DISTRICT NEWS | அனுமதியில்லா பார்களில் போலீஸார் வசூல்! .அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு| Dinamalar

தமிழ்நாடு

அனுமதியில்லா பார்களில் போலீஸார் வசூல்! .அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு

Added : பிப் 21, 2013
Advertisement

கரூர்: ஹோட்டல்களில் அனுமதியில்லாமல் பார் இயங்குவதை, போலீஸார் "வசூல்' வேட்டையால் கண்டு கொள்ளவதில்லை. இதனால் அரசுக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.கரூர் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள கோவை ரோடு, திண்ணப்பா கார்னர் ஆகிய பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட சைவ மற்றும் அசைவ ஹோட்டல்கள் செயல்படுகின்றன. இதைப்போல சேலம்,மதுரை, கோவை, ஈரோடு நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தாபா ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன. இங்கு போலீஸார் ஆசியோடு மது விற்பனை, மது அருந்த அனுமதித்தல் உள்ளிட்ட, சட்டவிரோத செயல்கள் அதிகரித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள சைவ ஹோட்டல்களில் மது அருந்த பெரும்பாலும் அனுமதி வழங்குவதில்லை. ஆனால் சில அசைவ ஹோட்டல்கள் அனுமதி பெறாத பார்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏசி பார்களில் அமைக்கப்படுவது போல, சிறிய தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில்டேபிள், சேர்கள் போடப்பட்டு, தாராளமாக மது அருந்த அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பு மது வகைகளை, அங்குள்ள சப்ளையர்கள், அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வாங்கி தருகின்றனர். சிக்கன், மட்டன், தந்தூரி வகைகள் மற்றும் விதவிதமான கிரேவி என, அனைத்து வகையான சைடீஸ்களும், குடிமகன்களுக்கு இங்கு கிடைக்கிறது.இங்கு காலை, 11 மணி முதல், இரவு, 12 மணி வரை, மது குடிக்க எந்தவிதமான தடையுமில்லை. மேலும் ஏசி பார்களில் பீர், 190 ரூபாய் முதல், 240 ரூபாய் வரை, "ஹாட்' வகைகள், ஒரு லார்ஜ், 130 ரூபாய் முதல், 160 ரூபாய் வரை விற்பதால், அனுமதியில்லா பார்களை மொய்க்கத் துவங்கியுள்ளனர்.

இதுமட்டுமல்லாது சில ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிடும் இடத்திலேயே, குடிமகன் உட்கார்ந்து மது அருந்தும் அவல நிலை உள்ளது. இதனால் குழந்தைகளுடன் வரும் குடும்பத்தினர், இந்த ஹோட்டல்களில் தெரியாமல் உள்ள வந்து, பின் பதறியடித்துக் கொண்டு வெளியேறும் சம்பவங்கள் நடக்கின்றன.
மது அருந்த அனுமதிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மதுவிலக்கு போலீஸாருக்கு, மாதந்தோறும் "கப்பம்' கட்டி விடுவதால், இதை போலீஸார் கண்டுகொள்வதில்லை என, அங்குள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். கடைநிலை போலீஸார் முதல், மாவட்ட முக்கிய போலீஸ் அதிகாரி வரை, கவனிப்பால், கண்துடைப்புக்கு கூட ரெய்டு நடந்தாக தெரியவில்லை.ஹோட்டல்களில் அனுமதியில்லா பார்கள் செயல்படுவதால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதே நிலைதான் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தாபா ஹோட்டல்களிலும் தொடர்கிறது.இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி கூறியதாவது:பெரும்பாலான ஓட்டல்களின் உரிமையாளர்களாக, அரசியல் கட்சி பிரமுகர்களும், ஆதரவாளர்களும் இருப்பதால், நள்ளிரவு தாண்டியும் எவ்வித பிரச்னையும் இல்லாமல் வியாபாரம் நடந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள, 121 டாஸ்மாக் கடைகளில், 60 பார்கள் மட்டுமே ஏலம் எடுத்து நடத்தி வருகின்றனர். இங்கு பார்கள் நடத்த, இரண்டு லட்சம் ரூபாய் மேல் ஏலத்தொகை அரசுக்கு செலுத்த வேண்டும். மேலும் உரிமம் பெற்று ஹோட்டங்களில் பார் நடத்த, பல லட்சம் ரூபாய் செலவாகும்.இவை எதுவுமில்லாமல் மது அருந்த அனுமதி அளிப்பதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இலக்கை அடையாத மேலாளர்கள், விற்பனையாளர்களை தூக்கியடிக்கும் டாஸ்மாக் நிர்வாகம், அனுமதியில்லாம் செயல்படும் பார்களை பற்றி கவலைப்படுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.மது விற்பனை, மது குடிக்க அனுமதிப்பது, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள், அனுமதியில்லா பார்களில் அரங்கேறி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாகும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை