புதுடில்லி: கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட போது, கோர்ட் வளாகத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். டில்லி, ரோகிணி கோர்ட் வளாகத்தில் செயல்படும், கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில், கொலை வழக்கு விசாரணைக்காக, கொலை குற்றவாளியான நவீன் என்பவர், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அழைத்து வரப்பட்டார். அப்போது, திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. நவீன் மார்பில், இரண்டு குண்டுகள் பாய்ந்தன. கீழே சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். கோர்ட் வளாகத்தில், கைதி சுட்டு கொல்லப்பட்டது, வக்கீல்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை சுட்டு கொன்றது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.