Advertisement
கார் மீது யானை விழுந்து 11 பேர் படுகாயம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2013,00:03 IST

வாடானப்பள்ளி: கோவில் நிகழ்ச்சிக்கு சென்ற யானையின் பின்னால் வேகமாக கார் ஒன்று மோதியது. இதில், கார் மீது யானை விழுந்து விபத்துக்கு உள்ளானதில், கார் நசுங்கி அப்பளமானது. விபத்தில், யானை மீதிருந்த இருவர் தூக்கி வீசப்பட்டனர். கேரளாவின், திருச்சூர் அருகே உள்ள கோவில் நிகழ்ச்சிக்காக, "கர்ணன்' என்ற யானையை பாகன்கள், தேசிய நெடுஞ்சாலையில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே, கோழிக்கோட்டில் இருந்து திருச்சூர் நோக்கி வேகமாக வந்த கார், யானையின் பின்புறம் மோதியது. இதனால், யானை மீதிருந்த சுகுமாறன், 21 மற்றும் ராஜேஷ், 26, ஆகியோர் தூக்கி எறியப்பட்டு, படுகாயமடைந்தனர். மேலும், யானை அப்படியே காரின் மேல் விழுந்து, காரின் முன்பகுதியில் அப்படியே உட்கார்ந்து விட்டது. இதனால், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. யானை கோபமடைந்தாலும், யாரையும் தொந்தரவு செய்யாமல், அமைதியாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. அதற்குள் பாகன்கள் ஓடி வந்து, யானையை அமைதிப்படுத்தினர். விபத்தில் காரில் இருந்த, ஒன்பது பேர் படுகாயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விபத்தில், யானையின் இடது கால் எலும்பு நொறுங்கியிருப்பதாக, யானையை பரிசோதித்த கால்நடை டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து, யானையை மரத்தில் கட்டி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
21-பிப்-201306:56:21 IST Report Abuse
Guru பாவம் யானை
Rate this:
0 members
0 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.