Advertisement
சைபர் அட்டாக் - சீனா ராணுவம் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2013,08:04 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 21,2013,08:44 IST

சிட்னி: அண்மை காலமாக அமெரிக்கா மற்றும் பிரிடன் அரசு மற்றும் பிரபல பத்திரிகை அலுவலகங்களில் நடத்தப்பட்ட சைபர் அட்டாக்கிற்கு சீனா ராணுவம் தான் பொறுப்பு என்று மாண்ட்டியன்ட் என்ற அமெரிக்கா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள அலெக்ஸ்அண்டெரவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் மாண்ட்டியன்ட். இந்த நிறுவனம் அண்மை காலம்மாக நடந்த சைபர் அட்டாக் குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சீனாவின் சாங்காய் நகரில் உள்ள யூநிட் நம்பர் 61398 தான் இந்த சைபர் அட்டாக்குகளுக்கு எல்லாம் காரணம் என்று தெரிவித்துள்ளது. இந்த யூநிட் 61398 இல் 'சாங்காய் குரூப்' என்று பெயரிடப்பட்டுள்ள சைபர் அட்டாக் டீம் செயப்பாட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்த யூனிட்டில் உள்ள சைபர் அட்டாக் டீம் கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் 140 சைபர் அட்டாக் நடத்தி உள்ளதாகவும், இந்த சைபர் அட்டாக் மூலம் நூற்றுக்கணக்கான டெராபைட்ஸ் அளவுள்ள தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கட்டிடம் ராணுவ இடம் என்றும் இங்கு அனுமதி இன்றி உள்ளே செல்வதோ புகைப்படம் எடுப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளது என தெரவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த செயல் சீனா ராணுவம் தான் செய்துள்ளது என தெரிவித்துள்ளது. தன்னை பலப்படுத்திக்கொள்ள சீனா அண்மை காலமாக இதுபோன்ற சைபர் அட்டாக் மூலம் எதிரி நாடுகளின் திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த தகவலை திருடி வருவதாக புகார் எழுதுள்ள நிலையில் இந்த மாண்ட்டியன்ட் நிறுவன அறிக்கை மேலும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் உரை நிகழ்த்திய அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா , எதிரிகள் தங்கள் பவர், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வான் வெளி கட்டுப்பாட்டு நிறுவன செயல்பாடுகளை குறிவைத்து தாக்குவதாக தெரவித்திருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை அடியோடு முறுத்து வரும் சீனா , தங்கள் நாடும் சைபர் அட்டாக்கால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சைபர் அட்டாக் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளது.


- நமது செய்தியாளர் சுந்தர்






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
Aravind Kumar - Chennai,இந்தியா
21-பிப்-201321:05:33 IST Report Abuse
Aravind Kumar விரைவில் முன்றாம் உலக போர் வந்தால் நல்லது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
bala ji - Chennai,இந்தியா
21-பிப்-201319:34:26 IST Report Abuse
bala ji சீனர்கள் எப்போதும் கலவாநிகளத்தான் இருப்பார்கள். இவ்வளோ பேசும் அமெரிக்கா சீனர்களையும் சீன பொருட்களையும் ஏன் தங்கள் நாட்டில் அனுமதிக்கிறது?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Raj - Tuticorin,இந்தியா
21-பிப்-201311:16:54 IST Report Abuse
Raj அமெரிக்கா சொல்வது முற்றிலும் உண்மை. மெயில்-ஈத்-களையும் திருடி வணிக நிறுவனங்கள் மூலம் பணத்தையும் திருடி பொருளையும் கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறார்கள். நாங்கள் இழந்த பணம் 9000 டாலர்.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
ganapati sb - coimbatore,இந்தியா
21-பிப்-201310:41:06 IST Report Abuse
ganapati sb சீனாவிற்கும் அமெரிக்கவிற்கும் சில ஆண்டுகளில் போர் மூளும் என பரமஹம்சர் கால பைரவ தர்ஷனத்தில் கூறியுள்ளார் இந்த நிகழ்சிகள் அது நடக்கும் போல் உள்ளது
Rate this:
3 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.