மேட்டுப்பாளையம்:வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கான தங்கும் விடுதி, நேற்று திறக்கப்பட்டது.மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், சுற்றுலாத்துறை பங்களிப்புடன், இந்து அறநிலையத்துறை சார்பில், 58.50 லட்சம் ரூபாய் செலவில், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது. இவ்விடுதியில், இரண்டு வி.ஐ.பி.,க்கள் அறை மற்றும் பத்து சாதாரண அறைகள் கட்டப்பட்டுள்ளது; சாதாரண அறைக்கு நாளொன்றுக்கு ரூ.500 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விடுதியை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, முதல்வர் ஜெயலலிதா, வீடியோ
கான்பரன்சிங்கில் நேற்று திறந்து வைத்தார். வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் வீரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.