சேலம்:
சேலம் மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவர்களுக்கான அறிவியல்
செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது. இதில், 50,693 மாணவ, மாணவியர்
பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் மெட்ரிக், ஸ்டேட்போர்டு, ஆங்கிலோ
இந்தியன், ஓரியண்டல் உள்ளிட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி
முறை அமல்படுத்தப்பட்ட பின், எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு மாணவர்களுக்கும்
அறிவியல் செய்முறைத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.நடப்பு கல்வியாண்டில்,
ப்ளஸ் 2 தேர்வு மார்ச் 1 துவங்க உள்ளதால், அதற்கு முன், எஸ்.எஸ்.எல்.ஸி.,
வகுப்பு செய்முறைத்தேர்வுகளை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை
உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நேற்று முதல், எஸ்.எஸ்.எல்.ஸி.,
மாணவ, மாணவியருக்கான செய்முறைத்தேர்வு துவங்கியது.
இதில் சேலம் கல்வி
மாவட்டத்தில், 32 ஆயிரத்து, 110 மாணவ, மாணவியரும், சங்ககிரி கல்வி
மாவட்டத்தில், 18 ஆயிரத்து 583 மாணவ, மாணவியரும், சேர்த்து மொத்தம், 50
ஆயிரத்து, 693 பேர் பங்கேற்கின்றனர்.சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலர் சரோஜா,
சேலம் கல்வி மாவட்ட அலுவலர் சுப்ரமணி உள்ளிட்ட உயர் அலுவலர்கள்
செய்முறைத்தேர்வுகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.சேலம் கல்வி
மாவட்டத்தில், 28ம் தேதி வரையும், சங்ககிரி கல்வி மாவட்டத்தில், 27ம் தேதி
வரையும் செய்முறைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் தனித்தேர்வர்களுக்கு
கடைசி நாட்களில், பயிற்சி வழங்கப்பட்ட மையத்திலேயே தேர்வெழுத
அனுமதிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.