| E-paper

 
Advertisement
மத்திய அரசிதழில் காவிரி தீர்ப்பு வெளியீடுபுதுகை, அரியலூர் அ.தி.மு.க., கொண்டாட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுக்கோட்டை: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த அ.தி.மு.க.,வினர், புதுக்கோட்டையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்து விடுவதை உறுதிசெய்யும் வகையில், கடந்த, 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு அளித்தது. கிடப்பில் போடப்பட்ட தீர்ப்பை, அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை வரும், 20ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிடுமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில் காவிரி நடுவர் மன்றத்தில் இறுதி தீர்ப்பு நேற்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதன்மூலம் காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை உறுதி செய்ததற்காக மகிழ்ச்சியடைந்த அ.தி.மு.க.,வினர். நேற்று தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். புதுக்கோட்டை பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை முன்பு நகரச் செயலாளர் பாஸ்கர் தலைமையில் குவிந்த அ.தி.மு.க.,வினர், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.புதிய பஸ்ஸ்டாண்ட் முன்பு அ.தி.மு.க., விவசாய அணி செயலாளர் மாசிலாமணி தலைமையில் குவிந்த அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதுபோன்று நகரின் பல பகுதிகளில் கவுன்சிலர்கள் தியாகராஜன், கண்ணன் ஆகியோர் தலைமையில், அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், லட்டுகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அரியலூர்: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட தகவல் வெளியானதை தொடர்ந்து, அதற்காக நீதிமன்ற மூலம் போராட்டம் நடத்தி, வெற்றி பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அரியலூர் பஸ்ஸ்டாண்ட் எம்.ஜி.ஆர்., சிலை அருகே, அ.தி.மு.க., நகர செயலாளர் கண்ணன் தலைமையிலான அ.தி.மு.க.,வினர், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.நிகழ்ச்சியில் அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் முருகேசன், மாவட்ட வக்கீல் அணி இணை செயலாளர் வக்கீல் ராமகோவிந்தராஜன், வக்கீல் எட்மண்ட் அறிவழகன், ஜெ.பேரவை லோகுராஜ், முத்து, ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அ.தி.மு.க., மாவட்ட மீனவர் அணி செயலாளர் நேஷனல் நாகராஜன் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட வக்கீல் அணி செயலாளர் வெங்கடாஜலபதி, திருமானூர் ஜம்பு உள்ளிட்டோர், அரியலூர் பஸ்ஸ்டாண்ட், தேரடி உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.