DISTRICT NEWS | பிளாஸ்டிக் விற்பனைகடைகளுக்கு அபராதம்| Dinamalar

தமிழ்நாடு

பிளாஸ்டிக் விற்பனைகடைகளுக்கு அபராதம்

Added : பிப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட லளிகம் பஞ்சாயத்து பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்க பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.இயற்கைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றுலும் ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்ட லளிகம் பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, பி.டி.ஓ., சற்குணம், துணை பி.டி.ஓ., வெங்கட், பஞ்சாயத்து தலைவர் பிரதாபன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு, 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இனி விற்பனை செய்தால், இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.""கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில், 40 மைக்ரானுக்கு குறைவான மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக பேப்பர் கவர்களை கடைகளில் பயன்படுத்த வேண்டும். மீறி விற்பனை செய்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என பி.டி.ஓ., சற்குணம் எச்சரித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை