ப.வேலூர்:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, கடுமையான போராட்டத்துக்கு பின், நேற்று
மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வினர்,
மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும்
கொண்டாடினர்.ப.வேலூர் தற்காலிக டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே, கபிலர்மலை
ஒன்றியச் செயலாளர் சாமிநாதன் தலைமையில், அக்கட்சியினர் பட்டாசு வெடித்து,
இனிப்பு வழங்கி கொண்டாடினர். தொகுதி செயலாளர் ராஜேந்திரன், நகரச்
செயலாளர்கள வேலுசாமி, நாராயணன், செல்வராஜ், ஜெ., பேரவை செயலாளர்
ராஜமாணிக்கம், பாண்டமங்கலம் டவுன் பஞ்சாயத்து சேர்மன் பானுமதி,
துணைத்தலைவர் கருணாநிதி உள்பட பலர் பங்கேற்றனர்.
பரமத்தி பஸ் ஸ்டாப்
அருகே ஒன்றியச் செயலாளர் சுகுமாறன் தலைமையில், கட்சியினர் பட்டாசு
வெடித்து, இனிப்பு வழங்கினர். யூனியன் சேர்மன் சின்னுசாமி, டவுன்
பஞ்சாயத்து துணைத்தலைவர் பிரபாகரன், வார்டு கவுன்சிலர்கள் சுகுமார், மாலதி,
ஹனிபா, பெரியசாமி, சிவக்குமார், நகர, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி
பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே
நடந்த கொண்டாட்டத்துக்கு, குமாரபாளையம் தொகுதி செயலாளர் சுப்ரமணி தலைமை
வகித்தார். நகர செயலாளர் வெள்ளியங்கிரி, ஒன்றியச் செயலாளர் கந்தசாமி,
யூனியன் சேர்மன் செந்தில், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம், ஆலம்பாளையம் பேரூர்
கழக செயலாளர் தனசேகரன், அக்ரஹாரம் பஞ்சாயத்து தலைவர் மாதேஸ்வரன், மீனரவணி
செயலாளர் ஆறுசாமி, நிர்வாகிகள் ஜெயக்கணேஷ், சிங்காரவேல், நகர, ஒன்றிய
நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
திருச்செங்கோடு
பழைய பஸ் ஸ்டாண்ட் முன், நகராட்சி சேர்மன் சரஸ்வதி தலைமையில், கட்சியினர்
பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். யூனியன் சேர்மன்
பாலசுப்ரமணியம், நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், உள்ளாட்சி
பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.