 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.