பவானி: பவானி பழனிபுரம் முதல் வீதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியின்போது இரு கோஷ்டியினர் மோதிக்கொண்டனர்.
பட்டத்தரசி கோவிலில் பூச்சாட்டு விழா நடத்துவது தொடர்பாகவும், கணக்கு தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், கடந்த, 12ம் தேதி அக்கோவில் திருவிழாவில், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.அப்போது ஸ்வாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டு, தாக்கிக்கொண்டனர்.பவானி எஸ்.ஐ., கோமதி மற்றும் போலீஸார் சம்பவ இடம் வந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
சிறிது நேரத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டது தொடர்பாக, பழனிபுரம் பகுதியை சேர்ந்த கோகிலா, 25, சுகுமார், 38, தம்பி, பிரவின்குமார், செல்வம், நவீன், மணி, ஸ்ரீகுமார் உள்பட, 8 பேர் கொண்ட ஒரு தரப்பினர் மீதும், பழனிபுரத்தின் மற்றொரு பகுதியைச் சேர்ந்த கார்த்தி, 19, சித்ரா, ஜெகநாதன், கதிரவன், மதிவாணன், சண்முகன், மகாலிங்கம் உள்பட, 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில் கோவிலுக்கு ஸ்வாமி கும்பிட வந்த பழனிபுரம், வைத்தியநாதன் மனைவி பூங்கொடியை, 42, ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி தாக்கினர். பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில், ஆனந்தன், ஜெகநாதன், சரவணகுமார், கதிரவன் ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்தது.வேறு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.