சேலம்:
சேலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் பாரில் வக்கீல்கள், ரவுடிகள்
இடையே நடந்த மோதல் தொடர்பாக, மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்
அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடை பாரில், நேற்று முன்தினம் இரவு
வக்கீல் ஜெயச்சந்திரன் உட்பட ஆறு வக்கீல்கள் மது அருந்தினர்.
அவர்கள்
அருகில், சேலம் டவுன் மண்டை பாபு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக
கருதப்படும் பிரபல ரவுடிகள் ஷாஜஹான், மோக்குபாபு, சக்திவேல் ஆகியோர் மது
அருந்தி உள்ளனர். இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது.இந்த வாக்குவாதம் மோதலாக மாறியதால், அவர்கள் ரோட்டுக்கே
வந்து ரகளையில் ஈடுபட்டனர். இதில் வக்கீல் ஜெயச்சந்திரனுக்கு பலத்த காயம்
ஏற்பட்டது. தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து
விசாரணை நடத்தினர்.இந்த மோதலில் ஈடுபட்ட ஷாஜஹான், மோக்கு பாபு, சக்திவேல் ஆகியோரை செவ்வாய்ப்பேட்டை இன்ஸ்பெக்டர் சபிபுல்லா கைது செய்தார்.