எடவா (உபி): உ.பி.,யில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாயினர். சார்நகரை சேர்ந்த, 22 பேர், நேற்று இப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக, படகு மூலம் யமுனை ஆற்றில் சென்றனர். இந்நிலையில், சக்கார் நகர் அருகே படகு சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கியது. இதில், 15 பேர் தண்ணீரில் மூழ்கினர். அவர்கள் கதி என்ன ஆனது என, தெரியவில்லை. இருப்பினும், 7 பேர், நீந்தி பாதுகாப்பாக கரைக்குத் திரும்பினர். விபத்து நடந்த இடத்தில், போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர், தண்ணிரில் மூழ்கியவர்களை தேடி வருகின்றனர். கும்மமேளாவையொட்டி, யமுனை ஆற்றில் அதிகப்படியாக தண்ணீர் திறந்தவிடப்பட்டுள்ளதால் தண்ணீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.